search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tesla"

    டெஸ்லா நிறுவனத்தின் புதிய தானியங்கி சரக்கு வாகனத்தில் 'மேட் மேக்ஸ் மோட்' வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி உறுதி செய்திருக்கிறார்.




    டெஸ்லா நிறுவன எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்படும் அம்சங்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இதேபோன்று அந்நிறுவன வாகனங்களின் ஆற்றல் மற்றும் செயல்திறன் வியப்படையும் வகையில் வழங்கப்படும்.

    இந்நிலையில், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் டெஸ்லாவின் புதிய தானியங்கி சரக்கு வாகனத்தில் சேர்க்கப்பட இருக்கும் புதிய வசதி குறித்த தகவலை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். அதன்படி புதிய மாடலில் மேட் மேக்ஸ் மோட் சேர்க்கப்பட இருக்கிறது.

    டெஸ்லா சரக்கு வாகனத்தின் தானியங்கி அமைப்பின் ஒரு அம்சமாக மேட் மேக்ஸ் மோட் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் குறித்து சில ட்விட்களில் மேட் மேக்ஸ் மோட் ஒரு ஆப்ஷனாக இருக்கும் என தெரியவந்துள்ளது. டெஸ்லா ஆட்டோபைலட் பிளைன்ட் ஸ்பாட் திரெஷோல்டு சிஸ்டத்தில் இந்த மோட் சேர்க்கப்படுகிறது.



    ஆட்டோபைலட் மோடில் சாலை தடம் சரியாக மாற்றிக் கொள்ளும் பிளைன்ட் ஸ்பாட் சிஸ்டம் ஸ்டான்டர்டு, அக்ரெசிவ் மற்றும் மேட் மேக்ஸ் என மூன்று வித மோட்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

    டெஸ்லா செமி டிரக் வாகனத்தின் மேட் மேக்ஸ் மோட் ஆட்டோபைலட் சிஸ்டம் மிக சிறப்பாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் ஓட்டுநரின் டிரைவிங் ஸ்டைல்களை டெஸ்லா செமி புரிந்து கொள்ளும். எதிர்காலத்தில் மேனுவல் ஓவர் ரைட் எனும் அம்சத்தை சேர்க்கவும் டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

    புதிய மோட் குறித்த முழு விவரங்கள் மற்றும் இந்த மென்பொருள் எவ்வாறு இயங்கும் என்ற முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைய டெஸ்லா கார்களில் இந்த அம்சம் இன்னும் சேர்க்கப்படவில்லை. ஆகஸ்டு மாத வாக்கில் ஆட்டோபைலட் சிஸ்டம் அப்டேட் செய்யப்படுவதாக டெஸ்லா தெரிவித்துள்ளார்.
    ×