search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varadaraja perumal temple"

    • உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
    • சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க உள்ளது

    பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் மூலவர் சிலை சேதமடைந்துள்ளது.

    இதனால் உற்சவர் சிலையையே, மூலவர் சிலையாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் ஐம்பொன் சிலைகளும், கோவில் சுவர்களில் பழங்கால கல்வெட்டுகளும் உள்ளன. பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கோவிலை அளவீடு செய்யும் பணி நடந்தது.

    இதைத்தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக ஆயத்த பணிகளை கோவில் செயல் அலுவலர் கனகலட்சுமி, இந்துசமய அறநிலைத்துறை உதவிபொறியாளர் சந்தானமாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ரத்தினவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில், அழகு கொஞ்சும் சிறிய கிராமம் தளிஞ்சி. இதன் பிரதான சாலையை ஒட்டி, அகன்று பரந்துள்ள நீரோடை உள்ளது. அதைக் கடந்து வலது புறம் திரும்பினால் சிவபெருமான் ஆலயம் இருக்கிறது. அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கும் இந்த சிவலாயத்தைக் கடந்ததும், ஒரு பெருமாள் கோவில் உள்ளது.

    ‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ என அழைக்கப்படும் இந்தக் கோவில், மிகவும் பழமையானது. இருப்பினும் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட இந்த ஆலயம் அழகாகவே விளங்குகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இறைவன் சன்னிதியை தரிசித்தபடி கருடாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    முன் மண்டப வாசலில் இடதுபுறம் கிருஷ்ணரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் விஷ்ணு துர்க்கையின் திருமேனி உள்ளது. கருவறையில் வரதராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் இறைவன், தனது வலது கீழ் கரத்தில் அபய முத்திரையுடன் சேவை சாதிக்கிறார். மேலும் தனது இடது கீழ் கரத்தை இடையில் ஊன்றியபடி காட்சி தருகிறார். பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவியும், பூ தேவியும் உள்ளனர்.

    இங்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடை பெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி 30 நாட்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு உற்சவ மூர்த்தி இல்லை என்பதால், சுவாமி வீதி உலா வருவம் நிகழ்வு இங்கு கிடையாது.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள்

    தங்கள் வீட்டில் திருமண வயதை நெருங்கியும், திருமணம் ஆகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டி, இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் வேண்டிக்கொண்ட சில வாரங்களிலேயே திருமணம் கை கூடிவிடுகிறது. அதனால் மகிழ்ச்சியும் பெற்றோர், பிள்ளைகளின் திருமணத்தை இறைவனின் சன்னிதியில் வைத்தே நடத்தி விடுகின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், தேங்காய் துருவல் நைவேத்தியம் செய்து, அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர புளியோதரை, பொங்கல், தயிர்சாதம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைப்பது உண்டு.

    இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். வியாழக்கிழமை தோறும் வெண்ணெய் சாத்தப்பட்டு, சிரித்த கோலத்தில் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

    தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். தங்களின் கடன் தொல்லை தீர வேண்டும். பயிர் செழித்து வளர வேண்டும் என்று பக்தர்கள் வைக்கும் பலவிதமான கோரிக்கைகளை, இத்தல ஆஞ்சநேயர் தவறாமல் நிறைவேற்றித் தருவதாக, பக்தர்கள் அனைவரும் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

    தங்களது கோரிக்கை நிறைவேறியதும் ஆலயம் வரும் பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டியும், வடை மாலை சாத்தியும் தங்கள் நன்றியை செலுத்திவிடுகின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தளிஞ்சி என்ற இந்த தலம்.
    108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் வேடன் வேடத்தில் செவிலிமேட்டுக்கு புறப்பட்டு வரும் விழா நடந்தது.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலின் தல புராணத்தின்படி, ராமானுஜர் வழிதவறி காஞ்சீபுரம் செவிலிமேடு காட்டுப்பகுதியை வந்தடைகிறார். அப்போது அவருக்கு வேடன் ஒருவர் அடைக்கலம் தந்து, தினசரி பூஜைகளை செய்வதற்கு உதவுகிறார். பிறகு வேடன் வேடத்தில் உதவியது வரதராஜ பெருமாள்தான் என்பதை ராமானுஜர் உணர்கிறார். இதன் நினைவாக, அந்த இடத்தில் ராமானுஜருக்கு தனிக்கோவில் அமைக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வையொட்டி ஆண்டுதோறும் மார்கழி மாதம் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் வேடன் வேடத்தில் செவிலிமேட்டுக்கு புறப்பட்டு வரும் விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி செவிலிமேட்டில் அமைந்திருக்கும் ராமானுஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். ராமானுஜர் கோவிலை அடைந்த பெருமாளுக்கு ராமானுஜர் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து, வேடர் வேடத்தில் பவனி வந்த வரதராஜ பெருமாளும், ராமானுஜரும், ராமானுஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு தேசிகர் மண்டபத்தை அடைந்தனர். பின்னர் விளக்கொளி கோவில் தெரு, சின்ன காஞ்சீபுரம் சாலை வழியாக வரதராஜர் கோவில் மாட வீதியை வந்தடைந்தனர். பின்னர் பெருமாளும், ராமானுஜரும் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு மண்டகப்படி திருவிழா நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாள் மற்றும் ராமானுஜர் அவரவர் சன்னதிக்கு சென்றனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலாயும் நடைபெற்று வரு கிறது.

    கடந்த 24-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 26-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. நேற்று இரவு பெருமாள், திருமங்கை ஆழ்வார் குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் வேடுபரி உற்சவம் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடை பெற்றது.

    தேரோட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் சுகுமாறன் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீராமானுஜர்சாரியார் உள்ளிட்ட திரளான பக்தர் கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    1-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2-ந் தேதி விடை யாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரி ராமதாஸ் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

    வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
    வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது. கடந்த 22-ந்தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலையில் ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது.

    தொடர்ந்து 24-ந்தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் சுகுமாறன், தீப்பாய்ந்தான், அரசு செயலர் சுந்தரவடிவேலு, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் ஆகியோர் முன்னிலையில் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து ஜூலை 1-ந்தேதி வரை ஊஞ்சல் உற்சவமும், 2-ந்தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    ×