search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uvari"

    • கெனிஸ்டன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
    • சமீபத்தில் கெனிஸ்டனின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    உவரி அருகே உள்ள கூடுதாழை அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் கெனிஸ்டன்(வயது 28).

    இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவர் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் ஓடி வந்து கெனிஸ்டன் உடல் மீது பரவிய தீயை அணைத்தனர்.

    பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சமீபத்தில் கெனிஸ்டனின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இழப்பை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களாக கெனிஸ்டன் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார் என்ற விபரம் தெரியவந்தது.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாகவே உவரியில் உள்ள தோட்டத்தில் மின்சார வயர்கள் திருடப்பட்டு வருகின்றது.
    • இதனால் விவசாயிகள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே குட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் தென்னை, முருங்கை, மா, வாழை போன்ற பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும், கிணறு தோண்டியும் அதில் மோட்டார் அமைத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாகவே அதில் உள்ள மின்சார வயர்கள் திருடப்பட்டு வருகின்றது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் வயர்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது.
    • மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இடையன்குடியில் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த 6 கனரக லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது எந்த வித அனுமதியும் இன்றி ராதாபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்கள், எம் சாண்ட் ஆகியவை தூத்துக்குடிக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக லாரி டிரைவர்கள் ஆனைகுடி பெருமாள்புரத்தை சேர்ந்த சிவா (வயது 29) இடையன்குடி கீழத்தெரு ராஜன் (52), ரோஸ் மாநகர் தெற்குதெரு அமர்செல்வன் (41), சங்கராபுரம் வேத நாயகம்(51), நடுவ க்குறிச்சி செல்வ குமார்(32), தட்டார்மடம் வேதமாணிக்கம் ராஜி(46), லாரிைய வழிகாட்டி அழைத்து சென்ற செட்டிவிளை வடக்கு தெருவை சேர்ந்த ஜேசுராஜன் (52) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 6 லாரிகளையும் கனிமவளங்களுடன் பறிமுதல் செய்தனர்.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் உவரியில் சுயம்புலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை விநாயகர் ஊர்வலம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருவிழாவான நேற்று காலை நடந்தது. கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரின் மீது மூன்று முறை கருடன் வட்டமிட்டது. அதனை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து கோஷமிட்டனர். தேரில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பவனி வந்தனர்.

    விழாவில் ராஜகோபுர திருப்பணி கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், செயலாளர் வெள்ளையா நாடார், துணை தலைவர் கனகலிங்கம், பொருளாளர் செண்பகவேல் நாடார், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், வி.வி.மினரல் ஜெகதீசன், தொழிலதிபர் வடமலை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து கடற்கரையில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமும், இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை மாவட்டம் உவரி வங்க கடலோரம் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில், பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை ஆகியவை நடந்தது. பின்னர், யானை மீது கொடிப்பட்ட ஊர்வலமும், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து விநாயகர் வீதிஉலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதிஉலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதிஉலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. 22-ந்தேதி பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 9-ம் திருவிழா அன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை பூசத்திருவிழா வருகிற 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தை பூசத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    13-ந் தேதி காலை சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, யானை மீது கொடிபட்டம் ஊர்வலம், கொடியேற்றம் நடக்கிறது. இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதி உலா, சமய சொற்பொழிவு நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, இரவு விநாயகர் வீதி உலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ந் திருநாளான 21-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தேரோட்டம் நடக்கிறது. பின்னர் தீர்த்தவாரியும், சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
    உவரி அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள குட்டம் தஞ்சபுரத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிளஸ்-1 படித்து விட்டு திசையன்விளையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று கடைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா (வயது 21) திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக அவரது தாய் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்கு பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்.

    ×