search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRYING TO SELL GANJA"

    • கஞ்சா விற்க முயன்ற பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர்.
    • தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்:

    கரூர் மொச்ச கொட்டம் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, கரூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியைச் சேர்ந்த கந்தன் (வயது 41), தேனியை சேர்ந்த ரூபன், கந்தனின் மனைவி பர்ஜானா, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து, பர்ஜனா மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்து ஒரு பைக் மற்றும் ரூ 11,000 மதிப்புள்ள கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×