search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volvo"

    • வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகமானது.
    • புதிய வால்வோ EX90 மாடல் ஏராளமான பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

    வால்வோ நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய EX90 மாடலை அறிமுகம் செய்தது. வால்வோ ஏற்கனவே விற்பனை செய்து வரும் XC90 காருக்கு இணையான எலெக்ட்ரிக் வடிவம் தான் புதிய EX90. இந்த கார் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தோற்றத்தில் புதிய EX90 மாடல் வால்வோ பாரம்பரியத்திலேயே காட்சியளிக்கிறது. இதில் உள்ள லைட்டிங் மற்றும் டிசைன் அம்சங்கள் வால்வோ வழக்கப்படி மிக கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டிசைன் பெற்று இருக்கிறது. இதே பிளாட்பார்மில் எதிர்கால வால்வோ கார்களும் உருவாக்கப்படும்.

    கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் சார்ந்த செங்குத்தான டச் ஸ்கிரீன் செண்டர் கன்சோல் உள்ளது. இது என்விடியா டிரைவ் ஏஐ பிளாட்பார்ம்களான சேவியர் மற்றும் ஒரின் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்பார்ம் முன்பை விட அதிகளவு மேம்பட்டு இருக்கின்றன. இதன் டிரைவர் டிஸ்ப்ளே மெல்லியதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீன் மீது ஏராளமான ரேடார்கள், லிடார்கள், கேமரா மற்றும் பாதுகாப்பு சென்சார்கள் உள்ளன.

    இவை EX90 மாடலை இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பாதுகாப்பான வால்வோ கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இதில் பைலட் அசிஸ்ட், தானியங்கி வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த காரில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 370 கிலோவாட் திறன் கொண்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். புதிய வால்வோ EX90 மாடலில் பை-டைரெக்‌ஷனல் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்ததும், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

    • வால்வோ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    வால்வோ நிறுவனம் தனது EX90 பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வால்வோ நிறுவனம் தனது SPA2 பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கும் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இல்லாத வகையிலான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்திய டீசர்களில் புதிய EX90 மாடலின் இண்டீரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி டேஷ்போர்டில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நேவிகேஷன், மீடியா, போன் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், சீட் வெண்டிலேஷன் என ஏராளமான அம்சங்கள் புது வால்வோ எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் வழங்கப்படுகிறது. இந்த காரில் கூகுள் சார்ந்த யுஎக்ஸ் இண்டர்பேஸ் பயன்படுத்துகிறது. எனினும், இதில் ஏராளமான AI அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் அளவில் சிறிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழி, ரேன்ஜ் விவரங்கள், கியர் நிலை, ADAS தொடர்பான விவரங்களை காண்பிக்கிறது. இதன் ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டு டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்கள் அதிக தரமானது என்பதையும் விட சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.

    தோற்றத்தில் இந்த கார் வட்டம் மற்றும் மெல்லிய ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் சுத்தியல் போன்ற டிஆர்எல்கள் உள்ளன. புதிய வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடலை சமீபரத்தில் அறிமுகம் செய்து இருந்தது.
    • வால்வோ XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்ட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை கர்நாடக மாநிலத்தின் ஹோஸ்கோட் ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது. முதல் XC40 ரிசார்ஜ் மாடல் அந்த ஆலையின் தலைவர் பஸ்கல் கஸ்டர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இவருடன் ஆலையில் பணியாற்றும் குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்திய சந்தையில் ஜூலை 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல், இந்த மாதத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது. டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்வோ XC40 ரிசார்ஜ் முதல் யூனிட் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரிசார்ஜ் இருக்கிறது. இந்த மாடல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது.

    இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் XC60 மற்றும் XC90 என இரு கார்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புதிய வால்வோ கார்களிலும் பெரும்பாலான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

    வால்வோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய XC60 மற்றும் XC90 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் XC40 பேஸ்லிப்ட், 2023 வால்வோ S90 போன்ற மாடல்களையும் வால்வோ அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 வால்வோ XC60 மாடலின் விலை ரூ. 65 லட்சத்து 90 ஆயிரம், என துவங்குகிறது. வால்வோ XC90 மாடல் விலை ரூ. 94 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வால்வோ XC60 மாடலில் முற்றிலும் புது கிரில், ஹெட்லேம்ப், புது மாற்றம் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒஎஸ், டச் ஸ்கிரீன், 1100 வாட் போவர்கள், வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், பானரோமிக் சன்ரூப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வால்வோ XC90 மாடலில் மேம்பட்ட ஏர் பியுரிபையர், PM 2.5 பில்ட்டர், ஆண்ட்ராய்டு சார்ந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட்-இன் கூகுள் சேவைகள், ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 19 ஸ்பீக்கர் போவர் மற்றும் வில்கின்ஸ் ஸ்டீரியோ சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், 360 டிகிரி கேமரா, லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய வால்வோ XC90 மாடலில் 2.0 லிட்டர் என்ஜினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 300 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    வால்வோ XC60 மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோவ்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இறுக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய XC60 மாடல் ஆடி கியூ5, பிஎம்டபிள்யூ X3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • வால்வோ நிறுவனத்தின் XC40 பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த எஸ்யுவி 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    வால்வோ கார்ஸ் இந்தியா பேஸ்லிப்ட் செய்யப்பட்ட XC40 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 43 லட்சம் 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் B4 அல்டிமேட் எனும் பெயரில் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.


    புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் ஆர் டிசைன் செய்யப்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் 5-ஸ்போக் சில்வர், அலாய் வீல்கள், பிளாக் ஸ்கிட் பிளேட்கள், ORVM-கள், ரூப் ரெயில்கள் மற்றும் இண்டகிரேடெட் பாக்ஸ் டெயில் பைப் இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஸ்யுவி க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ காரில் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் XC40 பேஸ்லிப்ட் மற்றும் XC90 பேஸ்லிப்ட் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு கார்கள் அறிமுகமாகும் முன்பே புதிய XC40 பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

    தற்போது லீக் ஆன தகவல்களின் படி புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 12.3 இன்ச் அளவில் இரண்டாம் தலைமுறை டிரைவர் டிஸ்ப்ளே, க்ரிஸ்டல் கியர் நாப், இரண்டு டைப் சி போர்ட்கள், புதிய இண்டீரியர் தீம், ஆக்டிவ் நாய்ஸ் கண்ட்ரோல், ஏர் பியூரிபையர், மல்டி பில்ட்டர், ஆட்டோ டிம்மிங் ORVM-கள், ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.


    புதிய வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் டிரைவ் மோட் ஸ்விட்ச்கள், டூயல் டோன் ஆப்ஷன், ரோட் சைன் விவரங்கள், ஹெட்லேம்ப் ஸ்டேடிக் பெண்டிங் பன்ஷன் உள்ளிட்டவை நீக்கப்படுகிறது. புதிய மாடல் க்ரிஸ்டல் வைட், ஜார்ட் புளூ, பியுஷன் ரெட், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் சேஜ் கிரீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடலில் 2.0 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த கார் வால்வோ XC40 அல்டிமேட் B4 மைல்டு ஹைப்ரிட் எனும் பெயரில் கிடைக்கிறது.

    • வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது XC40 பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய வால்வோ கார் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    வால்வோ XC40 பேஸ்லிப்ட் மாடல் செப்டம்பர் 21 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய பேஸ்லிப்ட் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் வரை அதிக மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. இந்த காரில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது.

    புதிய XC40 மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட பிக்சல் ஹெட்லைட்கள், புதிய வீல் டிசைன் மற்றும் ரிவைஸ்டு பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பரில் பாக் லைட் சரவுண்ட்கள், ரியர் பம்ப்பரில் ரிடிசைன் செய்யப்பட்ட ட்ரிம் எலிமண்ட் உள்ளது. இத்துடன் ஜோர்ட் புளூ, சேஜ் கிரீன், தண்டர் கிரே மற்றும் பிரைட் டஸ்க் என அதிக நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    காரின் டேஷ்போர்டு பகுதியில் மட்டும் புதிதாக மரத்தால் ஆன ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் போர்டிரெயிட் ஸ்டைல் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஒஎஸ், பானரோமிக் சன்ரூப், PM 2.5 கேபின் ஏர் பில்ட்ரேஷன் சிஸ்டம் மற்றும் 13 ஸ்பீக்கர்கள் கொண்ட டிராக் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    மேம்பட்ட வால்வோ XC40 மாடலிலும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இது 13 பிஎஸ் பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டர்போ பெட்ரோல் என்ஜின் 197 பிஎஸ் பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சம் லிட்டருக்கு 15 கிமீ வரையிலான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.

    • வால்வோ இந்தியா நிறுவனம் இரண்டு கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது பேஸ்லிப்ட் மாடல்களின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

    வால்வோ இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வரும் தனது கார்களின் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பேஸ்லிப்ட் மாடல்கள் விலையை வால்வோ நிறுவனம் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் வால்வோ XC40 இம்முறை பெட்ரோல் மட்டுமின்றி மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிகிறது. இதே காரின் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு பெட்ரோல் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலுக்கு மாற்றாக 2023 வேரியண்ட் அறிமுகமாகிறது.


    புதிய பேஸ்லிப்ட் மாடலில் கூர்மையான ஹெட்லைட்கள், ஃபிரேம்லெஸ் கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. XC40 மாடல் மட்டுமின்றி வால்வோ XC90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ XC90 புது வெர்ஷனில் புதிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த கார்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விலை அறிவிக்கப்பட்ட பின் துவங்கும்.

    • வால்வோ கார் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் புது 2023 வால்வோ XC40 மாடலை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    • இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் 2023 வால்வோ XC40 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. மேலும் முன்பதிவு செய்த இரண்டு மாதங்களில் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என வால்வோ இந்தியா தெரிவித்து உள்ளது. அந்த வகையில் 2023 வால்வோ XC40 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    மேம்பட்ட வால்வோ XC40 மாடல் C40 கூப் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிஃபைன்டு ஹெட்லேம்ப்கள், ஃபிரேம்லெஸ் கிரில், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ளதை போன்றே புதிய XC40 மாடலிலும் லெதர் இல்லா இருக்கைகள் வழங்கப்படலாம்.


    இத்துடன் இந்த கார் முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் நிற ஆப்ஷன்கள், அலாய் வீல் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். 2023 வால்வோ XC40 மாடல் அதிக மைலேஜ் வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. வால்வோ நிறுவனத்தின் எதிர்கால திட்டப்படி மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்ய இருக்கிறது.

    முன்னதாக 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன பிராண்டாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருந்தது. இதே காரின் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
    • இந்த காருக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடல் 2022 ஆண்டுக்கு முழுமையாக விற்றுத் தீர்ந்தது என அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக 150 யூனிட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், விற்பனை துவங்கிய இரண்டு மணி நேரத்தில் அனைத்து யூனிட்களும் விற்றுத் தீர்ந்ததாக வால்வோ நிறுவனம் அறிவித்து உள்ளது. யூனிட்கள் விற்றுத் தீர்ந்த போதும், இந்த காருக்கான முன்பதிவுகள் தொடரும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


    டிசம்பர் 2022 இறுதிக்குள் 150 யூனிட்களையும் வினியோகம் செய்ய வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வால்வோ XC40 ரிசார்ஜ் முதல் யூனிட் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்ட முதல் ஆடம்பர எஸ்யுவி மாடலாக வால்வோ XC40 ரிசார்ஜ் இருக்கிறது. இந்த மாடல் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு அருகே உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ XC40 ரிசார்ஜ் மாடல் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. இந்த கார் 408 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.

    • வால்வோ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது.
    • தற்போது இந்த நிறுவனத்தின் மற்றொரு எலெக்ட்ரிக் கார் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த எலெக்ட்ரிக் கார் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன் படி வால்வோ நிறுவனம் C40 மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. வால்வோ C40 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் மாடலின் கூப் வெர்ஷன் ஆகும்.

    மேலும் வால்வோ நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்பட்ட முதல் கார் இது ஆகும். வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் லோ மற்றும் ஸ்லோபிங் ரூஃப்லைன் உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட போஸ்டீரியர், பூட் லிட் ஸ்பாயிலர் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள் உள்ளன. இத்துடன் எல்இடி ஹெட்லைட்கள், டி வடிவ டிஆர்எல்கள், ஸ்போர்ட்ஸ் பம்ப்பர், டூயல் டோன் பெயிண்ட் மற்றும் 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன.


    உள்புறம் புளூ நிற கார்பெட் மற்றும் டோர் பேட் ட்ரிம்கள் உள்ளன. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பில்ட் இன் கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஓவர் தி ஏர் அப்டேட் பெறும் வசதி என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் பவர்டு இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ADAS அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வால்வோ நிறுவனத்தின் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலிலும் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி ஒவ்வொரு ஆக்சில்களில் உள்ள டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டுகிறது. இவை 400 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த மாடலை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்களே ஆகும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 420 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது.

    • இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனகை்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடலின் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 55 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    வெளிப்புறம் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் பிளான்க்டு-அவுட் கிரில், பூட்லிட் மீது ரிசார்ஜ் பேடஜ் கொண்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.


    காரின் உள்புறத்தில் 12 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், மெமரி ஃபன்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.


    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 150 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும். 

    ×