என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vignesh Shivan"
- நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார்.
- நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது.
தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகி 'சந்திரமுகி' படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி மொழிகளில் நடித்து திரைத்துறையில் முன்னணியில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக்குவித்தது மட்டுமில்லாமல் இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது. நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.
'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது.
இந்நிலையில், 'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா தற்பொழுது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. ரசிகர்கள் இவரை அன்பாக லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.
ஜவான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தி திரையுலகில் காலடி தடத்தை பதித்தார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் உள்ளன.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுற்றுலா , பண்டிகை நாட்களில் மற்றும் ரோமேண்டிக் டேட் செல்லும் போது அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வர்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவரது வாழ்க்கை குறித்து ஆவண படத்தை நெட்பிளிக்ஸ் உருவாக்கியுள்ளது. இதற்கு நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் என தலைப்பிட்டுள்ளனர். இந்த ஆவண திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. திரைப்படம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நயன்தாரா தற்பொழுது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார்.
- நயன்தாரா விஜயதசமி கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி விஜயதசமி கொண்டாடியுள்ளனர். இதையொட்டி, நயன்தாரா தனது எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர் தனது பதிவில் இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Happy Vijayadashami Everyone? pic.twitter.com/pQrMFavo0u
— Nayanthara✨ (@NayantharaU) October 12, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- காதில் ரத்தம் வரும்போது விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலை நயனதாரா பாடுகிறார்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்வது மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வகையில் நயன்தாரா தற்போது தான் காது குத்திக் கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், காது குத்தும் கடைக்குச் செல்லும் நயன், அங்கு தனக்குப் பிடித்த தோடை தேர்வு செய்கின்றார். அதன் பின்னர் அங்கிருக்கும் ஊழியர்கள், நயன்தாராவுக்கு அந்த தோடை குத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில், நயனுக்கு காதில் இருந்து ரத்தம் வருகின்றது. அப்போது, விக்னேஷ் சிவன் எழுதிய ரத்தமாறே பாடலைப் பாடுகிறார்
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
- இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
அண்மையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது 2-வது திருமண நாளை வெளிநாடான ஹாங்காங்கில் கொண்டாடினர்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கு விக்கி மற்றும் நயன் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக வெளியே செல்லும் வீடியோ. குழந்தைகளுடன் செலவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேப்போல் நேற்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி அவர்களது இரு மகன்களுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டன்ர்.
இந்நிலையில் இன்று மற்றொரு வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு குழந்தைகளும் ஒரு ரூமின் கதவை திறக்க முயற்சி செய்கின்றனர். அதை அவர்களால் திறக்க முடியாதலால். தன்னுடைய தந்தையான விக்கியை "விக்கி அப்பா, விக்கி அப்பா" என்ற மழலை குரலில் அழைப்பது மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
Wikki அப்பா கதவை Open பண்ணுங்க ! ?❤️.@VigneshShivN #VigneshShivan #Nayanthara #WikkiNayan #UyirUlag #SSMusic pic.twitter.com/tCyxOQE6Bg
— SS Music (@SSMusicTweet) September 8, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்னேஷ் சிவன் `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர்
'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து அமர்ந்து இருக்கிறார்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நயன்தாரா இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் இருந்து அவரின் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அன்ஃபொலோ செய்ததாக செய்திகள் பரவியது
- நேற்று நள்ளிரவு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்
நேற்று நயன்தாரா இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் இருந்து அவரின் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அன்ஃபொலோ செய்ததாக செய்திகள் பரவியது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே எதாவது சண்டையா, இல்லை அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா என்று சமூக ஊடகங்களில் ஏதேதோ வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற வருடம் அவர்களின் திருமண நாளில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர்கள் மிகவும் இணக்கமாக காதலில் உருகி இருக்கும்படியான காட்சிகள் இருந்தது.
ஃப்லூட் நவீன் "மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே"என்ற பாடலுக்கு இசையமைக்க, அதற்கு ஏற்ப நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து ரசித்தபடி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளன.
- தனது மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிட்டபடி நயன்தாரா பயணம் செய்து வருகிறார்.
சரத்குமாருடன் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றவர் நயன்தாரா.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளன.
என்னதான் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வந்தாலும் குழந்தைகளுக்கு அழகான அம்மாவாக இருந்து வருகிறார் நயன்தாரா.
படப்பிடிப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அம்மாவாக பெரும்பாலும் குழந்தைகளை அழைத்து செல்கிறார்.
அந்த வகையில் இரு குழந்தைகளுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காரில் செல்வதை தனது வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தனது மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிட்டபடி நயன்தாரா பயணம் செய்து வருகிறார்.
இந்த வீடியோ காட்சிகளுக்கு ரசிகர்கள் வரவேற்று கருத்து பதிவிட்டுள்ளனர்.
- இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
- இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த அன்புக்கு மிக்க நன்றிகள் விக்னேஷ் சிவர் சார், லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் எனது முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன். எனது பெர்ஃபார்மன்சில் நீங்கள் எதிர்பார்த்தவைகளை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆவலாக எதிர்நோக்குகிறேன். காட்சிக்கு நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கொடுத்திருக்கும் தோற்றம் வாவ் சொல்ல வைக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
Thank you so much for this love Director @VigneshShivN sir ????? #LoveInsurenceCompany 1st day shoot (of mine in LIC) I enjoyed like anything ?????the nuances U demanded in my performance while shooting I really loved it ??? looking forward for further shooting… pic.twitter.com/r0cEWCi8HK
— S J Suryah (@iam_SJSuryah) February 11, 2024
- இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தின் படப்பிடிப்பு தள ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஷோஃபா விற்கும் வீடியோ மூலம் சமூக வலைதத்தில் பிரபலமான 'Sofa Boy' சிறுவன் முகமது ரசூல் படக்குழுவினரை விற்பது போன்று காமெடி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோவில் 'எல்.ஐ.சி' டீம் நியூ பப்ளிசிட்டி மேனேஜர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் 'எல்.ஐ.சி' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'எல்.ஐ.சி' படத்தில் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் கோயம்புத்தூரில் நடைபெற்ற நான்கு நாட்கள் படப்பிடிப்பு இவர் கலந்து கொண்டதாகவும் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
- நயன்தாரா நடிகையாகவும் தொழிலதிபராகவும் உள்ளார்.
- இவர் '9 ஸ்கின்', ’ஃபெமி 9’ நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
நடிகை நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் '9 ஸ்கின்' (9 Skin) என்ற அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, 'ஃபெமி 9' (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, "மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்பு எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம். 'ஃபெமி 9' நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்