search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turmeric"

    • தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது.
    • தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது. இங்கு தினமும், 3,000 முதல், 4,500 மூட்டை மஞ்சள் விற்பனையாகும்.

    நேற்றைய நிலையில் விரலி மஞ்சள் குவிண்டால், 5,429 ரூபாய் முதல், 8,150 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 4,746 ரூபாய் முதல், 7,159 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    தற்போதைய விலை நிலவரம் குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது. அதன்பின் தற்போது வரை விலை உயரவில்லை.

    தற்போது வரை மார்க்கெட்டுக்கு அதிகமாக பழைய மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வருவதால், விலையில் உயர்வு ஏற்படவில்லை. தற்போது, 80 முதல், 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 முதல், 30 சதவீதம் புதியவை வரத்தாகிறது.

    பழைய மஞ்சள், புதிய மஞ்சள் என தனித்தனியாக விற்பனை செய்ய இயலாது. கலந்து விற்பனையாவதால், விலையில் மாற்றம் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் புதிய மஞ்சள் வரத்து குறைந்த நிலையில், மஹராஷ்டிராவில் வரத்தாகும் புதிய மஞ்சளை நம்பி, ஈரோடு மார்க்கெட் செயல்படுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்த புதிய மஞ்சள் 90 சதவீதம் விற்பனை செய்துவிட்டனர். பழைய மஞ்சள் இருப்பில் உள்ளதால், அவற்றை விற்பனைக்கு அதிகமாக கொண்டு வருகின்றனர்.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில், 65 கிலோ எடை கொண்ட, 5 லட்சம் மூட்டை வரை பழைய மஞ்சள் உள்ளது.

    தவிர, ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுக்கு வேலுார், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இம்மஞ்சள் தமிழகத்துக்கு மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா, பீகார் போன்ற வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும். இதில், 80 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும். கடந்தாண்டும், நடப்பாண்டிலும் மழை அதிகமாக உள்ளதால், இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதனால், 10 முதல், 12 லட்சம் மூட்டை மஞ்சள் வரத்தாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் புதிய மஞ்சள் வரத்தாகும்போது விலை உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
    • மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர்:

    ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால் துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.

    மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    அதன்படி நேற்று ஐப்பசி மாத சனி பிரதோ ஷம் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில்உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெ ற்றது.

    தொடர்ந்துநந்தி, பெருவுடையார், பெரி யநாயகி அம்மன் ஆகியோ ருக்கு தீபாராதனைகாண்பி க்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா தமிழ் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.
    • இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

    20 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

    இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'கைதிகள்' சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.


    சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் ஜெயமோகனின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    விநாயகர் சதூர்த்தியை யொட்டி மஞ்சள்,குங்குமம் கொண்டு விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

    அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் மாணவி ஸ்ரீநிதி என்பவர் கின்னஸ் சாதனை முயற்சியாக மஞ்சள், குங்குமம் மூலம் 108 விநாயகர் ஓவியங்களை வரைந்தார்.

    தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சி யகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி செய்திருந்தார்.

    • அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×