search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaikasi pattam"

    • மஞ்சள், மரவள்ளி, சேனைக்கிழங்கு சாகுபடி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
    • வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை நீண்ட நாட்கள் இருப்பு வைக்கலாம்.

    தாராபுரம் :

    வைகாசி பட்டத்தில் பரவலாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சாகுபடி பரப்பு குறையும். எனவே இந்த சீசனில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றிற்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஓராண்டு பயிர்களான மஞ்சள், மரவள்ளி, சேனைக்கிழங்கு போன்றவை சாகுபடி செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:- வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை நீண்ட நாட்கள் இருப்பு வைக்கலாம். வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவற்றை விற்பனை செய்துலாபம் ஈட்ட முடியும். தற்பொழுது பார் எடுத்தல், பாத்தி கட்டுதல் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    அக்னி வெயில் முடிந்ததும், நடவுப் பணிகளை துவக்க தயாராகி வருகிறோம். அடுத்த வாரத்தில் இருந்து சாகுபடி பணிகள் வேகம் எடுக்கும். மஞ்சள், சேனைக்கிழங்கு, வைகாசி பட்டத்தில் தான் சாகுபடி செய்ய முடியும்.வெயில், மழை என இயற்கை சீற்றங்களும், குறைவாகவே இருக்கும். இதனால் வைகாசி பட்டம் ஏமாற்றம் தராது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது.
    • கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். கடந்த இரு ஆண்டாக ஊரடங்கால்பெரும்பாலான விவசாயிகள் வைகாசிப்பட்டத்தில்சின்ன வெங்காயம் சாகுபடியில் கவனம் செலுத்தினர். பலரும் பட்டறை அமைத்து, இருப்பு வைத்திருந்தனர். தேவைக்கும் அதிகமாக சின்ன வெங்காயம் சந்தைக்கு வந்ததால் விலை, கடும் வீழ்ச்சியடைந்தது. அதன் எதிரொலிதற்போது வரை நீடிக்கிறது.

    வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு கிலோ ரூ.35 வரை விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது. வெளிச்சந்தையில் கிலோ 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. ஆனால் தற்போது, 15 ரூபாய்க்கும் குறைவாகவே மொத்த வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல்விதை வெங்காய விலையும் கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது.

    இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுசாமி கூறுகையில், இம்முறை சின்ன வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உர விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிக அளவு விவசாயிகள் நடப்பாண்டு வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபடவில்லை. ஏறத்தாழ 50 சதவீதம் அளவுக்கு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் விற்பனை வணிகத்துறையினர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் சின்ன வெங்காயத்தை சந்தைப்படுத்த கர்நாடக வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். எனவேசின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புக்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.

    ×