search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village awareness"

    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் காவல் துறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "காவலன் ஆப்ஸ்" செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்.

    விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறையில் "காவலன் ஆப்ஸ்"எனும் செயலி தற்போது புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்து வரும் போது அதை தொட்டால் 20 நிமிடத்தில் சென்னை காவல் துறைக்கு தகவல் செல்லும்.  பின்பு எந்த பகுதியில் இருந்து சமிக்கை வந்துள்ளது என்பதை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிப்பார்கள்.  உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு அளிப்பார்கள். காலத்துக்கு ஏற்ப பெண்கள் இதை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இச்செயலி செயல்பட செல்போனில் முக்கிய இன்டர்நெட் கனெக்க்ஷன் தேவை. மேலும் கிராமங்களில் ஏதேனும் புதிய நபர்கள் வந்தாலோ, சந்தேகப்படும் நபர்கள் சுற்றித்திரிந்தாலோ இதுகுறித்து பொதுமக்களே  விசாரித்து, அவர்கள் கூறும் பதில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தினால் உடனடியாக அருகிலுள்ளகாவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது பையூரில் பேருந்துகள் சரியாக நின்று செல்வதில்லை.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பையூர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். இக்கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்ரி, ஜெயபால் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×