search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veyilukanthamman"

    • வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவி லில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு அதிகாலை 4.30மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    சிறப்பு பூஜை

    தொடர்ந்து சிறப்பு யாகபூஜை, கும்பபூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குட்டி ராஜன் வல்லவராயர் அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றிவைத்தார்.

    பின்னர் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்பு கொடி மரம் தர்ப்பை புல், மலர்கள், பரிவட்டங்களால் அலங்கரிக்கப்பட்டு சோடச தீபாராதனை நடந்தது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடராஜன் வல்லவராயர், சாம்ராஜ் முருகன், சிவக்குமார், மணி,செந்தூர் சதிஷ், ராஜேஷ், நாகராஜன், திருப்பணி கட்டளைதாரர் அய்யப்பன் அய்யர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    திருவிழா இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் காலை மற்றும் இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். இரவு கோவிலில் பக்திச் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

    ×