என் மலர்

  நீங்கள் தேடியது "Threw acid"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜலகண்டாபுரம் அருகே கணவர் மீது திராவகம் வீசிய மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
  ஜலகண்டாபுரம்:

  ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள்(35). இவர்களுக்கு சிவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

  இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் மனைவி மாதம்மாளுடன் தனிவீட்டில் வசித்துவரும் மகன் சிவாவை, நாகப்பன் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்தநிலையில் மகன் சிவாவை பார்க்க நாகப்பன் சென்ற போது அங்கு அவன் இல்லை என்று தெரிகிறது. அப்போது அங்கு வந்த மாதம்மாளிடம் சிவா எங்கு என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

  உடனே அருகில் இருந்த கட்டையால் நாகப்பனை, மாதம்மாள் அடித்து, அங்கிருந்த திராவகத்தை அவர் மீது வீசினார். இதில் படுகாயமடைந்த நாகப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். 
  ×