search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Shankar"

    ஐபிஎல் 2018 சீசன் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #IPL2018
    தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 13 போட்டியில் பங்கேற்று 1 அரைசதத்துடன் 212 ரன்கள் சேர்த்தார். ஒரேயொரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடாத விஜய் சங்கர், அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    2014 தொடரில் அறிமுகமான விஜய் சங்கர் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அதன்பின் கடந்த வருடம் நான்கு போட்டியில் விளையாடினார். தற்போதுதான் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முழுவதும் விளையாடியுள்ளார்.



    இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர்தான் எனக்கு திருப்புமுனை என்று விஜய் சங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘நான் முதல் மூன்று நான்கு போட்டிகளில் போதிய அளவு ரன் அடிக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதன்பிறகு, நான் என்னுடைய போட்டிக்கு தயாராகும் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்.

    புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த போட்டியில் 31 பந்தில் 54 ரன்கள் குவித்தது எனக்குள்ளே மிகப்பெரிய அளவில் உறுதியை கொடுத்தது. அணியில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடிக்க சில அபாரமான ஆட்டங்கள் தேவை’’ என்றார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvMI
    ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.



    அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 44 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    ×