search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tesla Motors"

    டெஸ்லா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா கார்களின் இந்திய வெளியீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #ElonMusk #TeslaModel3



    டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் விற்பனையை அமெரிக்காவைத் தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட சந்தைகளில் விரிவுப்படுத்த இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். 

    சீனாவில் டெஸ்லா மாடல் 3 கார்களின் உற்பத்தி துவங்கப்படுவதாகவும், அங்கு 7000 யூனிட்கள் உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எலான் மஸ்க் ட்விட்டர் பதிவில் தனது சர்வீஸ் குழுவினரை வட அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவுப்படுத்த கேட்டுக் கொண்டுள்ளார்.



    இதைத் தொடர்ந்து இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த ஆண்டு இறுதியிலும், 2020ம் ஆண்டு வாக்கில் பெரும்பாலான பகுதிகளில் வியாபாரத்தை விரிவுப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    2015ம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா மோட்டார்ஸ் உருவாக்கி வரும் தொழில்நுட்பங்கள் குறித்து ட்விட்டரில் தனது வியப்பை தெரிவித்திருந்தார். முன்னதாக எலான் மஸ்க் டெஸ்லா தொழில்நுட்பங்கள் மற்றும் இவை இந்தியா போன்ற நாடுகளில் மாற்றத்தக்க எரிசக்தி எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து எலான் பிரதர் மோடிக்கு விளக்கி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனம் 2017ம் ஆண்டிலேயே களமிறங்கலாம் என கூறப்பட்டது. டெஸ்லா இந்திய வருகை தற்சமயம் உறுதி செய்யப்பட்டுள்ளது, எனினும் மாடல் 3 கார்களின் இந்திய முன்பதிவு எப்போது துவங்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    ×