என் மலர்

  நீங்கள் தேடியது "temple festival"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாயல்குடி அருகே புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
  • திருவிழா திருப்பள்ளியும், அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது.

  சாயல்குடி

  சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் ஊராட்சி பெரியநாயகிபுரம் புனித பரலோக அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அசன விருந்து, ஜெபமாலை பவனி, திருப்பலி, ஒப்புரவு வழிபாடு, புது நன்மை, நற்கருணை பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம் சப்பரபவனியை தொடர்ந்து திருவிழா திருப்பள்ளியும் அற்புத திருப்பலி தேர் பவனியும் நடந்தது. இதில் பெரிய நாயகிபுரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம், சாயல்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலூர் அருகே கருங்காலக்குடியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
  • மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

  மேலூர்

  மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா 21 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.

  திருவிழாவின் முதல்நாளான நேற்று குயவர் திடலில் இருந்து மந்தை பொட்டலுக்கு மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.

  2-வது நாளான இன்று மந்தை பொட்டலில் இருந்து 2 கி.மீ தூரமுள்ள சேவுகபெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் புரவிகளை சுமந்து சென்றனர்.

  மழை வேண்டி, விவசாயம் செழிக்க இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
  • திருவிழாவையொட்டி மேலூர் மெயின்ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

  மேலூர்

  மேலூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோவிலின் ஆடி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேலூர் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரிய கடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

  அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடன் நேர்த்திய பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். நாளை மாலை பெண்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

  திருவிழாவையொட்டி மேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செந்துறை அருகே சின்ன முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.
  • அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் மற்றும் மாவிளக்கு எடுப்பதும் தேவராட்டமும் நடைபெற்றது.

  செந்துறை:

  நத்தம் அருகே செந்துறை பகுதியைச் சேர்ந்த பெரிய மல்லநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, பந்தி பொம்மிநாயக்கனூர் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட சின்ன முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

  இதில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பாரிவேட்டை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் மற்றும் மாவிளக்கு எடுப்பதும் தேவராட்டமும் நடைபெற்றது.

  இந்த விழாவை ஒட்டி சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு சின்ன முத்தாலம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஊர் நாயக்கர் தங்கப்பாண்டியன் பூசாரி தலைமை தாங்கினார்.

  விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். திருவிழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் மூன்று கிராம மக்களும் செய்திருந்தனர். அன்று இரவு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.
  • முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் பெரியாயி கோவில் உள்ளது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினர் இந்த கோவிலில் முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர். ஏற்கனவே சுவாமி வழிபாடு தொடர்பாக பிரச்னை இருந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. அதில், வழக்கத்திற்கு மாறாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக சுவாமி வீதியுலா நடைபெறுவதாக கூறி, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பழனி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், பிரிவிடையாம்பட்டு கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணியளவில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. இதில், மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் இரு தரப்பினர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம் என கூறினார்.இதையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பிரிவிடையாம்பட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் அருகே கோவில் திருவிழாவில் 2 தரப்பினர் மோதிக்கொண்டனர்.
  • மோதலில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

  கடலூர்:

  கடலூர் அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 23). இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சம்பவத்தன்று மஞ்சள் விரட்டு விழா முன்னிட்டு சாமி ஊர்வலம் சென்றது. அப்போது சாமிஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் சாமியுடன் வந்த சிலர் ஓரமாக செல்லும்படி தெரிவித்தனர்.

  அப்போது திடீரென்று சரண்யாவுக்கும் அந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.இதில் சரண்யாவை 3 பேர் திடீரென்று கல்லால் தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது‌. மேலும் இந்த தகராறில் கிஷோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரண்யா, கிஷோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

  இது குறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கிஷோர், வீரமணி, வீரவேல், உள்ளிட்ட சிலர் மற்றும் கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் சைமன், ஜோசப், சச்சின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.
  • ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  புதுச்சேரி:

  புதுவை நெல்லித்தோப்பில் புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது.

  இன்று தொடங்கியது. இந்த ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் ஆயர் இராயப்பன் திருப்பலி நிறைவேற்றினார்.

  தொடர்ந்து மாதாவின் கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் அருட்தந்தை யர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நவநாட்களான 7-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை, மாலை திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் சிறப்பு மறையுரை, சிறிய தேர்பவனி நடக்கிறது.

  ஆடம்பர தேர் பவனி  விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டு பெருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

  புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அன்னையின் திருத்தேர் மந்திரிக்கப்பட்டு வீதிகளில் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

  விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி தந்தை ஆன்டோ மரியசூசை தலைமையில் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
  • திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

  இந்த கோவிலில் ஆடிப்பூரத்தேரோட்ட திருவிழா 5 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

  விழாவையொட்டி தினமும் பல்வேறு அலங்கா ரங்களில் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா, ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா 10 நாட்கள் நடைபெறும்.

  முதல் நாள் கொடியேற்றம், 5-ம் நாள் கருட சேவை, 7-ம்நாள் சயன சேவை, 9-ம் நாள் தேரோட்டம் ஆகிய விழாக்களில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 5-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 5 கருடசேவை கோலாகலமாக நடந்தது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு 5 வருட சேவையை வழிபட்டனர்.

  காலையில் மங்களாசனம் நடைபெற்றது. 5-ம்நாள் திருவிழாவில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார் -பெரிய பெருமாள், சுந்தராச பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் சிறப்பு பெற்றதும், தமிழக அரசின் சுற்றுலாத்தலமுமானது தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயம்.
  • பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 137 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  வள்ளியூர்:

  நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 137 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய தலங்களில் சிறப்பு பெற்றதும், தமிழக அரசின் சுற்றுலாத்தலமுமான தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

  முன்னதாக பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெப ஸ்டின் ஆனந்த் தலைமையில் ஊர்பெரியவர்கள் கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தனர்.

  பின்னர் அந்த புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் குருவானவர்கள் நெல்சன் பால்ராஜ், உள்ளூர் குருவானவர்கள் ரூபன், பீட்டர் பாஸ்டியான், ரினோ ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் தர்மகர்த்தா திருக்கொடியேற்றினார்.

  இவ்விழாவில் குருவானவர்கள் இருதயராஜா, ஏ.ஜே.ரெக்ஸ், டி.டி.என்.கல்விக்குழுமங்களின் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ், தாளாளர் ஹெலன்லாரன்ஸ், உள்ளிட்டோர் கலந்து–கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆயர் ஆலய வளாகத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார்.

  தொடர்ந்து திருப்பலியும், மறையுரை நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. இன்று 2-ம் திருவிழாவை யொட்டிகுஜராத் மாநிலம் அகமதாபாத் ஆயர் ரெத்தினசாமி தலைமையில் ஆரோக்கியமாதா கெபி திறப்புவிழா நடைபெறுகிறது. வருகிற 3-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  மாலை 6 மணிக்கு ஆலயத்தின் பின்பு புதிதாக கட்டப்பட்டுள்ள நற்கருணை சிற்றாலயத்தை ஆயர் ஸ்டீபன் அந்தோணி திறந்துவைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. பின்னர் திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.

  ஆராதனை

  4-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் உறுதிப்பூசுதல் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் கெபிதிறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது.

  இரவு 10 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும் இரவு 12 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. 10-ம் திருவிழா அதிகாலை 5.15 மணிக்கு ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 6-ம் தேதி (சனிக்கிழமை)முதல்சனி வழிபாடுகளும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குதந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
  • தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.

  ஸ்ரீவில்லிபுத்தூர்

  ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.

  தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்மன் பூஞ்சோலையில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பூக்குழியில் காமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.

  செம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, பாளையங்கோட்டை கிராமத்துக்கு உட்பட்ட காமன்பட்டியில் முத்துமாரியம்மன் மண்டு கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் 9-ந்தேதிதிருவிழா தொடங்கியது.

  இதில், அம்மனுக்கு 48 நாட்கள் பூஜைகளுக்கு பிறகு 3 நாள் திருவிழா தொடங்கியது. இதில் நேற்று இரவு அம்மன் பூஞ்சோலையில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தங்கக் கொடிமரம் அபிஷேகம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று அதிகாலை அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் காமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  நாளை அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஊர் சார்பாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. மேலும், மஞ்சள் நீராடுதல், வேஷம் போட்டு ஆடுதல், நிகழ்ச்சிகளும் அம்பாளுக்கு தீர்த்தவாரியும் நடைபெற்று தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

  இத்திருவிழாவில் இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் பெருமாள்சாமி, ஊர் நிர்வாகி அழகுமலை, பூசாரிகள் பாலசுப்பிரமணி, காமாட்சி மற்றும் விழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
  • முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  கோபி:

  கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் உள்ள கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .

  இதையொட்டி 18-ந் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

  முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  பின்னர் பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், பெருபூஜை, கிடாய் வெட்டுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  இதில் கோபி, மொடச்சூர் நாயக்கன் காடு, கரட்டூர் பாரியூர்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

  ×