search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Kapileshwar Temple"

    • நாளை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி 10-ந்தேதி மாலை கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 11-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மீன லக்னத்தில் நடக்கிறது. அன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 12-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா.

    16-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 20-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, திரிசூல ஸ்நானம், இரவு கொடி இறங்குதல், ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள தாளம் மற்றும் மங்கல இறை இசை வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    கபிலேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகனச் சேவை விவரம் அச்சிடப்பட்ட புத்தகத்தை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தனது அலுவலகத்தில் வெளியிட்டார். அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    • பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    அதையொட்டி கோவில் கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து பிரதான நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுகந்த திரவியங்கள் தெளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    • இந்த விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
    • 19-ந்தேதி கல்யாண உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. முன்னதாக 10-ந்தேதி மாலை புற்றுமண் எடுத்தும், முளைப்பாரி விதைத்தும் அங்குரார்பணம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 11-ந்தேதி மீன லக்னத்தில் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி 18-ந்தேதி நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது. 19-ந்தேதி கல்யாண உற்சவம், 20-ந்தேதி திரிசூல ஸ்நானம், கொடியிறக்கம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.
    • யாகசாலையில் பக்தி சொற்பொழிவு நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் மகாஉற்சவத்தின் ஒரு பகுதியாக நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. யாகசாலையில் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தி சொற்பொழிவு நடந்தது.

    கலச ஸ்தாபன பூஜை, நவக்கிரக ஆவாஹனம், அக்னி பிரதிஷ்டை, ஹோமம், லகு பூர்ணாஹுதி, நிவேதனம், ஆரத்தி ஆகியவையும் நடந்தது. இன்று (புதன்கிழமை) சுப்ரமணிய சாமி ஹோமம் நடைபெறுகிறது.

    • 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது.
    • இன்று சுப்பிரமணியசாமி ஹோமம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உத்தரவின்பேரில் உலக நல்லிணக்கத்துக்காக திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6 நாட்கள் ஹோம மஹோற்சவம் நடத்தப்படுகிறது. ஹோம மஹோற்சவத்தின் தொடக்க நாளான நேற்று கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

    அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதாரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) சுப்பிரமணியசாமி ஹோமம், நாளை (புதன்கிழமை) துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.

    • 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
    • 21-ந்தேதி மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.

    உலக மக்கள் நலமாக வாழ வேண்டி திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 16-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை 6 நாட்கள் சிறப்பு ஹோம மஹோற்சவம் நடக்கிறது. 16-ந்தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம், 17-ந்தேதி சுப்பிரமணியசாமி ஹோமம், 18-ந்தேதி துர்கையம்மன், லட்சுமி, சரஸ்வதி ஹோமம், 19-ந்தேதி நவக்கிரக ஹோமம், 20-ந்தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 21-ந்தேதி ருத்ர மற்றும் மிருத்யுஞ்சயசாமி ஹோமம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 5 நாள் வருடாந்திர தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று இரவு உற்சவர்களான விநாயகர், சந்திரசேகரர் கபிலத்தீர்த்த குளத்தில் மிதந்த தெப்பத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கபிலத்தீர்த்த கரைகளில் அமர்ந்திருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தெப்போற்சவம் 5-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. தெப்போற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 1-ந்தேதி விநாயகர், சந்திரசேகரர், 2-ந்தேதி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், 3-ந்தேதி சோமஸ்கந்தமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ந்தேதி காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 5-ந்தேதி சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேற்கண்ட 5 நாட்களில் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது. தெப்போற்சவத்தையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சாரியார் திட்டத்தின் கீழ் தினமும் பக்தி கீர்த்தனைகள் பாடப்படுகிறது.

    மேலும் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன மகோற்சவத்தையொட்டி ஜனவரி 6-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    • நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது.
    • பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. முதலில் கணபதி ஹோமம், சுப்பிரமணியசாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், பைரவர் ஹோமம், நவக்கிரக ஹோமம், காமாட்சி ஹோமம், கபிலேஸ்வரர் ஹோமம் நடந்து வந்தது.

    நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது. பின்னர் மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், திரிசூல ஸ்நானம், அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை லட்சதீப ஆராதனை, பஞ்சமூர்த்திகளான விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரருக்கு ஆராதனை, அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது. இத்துடன் ஒரு மாதம் நடந்த ஹோம மஹோற்சவம் முடிந்தது.

    • திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது.
    • இன்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம் நடைபெற்று வந்தது. 11 நாட்கள் நடைபெறும் இந்த ருத்ர யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இதன் ஒரு பகுதியாக காலையில் மூலவர் கபிலேஸ்வர சுவாமிக்கு ருத்ரயாகம் சமாப்தி, மஹாபூர்ணாஹுதி, மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.

    இன்று (புதன் கிழமை) சண்டிகேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.

    • இன்று முதல் 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் நடக்கிறது.
    • கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் நடந்து வந்தது.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து கார்த்திகை ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 3-ந்தேதியில் இருந்து காமாட்சி ஹோமம் (சண்டி யாகம்) நடந்து வந்தது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதையொட்டி யாகசாலையில் நேற்று காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரை சண்டி ஹோம சமாப்தி, மகாபூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா அபிஷேகம், மூலவர் காமாட்சி தாயாருக்கு கலசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கபிலேஸ்வரருக்கு கலச ஸ்தாபனம், பூஜை, ஜெபம், ஹோமம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.

    ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சீனிவாசலு, கண்காணிப்பாளர் பூபதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை கபிலேஸ்வரர் ஹோமம் எனப்படும் ருத்ர யாகம் நடக்கிறது.

    • திருப்பதியில் உள்ளது கபிலேஸ்வரர் கோவில்.
    • உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை சேவை நடக்கிறது. மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×