search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicle inspector arrested"

    • திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சத்தியமூர்த்தி.
    • சண்முகத்திடம் ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் கொடுக்க கூறினார்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரிடம் துறையூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சண்முகம் என்பவர் மூன்று நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் எடுப்பது தொடர்பாக அணுகியுள்ளார்.

    அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி நபர் ஒன்றுக்கு ரூ. 2000 விதம், 3 நபர்களுக்கு 6000 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து 2நாட்கள் கழித்து வருவதாக கூறிய சண்முகம், இச்சம்பவம் தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இப்புகாரியின் பேரில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் சண்முகத்திடம் ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் கொடுக்க கூறினார். இதனையடுத்து நேற்று அலுவலகம் சென்ற சண்முகம் அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி யிடம் பணத்தை கொடுத்தார்.

    ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை சத்தியமூர்த்தி வாங்கிய போது சுற்றி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அலுவலகத்தில் லஞ்சப் பணம் ஏதேனும் ஒழித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.

    துறையூரில் லஞ்சம் பெற்ற புகாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×