search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivekananda Vidyashram School"

    • பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், காமராஜரின் சிறப்புகளையும், தொண்டுகளையும் எடுத்து கூறினார்.
    • ஆசிரியை அனிபுளோரா காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதில் பள்ளியின் தாளாளர் எஸ்.திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப் துரைராஜ், காமராஜரின் சிறப்புகளையும், தொண்டுகளையும் எடுத்து கூறினார். மேலும் அவரது பிறப்பையும், செயலையும் அர்த்த முள்ளதாக மாற்றியதை போல் மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பிறப்பிற்கான அர்த்தத்தை நிலை நாட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை அனிபுளோரா காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
    • பள்ளியின் துணை முதல்வர் ஜேக்கப்துரை ராஜ் யோகாவின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார்.

    நெல்லை:

    வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

    பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன் தலைமை தாங்கினார். தாளாளர் திருமாறன் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் முருகவேல் சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் ஜேக்கப்துரை ராஜ் யோகாவின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் உடற்கல்வி இயக்குனர் உமாநாத் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

    ×