search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varummun kappaom scheme"

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
    • முகாமில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    சிவகிரி:

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஜவகர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அலிசா வரவேற்று பேசினார்.

    முகாமில் பேரூராட்சி துணைத்தலைவர் லைலாபானு, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், வார்டு கவுன்சிலர் மாரிமுத்து, பேரூராட்சி அலுவலகர்கள், ஊழியர்கள், மருத்துவ அலுவலர்கள் அனுசியா, மயில்வாகனன் மற்றும் ஏனைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் டெங்கு விழிப்புணர்வு பற்றிய கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

    மாவட்ட நல கல்வியாளர் மாரிமுத்துசாமி தலைமையில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    முகாம் ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். இம்முகாமில் 955 நபர்கள் பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    ×