search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tisayanvilai"

    • சுதன்ராஜ், விஷ்ணு ஆகியோர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தனர்.
    • விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை. இவரது மகன் சுதன்ராஜ் (வயது 28). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). உறவினர்களான இவர்கள் 2 பேரும் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விஷ்ணு ஓட்டி சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதல்

    மன்னார்புரம் வள்ளியூர் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காரை ஓட்டிவந்த கும்பிகுளத்தை சேர்ந்த சங்கர் (34) என்பவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே இடையன்குடி கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவ- மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் படித்த பள்ளியில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. 47 முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    பின்பு நடந்த அறிமுக விழாவிற்கு முன்னாள் மாணவர் அதிசய ஜாண் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவரும் கோவா தொழில் அதிபருமான பால்ராஜ், பள்ளி தாளாளர் ஜேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரும், பள்ளி முன்னாள் மாணவியுமான கலாவதி மணிமாறன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர்கள் ஜெயக்குமாரி, வில்லியம், பகவதி பாண்டியன், லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் பள்ளி பருவ மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் சுவிஷேச முத்து, டாரதி சுவிஷேச முத்து அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். மேலும் அவர்கள் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் தங்கவேல், அல்வாரில், ஜேசு டேனியல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னாள் மாணவர் ஜெபதாமஸ் நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட ப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் எலிசபெத் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆசிரி யர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களை கேட்டனர். ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர்.

    பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. ஆசிரியர்ளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    • திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்து உள்ள குருகாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திசையன்விளை புறவழி சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவுவழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 2 மணியளவில் கடை திடீர் என தீ பிடித்து எரிந்துள்ளது.

    அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் திசையன்விளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ஆனால் கடைமுழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீவிபத்து நடந்த கடையில் மின்சார வசதி கிடையாது. அதனால் முன்விரோதத்தில் யாராவது கடைக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • உலக நலன், கல்வி, செல்வம், ஆரோக்கியம் குறித்து கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு மலர்தூவி, விளக்கேற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் இந்து முன்னணி சார்பில் வளர்பிறை ராமநவமி கூட்டு பிராத்தனை நடந்தது.

    ரமா சங்கரி ராமரின் மகிமை பற்றி பேசினார். பிரிதா, கஸ்தூரி, மேகலா ஆகியோர் பூஜை நடத்தினர்.

    உலக நலன், கல்வி, செல்வம், ஆரோக்கியம் குறித்து கூட்டு பிராத்தனை செய்யப்பட்டது.

    அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராமர் சிலைக்கு மலர்தூவி, விளக்கேற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, மாவட்ட செயலாளர் விக்னேஷ், திசையன்விளை நகர தலைவர் ஜெயசீலன், செயலாளர் மணிகண்டன், துணைத்தலைவர் கொடி ராஜகோபால், முருகேச ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    • 10 பெண்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
    • பா.ஜனதா கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள மடத்தச் சம்பாட்டில் பா. ஜனதா நிர்வாகிகள் கூட்டம் திசையன்விளை நகர பா.ஜனதா தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    10 பெண்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் அடுப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி ராகவன், உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பா.ஜனதா கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நகர பொதுச்செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.

    ×