search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wayanad"

    கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா (22) 410-வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கேரள மாநிலத்தில் பழங்குடியின பெண் ஒருவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வயநாடு தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், கேரளாவில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண்ணான ஸ்ரீதன்யாவை இன்று சந்தித்தார்.

    வயநாட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் ஸ்ரீதன்யா குடும்பத்தினரை வரவழைத்த ராகுல் காந்தி, அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.  அப்போது அவர் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டு தெரிவித்தார். #UPSCExam #KeralaTribalWomen #Sreedhanya #RahulGandhi
    தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #LokSabhaElection #Maoist #BoycottElection
    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.

    அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.

    கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection 
    வயநாடு பகுதியில் கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் கலெக்டராவதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். #AdivasiStudent #Wayanad
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கமலம். ஆதிவாசிகளான இவர்களது மகள் தன்யாஸ்ரீ (வயது 26). கரையான் அரித்த ஓலை கூரை வீட்டில் வசித்தபோதும் தன்யாஸ்ரீக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று தீராத தாகம் இருந்தது. கல்வியை நன்கு கற்றுவந்தார். மகளின் ஆர்வத்துக்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

    சிவில் சர்வீஸ் தேர்வு எழுத டெல்லி செல்ல வேண்டும். ஆனால் டெல்லி செல்ல பணம் இல்லை. தன்யாஸ்ரீயின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேர்வு எழுதி விட்டு வந்த பின்னர் கூலிவேலை செய்து வந்தார் தன்யாஸ்ரீ. சமீபத்தில் மின்சாரம் தாக்கி தன்யாஸ்ரீ தூக்கி வீசப்பட்டார். இதில் அவரது இடது கை எலும்பு முறிந்தது.

    இந்தநிலையில் சிவில் சர்வீல் தேர்வு முடிவு வெளியானது. இதில் தன்யாஸ்ரீ 410 ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை. இதனால் ஆதிவாசி மக்கள் தன்யாஸ்ரீயின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். #AdivasiStudent #Wayanad
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். #LSpolls #Congress #RahulGandhi #Wayanad
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என தகவல் வெளியானது.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகியது. #LSpolls #Congress #RahulGandhi #Wayanad 
    ×