search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transferred"

    திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 42 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    திண்டுக்கல்: 

    திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி என 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே, மாவட்டம் முழுவதும் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 27 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) முகமது மாலிக் ரெட்டியார்சத்திரத்துக்கும் (கி.ஊ.), அங்கு பணிபுரிந்த வசந்தா வடமதுரைக்கும் (கி.ஊ.) மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல வடமதுரையில் (கி.ஊ.) பணியாற்றிய குருவானந்தம் சாணார்பட்டிக்கும் (வ.ஊ), அங்கு பணியாற்றிய அந்தோணியார் நத்தத்துக்கும் (கி.ஊ) மாற்றப்பட்டுள்ளனர்.

    இதேபோல வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சீதாராமன் ஆத்தூருக்கும் (வ.ஊ), நத்தத்தில் பணியாற்றிய லாரன்ஸ் (கி.ஊ) வடமதுரைக்கும் (வ.ஊ.) மாற்றப்பட்டுள்ளனர். சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) மணிமுத்து வேடசந்தூருக்கும், வத்தலக்குண்டு விஜயசந்திரிகா ரெட்டியார்சத்திரத்துக்கும், ஆத்தூர் ஜெயச்சந்திரன் வத்தலக்குண்டுவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதேபோல, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், மனோகரன், சுமதி, இந்திராணி, கீதாராணி, சரவணன், அருள்கலாநிதி உள்பட மொத்தம் 42 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாற்றப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் சிலர், சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சிங்கப்பூர் தனியார் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் முழுவதையும் சோதனை நடத்தினர். சில பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



    விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்வதற்கும், தங்கம் கடத்தலுக்கும் சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய திருச்சி விமான நிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப் பாளர்கள் கலுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், ஊழியர் எட்வர்டு ஆகிய 6 பேரும், பயணிகள் 13 பேரும் சிக்கினர். அவர்கள் 19 பேர் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    கைதான அனைவரும் மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். தங்கம் கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் சி.பி.ஐ. சோதனை எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி திருச்சி சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருச்சி தவிர வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார்.

    மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் நாளை 12-ந் தேதிக்குள் பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி விமான நிலைய சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய 5 பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ் குமார் கேசன் ஆகியோரும் புதிதாக பொறுப்பேற்க உள்ளனர். #TrichyAirport #GoldSmuggling
    தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆயுதப்படை ஐ.ஜி.ஆக மாற்றப்பட்டுள்ளார். #IPSofficers
    சென்னை:

    உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    1.ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும், 

    2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    3. திருப்பூர் கமிஷனர் நாகராஜன், போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜியாகவும்,

    4. போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜி சண்முக ராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாகவும்.

    5. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும்,

    6. தமிழக காவல்துறை நலன், சென்னை ஐஜி டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை கமிஷனராகவும்

    7. மதுரை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், சிபிசிஐடி சிறப்பு பிரிவு ஐஜியாகவும்

    8. தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக இருந்த சேஷாயி, தமிழக காவல்துறை நலன் ஐஜியாகவும், 

    9. சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக பயிற்சி பள்ளி ஐஜியாகவும்

    10.போலீஸ் தொழில்நுட்ப சேவை டிஐஜி மகேந்திர குமார் ரத்தோட், நெல்லை போலீஸ் கமிஷனராகவும்,

    11. போலீஸ் பயிற்சி பள்ளி டிஐஜி ஆசியம்மாள், தொழில்நுட்ப சேவை டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews #IPSofficers
    கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக போலீசாரின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

    துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாரின் எப்.ஐ.ஆரில், துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் சேகர் ஆகியோரின் உத்தரவின் பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எப்.ஐ.ஆரிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் மாற்றி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். #sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையானது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    போலீசாரின் நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சாதாரண உடையில் வாகனத்தில் ஏறி நின்று போலீசார் துப்பாக்கியால் சுடுவது ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சரியான திட்டமிடல் மற்றும் தலைமை இல்லாததே தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு வழிவகுத்துள்ளது. போலீசார் தங்களது அடையாளத்தை மறைத்தது ஏன்?. சாதாரண உடையில் உள்ளவர்கள் கூட்டத்தில் கலந்து உளவு பார்ப்பது கிடையாது.



    போலீஸ்  உடையில் இருந்து போலீசார் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும், சாதாரண உடையில் ஆயுதத்தை பயன்படுத்துவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. குறி பார்த்து திறமையுடன் சுடுபவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பது தொடக்க கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

    கூட்டத்தை கலைப்பதை விட தங்களை பாதுகாத்து கொள்வதற்காக போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தியது போல் தோன்றுகிறது.

    கட்டுக்கடங்காத கும்பலை கட்டுப்படுத்த ஒரு முறை துப்பாக்கிச்சூடு, ஒரு பலியே போதுமானது. 12க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல்படி போலீசார் நடத்தும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சி.பி.சி.ஐ.டி. மாற்றப்படும். அதன்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகிறது. துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

    இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். #sterliteprotest

    சுனந்தா புஷ்கர் மரண வழக்கு மீதான விசாரணையை எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். #SunandaPushkar #DeathCase
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுதொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுனந்தா புஷ்கர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.



    இந்த வழக்கில் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், இதற்கு போதிய ஆதாரம் இருப்பதாகவும் போலீசார் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட்டு தர்மேந்திர சிங், ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிதரூர் தற்போதும் எம்.பி.யாக உள்ளார்.

    எனவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. வருகிற 28-ந் தேதி அந்த மாஜிஸ்திரேட்டு சமர் விஷால் இந்த வழக்கை விசாரிப்பார்’ என உத்தரவிட்டார்.  #SunandaPushkar #DeathCase
    ×