search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virudhunagar"

    • ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளைத் தலைவர் பிலாவடியான் தலைமை தாங்கினார்.

    கருப்பையா புஷ்பம், சிவயோகம், ராம சீனிவாசன், காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி, ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் சி.ஐ.டி.யு. நகர கன்வீனர் வீர சதானந்தம் போன்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் சரசுவதி நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை ஊழியர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • ஊக்கமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • ஒருங்கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் தலைசிறந்த படைப்பு என்ற தலைப்பில் முதலாமாண்டு இளங்கலை மற்றும் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஊக்க மளிக்கும் விரிவுரை நடைபெற்றது. கல்லூரி தலைவர் திலகவதி, ரவிந்தீரன் மற்றும் கல்லூரி செயலாளர் அருணா அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலையில் முதுகலை முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி ஹஜிரா பானு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரிச்சாட் ராஜ் கலந்து கொண்டு பேசினார். முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பிருந்தா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆளுமை வளர்ச்சி குழு ஒருங் கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.

    • நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டது.

    விருதுநகர்

    விருதுநகரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டிய ராஜன் கூறியதா வது:-

    மத்திய அரசு மின் கட்ட ணத்தை உயர்த்த வில்லை மானியத்தை தான் திரும்ப பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக் கும் தகவல் பரிமாற்றத்தில் உள்ள இடைவெளி காரணமாக பிரச்சினை ஏற்பட் டுள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டது. தமிழக நிதி அமைச்சர் மானியங்களை பெறுவதில் அக்கறை கொண்டு மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும். விருதுநகரில் அம்மா உணவகம் பூட்டப்பட்டுள் ளது. இதனை உடனடியாக திறக்க கோரி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அடை யாளம் காட்டும் வேட்பா ளரை வெற்றி பெறச்செய்வோம்.

    இலங்கை தமிழர் பிரச்சி னையில் அ.தி.மு.க. என்றுமே அரசியல் செய்த தில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை குறிப்பிட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் செய்த சில அரசி யல் கட்சிகளை பற்றி தான்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டிய ராஜன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் மான்ராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமாரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒன்றிய செய லாளர்கள் கே.கே. கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-1 மாணவிகள், வாலிபர் திடீரென மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள வாழ்வாங்கி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பந்தல்கு டியில் உள்ள அரசு பள்ளி யில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதேபோல் அதே வகுப்பறையில் படிக்கும் உடையநாதபுரத்தை சேர்ந்த மாணவியும் வீடு திரும்பாமல் மாயமானார். 2 மாணவிகள் மாயமானது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர்

    சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவரும் அதே பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி(22) ஆகியோர் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சதீஷ்குமார் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி கிராமத்தில் சக்திவிநாயகர், அழகிய மீனாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி கிருதுமால் நதியில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை,புண்யாக வாசனம், கோ, லெட்சுமி பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டது.
    • பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்த ஊழியர்கள். 

     திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் பயணி கள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். இந்த நிழற்கூடத்தை மூதாட்டி ஒருவர் தனது வீடு போல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தார்.

    அவர் அந்த நிழற்கூடத்தில் பஸ் பயணிகள் யாரையும் அமர விடாமலும், அவதூறாக பேசியும் வந்துள்ளார். மேலும் அந்த மூதாட்டி நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மதுபான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பஸ் நிலையம் அருகிலேயே மலை போல் குவித்து வைத்திருந்தார்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவேண்டும் என்று பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி 'மாலைமலர்' நாளிதழில் வெளிவந்தது.

    இதையடுத்து நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் உத்தரவின் பேரில் நரிக்குடி ஊராட்சி செயலர் கவிதா மேற்பார்வையில் ஊராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தின் அருகில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களையும் அங்கிருந்து அகற்றினர்.

    பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஆக்கிரமிப்பையும் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.

    கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • குழந்தைவேலன் காவடி எடுத்தனர்.
    • இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வைகாசி விசா கத்தை குழந்தை வேலன் காவடி நடைபெற்றது. இைத யொட்டி அந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பல்வேறு காவடிகள் எடுத்து முத்தாலம்மன் கோவில், முருகன் கோவில், காய்ச்சல் கார அம்மன் கோவில், மாரி யம்மன் ேகாவில், பத்திர காளி அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து விட்டு இறுதியாக திருத்தங்கல் முருகன் ேகாவிலை சென்ற டைந்தனர்.

    அங்கு மாண வர்கள் கல்வியில் சிறந்து விளங்க சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆறுமுகச்சாமி, கதிரேசன், சமுத்திரப்பாண்டியன் ஆகி யோர் செய்திருந்தனர்.

    • அருப்புக்கோட்டை யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கூட சமையலறை புனரமைப்பு பணிகளையும், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியலறை கட்டுமான பணிகளையும், குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 70 வீடுகள் ரூ.351.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குல்லூர்சந்தை, வண்ணான் ஊரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேற்குவரத்து கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதையும், பாலவநத்தம் ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டுவரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.76 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட பராமரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    செட்டிபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தையும், வடக்கு ஊரணியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும், கோபாலபுரம் ஊராட்சியில் ரூ.12.98 லட்சம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மைய கட்டிட பணிகளையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைந்து முடித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொ றியாளர் இந்துமதி, வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.22 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பிடித்தது.
    • 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 307 மாணவர்கள், 12 ஆயிரத்து 612 மாணவிகள் உட்பட 24 ஆயிரத்து 919 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 662 மாணவர்க ளும், 12 ஆயிரத்து 315 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 94.76 சதவீதம் பேரும் மாணவிகளில் 97.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள னர். சராசரி அடிப்படையில் 96.22 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவர்கள் 97.7 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.79 சதவீதமும், அரசு பள்ளி களில் 93.13 சதவீதமும், நகராட்சி பள்ளிகளில் 96.02 சதவீதமும், பகுதியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 97.45 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 99.27 சதவீத மும், சுயநிதி பள்ளிகளில் (மாநில பாடத்திட்டம்) 98.47 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.

    ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

     ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ், கிழக்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மேற்கு வட்டார தலைவர் கணேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, பொன்.சக்திமோகன், சங்குத்துரை,ராஜ்மோகன், கவுன்சிலர்கள் சங்கர்கணேஷ், புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×