என் மலர்

  நீங்கள் தேடியது "temple"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
  • விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  திருப்பூர் :

  பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

  இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் டவுன்ஹால் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • வெள்ளி கருட சேவை நடைபெறுகிறது

  கரூர்:

  தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான நந்தகுமார் உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். தொடர்ந்து வருகிற 30-ந் தேதி வெள்ளி கருட சேவை நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் திருமுறை செப்பேட்டுக் கோவில் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தக் கோவில், வேறெங்கும் இல்லாத வகையில் 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களை செப்பேடுகளில் இடம் பெற செய்து, கருவறையில் சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது.

  உலகத்திலேயே இது போன்ற கோவில் வேறெங்கும் இல்லாத வகையில் அமைய உள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் மாக்கதை திருவிழா வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

  இது தொடர்பாக புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனத் தலைவர் தயானந்த சந்திர சேகர சுவாமிகள் கூறியதாவது:

  கொடும்பாளூர் நாயனார் அவதரித்த இடமாகும். இதனால், அந்த இடத்தை தேர்வு செய்து திருமுறை செப்பேட்டு கோவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களும் செப்பேட்டில் எழுதி சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு செப்பேடுகளும் தலா ஒரு கிலோ எடையில் மொத்தம் 5 டன் எடையில் செய்யப்பட்டு வருகின்றன.

  மேலும் இந்த கோவில் வளாகத்தில் அறுபத்து மூவர் சித்திர கூடம், அருங்காட்சியம், நூலகம், தியானமண்டபம் ஆகியன அமைக்கப்பட உள்ளன. எத்தகைய இயற்கை பேரிடர் வந்தாலும் செப்பேட்டில் எழுதிய எழுத்துக்கள் ஒரு போதும் அழியாது. இது வருங்கால சந்ததியினர் நம்முடைய தொன்மையையும், நம் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதை பொது மக்கள் மத்தியில் எடுத்து ெ சால்லும் நோக்கத்துடன் பெரிய புராண திருவிழா என்ற பெயரில் திருமுறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி விராலிமலையில் வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூலவருக்கு ‘மகா தேவர்’ என்று பெயர்.
  • இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னிதி இல்லை.

  கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் அமைந்துள்ளது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. பகலிலும், இரவிலும் நடை சாத்தப்படும் போது, அர்ச்சகர் ஒருவர், நான்கு கோபுர வாசல்களிலும் வந்து, "யாரும் பசியாக இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு, நடையை சாத்தும் வழக்கம் இருக்கிறது.

  கரன் என்னும் அசுரன், முக்தி அடைய வேண்டும் என்பதற்காக கடும் தவம் இருந்தான். அவன் சிறந்த சிவ பக்தனும் ஆவான். அவன் முன்பாக தோன்றிய ஈசன், கரனிடம் மூன்று சிவலிங்கங் களைக் கொடுத்து "இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால் முக்தி கிடைக்கும்" என்று கூறினார். மேலும் கரனை பின் தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரையும் சிவபெருமான் அனுப்பிவைத்தார்.

  ஒரு சிவலிங்கத்தை வலது கையிலும், மற்றொரு சிவலிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது சிவலிங்கத்தை தன்னுடைய வாயிலும் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான் கரன். சிறப்பான இடத்தை தேர்வு செய்து அதில் சிவலிங்கங்களை நிறுவ நினைத்த கரன், தன்னுடைய பயணத்தின்போது களைப்பை உணர்ந்தான். அதனால் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தவன் தன்னுடைய வலது கையில் இருந்து சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். சிறிது நேரத்திற்கு பிறகு, கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது இயலாமல் போனது.

  சிவலிங்கம் அந்த இடத்திலேயே நிலைபெற்றுவிட்டதை உணர்ந்த கரன், அங்கு வந்த வியாக்ரபாதரிடம் அந்த சிவலிங்கத்திற்கு பூைஜ செய்து வழிபடும்படி கேட்டுக்கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்தபடி அங்கேயே தங்கிவிட்டார். கரன் அங்கிருந்து புறப்பட்டு, ஏற்றமானூர் என்ற இடத்தில் தன்னுடைய இடது கையில் இருந்த சிவலிங்கத்தையும், கடித்திருத்தி என்ற இடத்தில் தன்னுடைய வாயில் இருந்த சிவலிங்கத்தையும் நிறுவி வழிபட்டான். அதன்பலனாக அவனுக்கு முக்தி கிடைத்தது.

  பிற்காலத்தில் பரசுராமர், வான் வழியில் வடதிசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் கீழே பார்த்தார். அங்கு நாவல் பழ நிறத்தில் ஒரு சிவலிங்கம், நீரில் பாதியளவு மூழ்கிய நிலையில் தென்பட்டது. அங்கு இறங்கிய பரசுராமர், அந்த சிவலிங்கத்திற்கு பீடம் ஒன்றை அமைத்து, அந்த பீடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தார். அந்த சிவலிங்கம், கரன் என்ற அசுரனால், வலது கையில் எடுத்துவரப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம் என்பது தெரியவந்தது. அதுவே வைக்கம் மகாதேவர் அருளும் ஆலய இறைவன் என்று பார்க்கவ புராணம் தெரிவிக்கிறது.

  இந்த ஆலயத்தின் கருவறையில் 2 அடி உயர பீடத்தின் மீது, 4 அடி உயரத்தில் சிவலிங்கமாக கிழக்கு நோக்கிய நிலையில் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலவரான இவருக்கு 'மகா தேவர்' என்று பெயர். வியாக்ரபாதர் வழிபட்ட காரணத்தால் 'வியாக்ரபுரீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. ஆனால் பக்தர்கள் அனைவரும் இவரை ஊரின் பெயரைக் கொண்டு 'வைக்கத்தப்பன்' என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு தனியாக சன்னிதி இல்லை. கோவிலின் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அம்மனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

  இந்த ஆலயத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடை சாத்தப்படும் போது, கோவில் அர்ச்சகர் ஒருவர், ஆலயத்தின் நான்கு கோபுர வாசல்களிலும் கையில் பந்தத்துடன் வந்து "யாரும் பசியாக இருக்கிறீர்களா" என்று கேட்கும் பழக்கம் உள்ளது. அப்படி யாரேனும் 'பசியாக இருக்கிறேன்' என்று கூறினால், அவரை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்று, அவருக்கு உணவிட்டு பின்தான் கோவில் நடையை சாத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. இதை ஈசனின் கட்டளையாகவே இன்றும் அந்த ஆலயத்தில் பின்பற்றுகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது.
  • இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

  நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள பழமையான கோவில் அழகம்மன் கோவில். வடிவு என்றால் அழகு. அதனுடன் ஈஸ்வரன் என்ற சொற்கள் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் வடிவு ஈஸ்வரிபுரம் வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுகிறார்கள். பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் சமேதராக காட்சி தருவது சிறப்பு.

  திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் அம்மன் தெற்கு பார்த்து பக்தர்களுக்கு அருள் காட்சி தருகிறார். அம்மன் அருகே வலது புறத்தில் சுந்தரேஸ்வரர் காட்சி தருகிறார். சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும், அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது. இந்த கொடிமரத்தின் இடது புறம் கொடி மர முருகரும், வலது புறமும் கொடி மர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள். கொடி மரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவ கிரகங்கள் காட்சி அளிக்கிறது.

  கொடிமரத்தை தரிசிப்பவர்கள் நவக்கிரகங்கள் மற்றும் முருகர், விநாயகரை தரிசித்து விட்டு சன்னதிக்குள் நுழையலாம். அதன் பிறகு அழகம்மன், சுந்தரேஸ்வரரின் அருள் காட்சியை தரிசிக்கலாம்.

  இந்த கோவிலில் சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், நாகராஜர், சாஸ்தா, காசி விஸ்வநாதர், வள்ளி -தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சந்திரன், ஸ்ரீதேவி- பூதேவியுடன் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

  இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை, 6.00 மணிக்கு அபிஷேகம், காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு தீபாராதனை, 7.45 மணிக்கு ஸ்ரீபலி, 8.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அழகம்மன் கோவிலில் ஆடி மாதம், ஆடி பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே போல ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி பூரம் ஆகிய வையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது தேரோட்டமும், 10-ம் நாளில் அம்மனுக்கு ஆராட்டும் நடைபெறும். ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், கந்தசஷ்டி விழா ஆகியவை நடைபெறுகிறது.

  கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கள் கிழமை தோறும் கடை பிடிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. அதே போல சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

  மார்கழி மாதம் நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவும், ஆனி மாதம் நடராஜருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அதே போல வருஷாபிஷேகம் மற்றும் புனர்பூசமும் சிறப்புடன் நடைபெறுகிறது. அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 14-6-1991-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. மேலும் 3 நிலைகளுடன் தெற்கு கோபுரமும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் அழகிய தெப்பக்குளமும் அமைந்துள்ளது. இந்த தெப்ப குளத்தின் கரையில் தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும்.

  அழகம்மன் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தோஷம், தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். சுவாமி, அம்மன் தனி சன்னதியில் இங்கு காட்சியளிப்பதால் இங்கு வழிபாடு செய்யும் பெண் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் விரைவில் திருமணம் நடைபெறும். தனித்தனி சன்னதியில் நவக்கிரங்கள் இருப்பதால் நவக்கிரக தோஷமும் நிவர்த்தியாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது
  • சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

  சிவகிரி:

  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது. இது தொடர்பாக சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்தரப்பு மேல்முறையீடு காலமும் முடிவுற்ற நிலையில் மேற்படி வழக்கு நடந்து வந்த இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில், தென்காசி நிலம் எடுப்பு தாசில்தார், செயல் அலுவலர்கள் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முருகன், கடையம் வில்வநாதன் சுவாமி கோவில் அசோக்குமார், வி.கே.புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் முருகன், கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணசுவாமி கோவில் கார்த்திக் லட்சுமி, ஆய்வாளர்கள் தென்காசி சரவணகுமார், ஆலங்குளம் சேதுராமன், சிவகிரி ஆர்.கே.நாச்சியார் கட்டளை நிர்வாக அலுவலர் ஜெகநாதன், கணக்கர் குமார், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், வி.ஏ.ஓ. அன்புச்செல்வி, தலையாரி முத்துசாமி, சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிவகிரி அளவையாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
  • கோயிலுக்கு கீழே அனுமன் பெயரில் தீர்த்தம் உள்ளது.

  ஆஞ்சநேயருக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும் திண்டுக்கல்லில் இருக்கும் "ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர்" கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அக்கோயிலின் மேலும் பல வரலாற்று சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான ஆஞ்சநேயர் அபயவரத ஆஞ்சநேயர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தலவிருட்சமாக பலா மரம் இருக்கிறது.

  முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.

  திருக்கோயில் சிறப்புக்கள்

  திண்டுக்கல்லில் இருக்கும் மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக இந்த ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. கோயிலுக்கு கீழே அனுமன் பெயரில் தீர்த்தம் உள்ளது. ராமாவதாரத்தின் போது பெருமாள் ஆகிய ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது.

  கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.

  அனுமன் ஜெயந்தி தினத்தன்று கோயிலின் அனுமன் சன்னதியின் முன் மண்டபம் பூக்கள், பழங்கள் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர்.

  அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. தலவிருட்சமான பலா மரத்தின் கீழ் ராமலிங்க சுவாமி காட்சி தருகிறார். பௌர்ணமி மற்றும் பிரதோஷ வேளைகளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இவருக்கு பின்புறம் வேணுகோபால் சந்நிதி இருக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

  ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக் கரையில் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்கின்றனர். எத்தகைய செயல்களையும் தொடங்கும் முன்பு இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு, அவற்றை தொடங்கினால் அவற்றில் வெற்றி பெற்று மேலான நன்மைகளை பெறலாம் என்பது இங்கு வந்து வழிபட்டு பலனடைந்த பக்தர்களின் அனுபவமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வடைமாலை சாற்றி வெண்ணை காப்பு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

  கோயில் நடை திறப்பு

  காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது. வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையிலும் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

  அமைவிடம்

  அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது.

  கோயில் முகவரி

  அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

  திண்டுக்கல்

  திண்டுக்கல் மாவட்டம்

  தொலைபேசி எண் 9976790768

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
  • அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

  செங்கோட்டை:

  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

  இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார்.மேலும் வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு, உள்ளிட்ட சிவபிள்ளையார் செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநா யகர், வீரகேரள விநாயகர் அனைத்து கிராமங்களிலுள்ள விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பால விநாயகர், விநாயகர் கோவில்களில் ஹோமம், யாகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

  அந்தியூர்:

  அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு புதியதாக திருப்பணிகள் நடைபெற்று கும்பா பிஷேகம் நடைபெற்றது.

  இதனைத்தொடர்ந்து 12-ம் ஆண்டு நிறைவ டைந்ததை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன், ஆனந்த விநாயகர் கோவில் புனராவர்த்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் ராமேஸ்வரம் பவானி கூடுதுறை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித நீர் ஆகியவைகளை அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டது.

  இதனைத்தொடர்ந்து அனைத்து வேலைகளும் நன்மையாக நடைபெற வேண்டி ஆனந்த விநாயகர் யாகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் கால யாக பூஜைகள், துவார பூஜை பலவித திரவியங்கள், கனிவகைகள் யாக பூஜைகள் நடைபெற்றது.

  பின்னர் நேற்று காலை கும்பாபிஷேகம் நடை–பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

  சென்னிமலை:

  ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெரு மானை தரிசனம் செய்து வருகிறார்கள்.

  முகூர்த்த நேரத்தில் ஏராளமான ஜோடிகளுக்கு மலை மீதுள்ள சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் உபயதாரர் நிதி மூலம் ரூ.93 லட்சம் மதிப்பில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் கோவில் நிதி மூலம் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டிடம் கட்ட கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

  இந்த நிலையில் கோவிலில் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணி இன்று காலை பூமி பூஜையுடன் தொடங்கியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
  • இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

  பவானி:

  பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை வேதகிரி மலை அடிவார பகுதியில் உள்ள ஜீவா நகர் பால தண்டாயுதபாணி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

  முன்னதாக கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது. 10-ந் தேதி மகா கணபதி ஓமம் நடைபெற்றது. பின்னர் கூடுதுறையில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவில் வந்து அடைந்தனர்.

  தொடர்ந்து முதல் கால யாக பூஜை மற்றும் நான்கு கால யாக பூஜை வேள்வி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மேல் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

  இந்த கும்பாபிஷேக விழாவில் பவானி, ஊராட்சிகோட்டை, குருப்ப நாயக்கன் பாளையம், தொட்டி பாளையம், சேர்வராயன் பாளையம், காடையம்பட்டி உள்பட பல்வேறு கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

  இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print