search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vote turnout"

    9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக இன்று நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 50.6 சதவீதம் வாக்குகள் பதிவானது. #LSElections2019 #VoterTurnout
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் நான்காவது கட்டமாக 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 691 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் மொத்தம்  12 கோடியே 79 லட்சத்து58 ஆயிரத்து 477 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளனர். 
     
    வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து, பொதுமக்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

    இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 50.6 சதவீதம் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:-

    பீகார் - 44.33%

    ஜம்மு காஷ்மீர்- 9.37%

    ஜார்க்கண்ட்- 57.13%

    மத்திய பிரதேசம்- 57.77%

    மகாராஷ்டிரா- 42.52%

    ஒடிசா- 53.61%

    ராஜஸ்தான்- 54.75%

    உத்தரப்பிரதேசம்- 45.08%

    மேற்கு வங்காளம்- 66.46%  #LSElections2019 #VoterTurnout 
    ×