search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists request"

    • கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள டிப்போ பகுதியில் தனியார் சார்பில் சாகச விளையாட்டு பூங்கா கடந்த வாரம் திறக்கப்பட்டது.
    • சாகச விளையாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து ெசல்கின்றனர். கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள டிப்போ பகுதியில் ஜிப் லைன் ரைடு, பங்கி ஜம்பிங்க், மவுண்டன் பைக் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த‌தாக தனியார் சார்பில் சாகச விளையாட்டு பூங்கா கடந்த வாரம் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து கொடைக்கான‌ல் வ‌ரும் சுற்றுலாப்பயணிகள் தனியார் சாகச விளையாட்டு பூங்காவிற்க்கு வருகை புரிந்து ஜிப் லைன் ரைடு, மவுண்டன் பைக் உள்ளிட்ட விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சாகச விளையாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் ஜிப் லைன் ரைடில் சிறுவர்கள் ஆர்வத்துடன் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு 200 மீ. தூரம் வ‌ரை கம்பிவடத்தில் தொங்கியபடி சவாரி மேற்கொள்கின்றனர். சிறுவர்கள் ஜிப் லைன் சவாரி மேற்கொள்ளும் போது கம்பி வடத்தின் நிறைவு பகுதிக்கு செல்ல முடியாமல் பாதியிலேயே அவர்கள் அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்குகின்றனர்.

    இதனை பார்க்கும் ஊழியர்கள் கயிறு மூலம் மற்றொரு புறத்திற்கு அவர்களை இழுத்துச் செல்கின்றனர். இதனால் ஜிப் லைன் சவாரி மேற்கொள்ளும் சிறுவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாகச விளையாட்டு பூங்கா முறையாக அரசு அனுமதி இல்லாமல் செயல்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பெரும் அசாம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×