search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trains"

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • பொருட்களை அடித்து சேதம்
    • சகோதரருக்கு வலை வீச்சு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பி.ஜே.நேசூ சாலையில் உள்ள ராமநாயக் கன்பேட்டை பகுதியை சேர்ந்த பல் டாக்டர் அறிவர சன் என்பவர் கிளினிக் நடத்தில் வருகிறார். இவரது மனைவி இளவரசியும் பல் டாக்டராவார்.

    இந்நிலையில் டாக்டர் அறிவரசனிடம் பல்சிகிச்சை பெற்ற நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 60) திடீர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

    அறிவரசனின் தவறான சிகிச்சையால் தனது தாய் இந்திராணி இறந்துவிட்டார் என் றும், இதே போல் பலரும் இறந்துவிட்டனர் என இந்தி ராணியின் மகன் ஸ்ரீராம்குமார் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட மருத்துவ இணை, இயக்குனர் மாரிமுத்து தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் அறிவரசன் மீது ஸ்ரீராம்குமார் அளித்த புகார்தவறானது எனவும், பல் டாக்டர் அறிவரசன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் எனவும் மருத்துவ அறிக் கையை அளித்ததையடுத்து கிளினிக் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    இந்நிலையில் இந்திராணி யின் மகன்கள் யுவராஜ், ஸ்ரீராம்குமார் மற்றும் சிலர் அடிக்கடி பல் கிளினிக்கிற்கு சென்று கிளினிக்கை மூடி- விடுங்கள் என்று மிரட்ட விடுத்து வந்தனர். நேற்று ஸ்ரீராம்குமார் கிளினிக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து அங்கிருந்த டாக்டர் அறிவசன், அவரது மனைவி டாக்டர் இளவரசி மற்றும் அறிவுரசனின் தாயார் தேன்மொழி ஆகிய 3 பேரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்.

    இதுகுறித்து டாக்டர் அறிவரசன் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.நகர போலீஸ் இன்ஸ்பெக்ட நாகாராஜ் விசாரணை நடத்தி, ஸ்ரீராம்குமாரை (33) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யுவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும்.
    • பயணிகள் வசதிக்காக ரெயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் மதுரை, பாலக்காடு உள்ளிட்ட ரெயில்கள் வழக்கம் போல் கோவை ரெயில் நிலையம் வரை இயக்கப்படும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை- போத்தனுார் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்ததால், 1ந் தேதி முதல் 20ந் தேதி வரை பாலக்காடு- கோவை (06806), சொரனூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722), கோவை- கண்ணூர் (16608) உள்ளிட்ட 6 ெரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால் பழைய அட்டவணை படி ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் - கோவை வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11:50 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்டு ஞாயிறு கோவை வந்தடையும். பயணிகள் வசதிக்காக இந்த ெரயில் இம்மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் கோவை - ஜபல்பூர் ரெயில், கோவையிலிருந்து திங்கட்கிழமை புறப்பட்டு ஜபல்பூரை புதன்கிழமை சென்றடையும்.கோவையில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 19, 26, ஜூலை 3 ஆகிய 3 தினங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன.
    • சிக்னல் பழுதால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நேற்று மாலை திடீரென பழுதடைந்தது.

    இதனால் அந்த நேரத்தில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது வேகத்தை குறைத்து வள்ளியூர் ரெயில் கிராசிங்கை மெதுவாக கடந்து சென்றன. சிக்னல் பழுதடைந்ததினால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதன்பின்னர் உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர்.

    • கோவை- போத்தனூர் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • 3 ரெயில்கள் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    திருப்பூர் :

    கோவை வழி ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை- போத்தனூர் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் பாலக்காடு- கோவை (06806), ஷொர்னூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722) ஆகிய 3 ரெயில்களும் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, போத்தனூர் ரெயில்வே நிலையத்தில் நிறுத்தப்படும். கோவை ரெயில் நிலையம் செல்லாது.போத்தனூரில் புறப்படும் ரெயில்கள் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். கோவை - கண்ணூர்(16608), கோவை - ஷொர்னூர் (06459), கோவை - பாலக்காடு (06807) ஆகிய ரெயில்கள், ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
    • இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர்.

    உடுமலை:

    விடுமுறை நாட்கள் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்லும்ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    பாலக்காடு - திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 7:10 மணிக்கு வந்து 7:15 மணிக்கு கிளம்புகிறது.பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விட்டுள்ளதால், கூட்டம் அதிகரித்துள்ளது. ெரயிலில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறுகின்றனர். ெரயில் பெட்டியில் இடமில்லாமல் நின்று கொண்டே பயணிக்கும் நிலை காணப்படுகிறது.

    இது குறித்து ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுள்ளனர். 110 பேர் வரை உட்கார்ந்து செல்ல வசதியுள்ளது. மற்றவர்கள் நின்று தான் செல்ல வேண்டும்.

    உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ஏறும் போது மேலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதனால் பயணிகள் நின்று கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் நலன் கருதி ெரயில்வே நிர்வாகம் நான்கு பெட்டிகள் வரை கூடுதலாக இணைக்க வேண்டும். முன்பதிவு செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை ெரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் டுவிட்டர் வாயிலாக ெரயில்வே மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி வலியுறுத்தினர்.

    • சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
    • கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    நாமக்கல்:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.

    காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.

    சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:

    கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.

    அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    • இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளத்தை சுற்றிலும் காகித ஆலைகள், நூற்பாலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் அதிக அளவு உள்ளன. விவசாயம் சார்ந்த தொழில்களும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.எனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்காகவும், இதர பணிகளுக்காகவும் மக்கள் மடத்துக்குளம் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் திண்டுக்கல்-பாலக்காடு அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற பிறகு, மடத்துக்குளம் ரெயில்வே நிலையத்தில் பாலக்காடு-திருச்செந்தூர், கோவை-பழநி உள்ளிட்ட பயணிகள் ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்தன. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இவ்வழித்தடத்தில் கூடுதலாக ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் உடுமலை, பழநிக்கு சென்று ரெயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தியும் மடத்துக்குளம் ரெயில் நிலையம் குறித்த கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கோரிக்கைகள் குறித்து பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் சார்பில் ரெயில்வே மதுரை மண்டல மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மடத்துக்குளத்தில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல் பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ், அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களை மடத்துக்குளம் நிலையத்தில் ஒரு நிமிடம் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த ெரயில் சேவைகளை செயல்படுத்தினால் பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களும் பயன்பெறுவார்கள் என்றனர்.  

    • மதுரை வழியாக செல்லும் 3 ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற 24-ந்தேதி நாகர்கோ விலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

    மதுரை

    திருவனந்தபுரம் கோட்டத்தில் மேலப்பாளை யம்-நாங்குநேரி இடையே இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாம்பரத்தில் இருந்து நாளை (18-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை புறப்படும் நாகர்கோவில் அந்தியோதயா ரெயில் (20691) மற்றும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும்.

    அதேபோல திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628) இரு மார்க்கங்களிலும் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நெல்லை வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்த புரம் இண்டர்சிட்டி ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதேபோல வருகிற 22-ந்தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து வருகிற 23-ந்தேதிபுறப்படும். தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரெயில் (22658) ஆகியவை விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும்.

    இதேபோல சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 23-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12667) மற்றும் வருகிற 24-ந்தேதி நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரெயில் (12668) ஆகியவை விருதுநகரில் இருந்து இயக்கப்படும்.

    • சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
    • கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கோவை,

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில், சரக்கு ெரயில்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்வே சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், துணிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, கோவை இருகூரில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

    கரூர் அருகே உள்ள பாளையம் மற்றும் வீரராக்கியத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் சரக்கு ெரயில்கள் மூலமாக சேலம், ஈரோடு, திருப்பூர்,இருகூர், கூடல் நகர்( மதுரை) நெல்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப் பி வைக்கப்படுகின்றன. மேச்சேரி சாலை நிலையத்தில் இருந்து சரக்கு ெரயில் மூலமாக இரும்பு மற்றும் உலோகங்கள், காரைக்கால், சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பிவைக்கப்ப டுகின்றன.

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலமாக சேலம் ெரயில்வே கோட்டத் துக்கு ரூ.282.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சரக்கு ெரயில்களில் பொருள்கள் அனுப்பப்பட்டு ரூ.241.47 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 17.02 சதவீதம் சரக்கு ெரயில்களின் மூலமாக வருவாய் அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    திருப்பூரில் இருந்து துணிகள், பருத்தி ஆடைகள் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஈரோட்டில் இருந்து பாட்னா, மால்டா, குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முட்டைகள் அனுப்படுகின்றன.சேலத்தில் இருந்தும் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்ப டுகின்றன.

    அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 31 ஆயிரத்து 391.60 குவிண்டால் பார்சல்கள் ெரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு, ரூ. 1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரம் வருவராய் ஈட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கடம்பூர் ரெயில் நிலையம்

    தொடர்ந்து வியா பாரிகள், பொதுமக்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக தெரிவித்தனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்ேபாது, வழக்கம் போல கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.

    ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் மது போைதயில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது38). இவர் ஜெயங்கொண்டம் தனியார் டீக்கடை ஒன்றில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் மது போதையில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் கடும் ரகளையில் ஈடுபட்டதுடன் பஸ் வரும் நேரத்தில் சாலை நடுவே படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கூடுதலாக ரூ.5 மற்றும் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுவதாக போதையில் கத்தி கூச்சலிட்டார். இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராடி அந்த போதை ஆசாமியை சமாதானப்படுத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×