search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thisayanvilai Market"

    • திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் சொட்டுநீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது.
    • சமீபத்தில் பெய்த கோடைமழையால் முருங்கையில் பூக்கள் உதிர்ந்துவிட்டது.

    திசையன்விளை:

    திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் சொட்டுநீர்பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் முருங்கைகாய்கள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரை ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.15 முதல் ரூ.17 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. திடீர் விலை உயர்வு பற்றி முருங்கைகாய் வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    சமீபத்தில் பெய்த கோடைமழையால் முருங்கையில் பூக்கள் உதிர்ந்துவிட்டது. இதனால் முருங்கைகாய் வரத்து குறைந்து உள்ளது. மேலும் கேரளாவில் நடைபெற உள்ள ஓணம் பண்டிகைக்கு அதிக அளவில் முருங்கைகாய்கள் அனுப்பபடுவதாலும், திருமண முகூர்த்தம் அதிகம் உள்ளதாலும் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    ×