search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vadapathirakali"

    • தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா
    • கண்கவர் வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வடபத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா இன்று செவ்வாய்க்கிழமை, நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு நையாண்டி மேளத்துடன் தீர்த்தக்கரை சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டது.


    பின்னர் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு முறமண் ஆண்டிச்சாமி, முடிவைதானேந்தல் மாயகிருஷ்ணன் குழுவினரின் நையாண்டி மேளத்துடன்,வாடிப்பட்டி பழனிச்சாமி தம்பா மேளம்,மார்த்தாண்டம் கவிதா குழுவினரின் செண்டா மேளத்துடன் அம்பாளுக்கு ஓமகுண்ட பூஜையும்,சிறப்பு அபிஷேகமும் ,விசேஷ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    சிறப்பு பூஜைகளை ஸ்பிக் நகர் சதாசிவ பட்டர் நடத்தினார். பின்னர் பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஸ்பிக்நகர் பெரியசாமி குழுவினரின் தெம்மாங்கு வில்லிசை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி, 9 மணிக்கு நேமிசம் முளைப்பாரி எடுத்து வருதல்,10 மணிக்கு அம்பாளுக்கு விசேஷ தீபாராதனைக்குபின் இரவு 12 மணிக்கு நையாண்டி மேளம், தம்பாமேளம், செண்டா மேளத்துடன் வானத்தில் வர்ணஜாலம் காட்டும் கண்கவர் வாணவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதலுடன் விசேஷ பூஜை நடைபெற்று,பகல் 1மணிக்கு முளைப்பாரி கரைத்தலுடன் கொடை விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.

    கொடை விழா நாட்களில் தினசரி இரவு சிற்றுண்டி முள்ளக்காடு இளைஞர்களால் வழங்கப்ப ட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சேகர் (எ) சந்திரசேகர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×