என் மலர்

  நீங்கள் தேடியது "teenager"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்துவைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). திருமணம் ஆகாதவர். மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிற எப்படி உனக்கு திருமணம் செய்வது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் கோபித்துக் கொண்டு கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.

  இதனை அறிந்த உறவினர்கள் மணிகண்டனை மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் மதுரையில் விஷம் குடித்து இறந்தார்.
  • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மதுரை

  திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளை பாண்டி மகன் முத்துவேல் (வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீெரன மாயமானார்.

  இதுபற்றி அவரது தாயார் சாந்தி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை தேடி வந்தனர்.

  இந்த நிலையில் மதுரை பாண்டி கோவில் நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அவரிடம் விசாரித்த போது, திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் அவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து அவரது தாய் சாந்தி திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்தார். இந்த நிலையில் முத்துவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இதுதொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கஞ்சா விற்ற வாலிபர் கைதானார்.
  • ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் அருேக கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலையம் அருகில் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை கஞ்சா விற்றது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி பொன்மலையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கஞ்சா விற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

  திருச்சி :

  திருச்சி பொன்மலை புதிய டீசல் காலனி பகுதியை சேர்ந்தவர் சார்லி நெவில் (வயது31). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் பொன்மலைப்பட்டி பஜார் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே நடந்து சென்ற போது அங்கு வந்த பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற மிட்டாய் மணி(வயது22),பொன்மலை ராஜிவ்காந்திநகர் பகுதியில் சேர்ந்த பிரசாந்த்(25) ஆகிய இருவரும் சார்லியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்

  இது குறித்து சார்லி பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.

  திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைaடுத்து எடமலைப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த மூர்த்தி(வயது42) கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  அதே போன்று மேல சிந்தாமணி பகுதியில் கஞ்சா விற்ற ஜாகிர் உசேன் (வயது45) என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். எடமலைப்பட்டி புதூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரகுமான்(வயது45) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.
  • கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.

   சூலூர்:

  சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.

  சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் மாயமானது. இதுபற்றி அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடு போன அவரது மோட்டார்சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. வாலிபர் ஒருவர் முருகனிடம் வந்து தனது மோட்டார்சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்‌ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டார்.

  இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். தனது மோட்டார்சைக்கிளையே திருடி வந்து விட்டு தன்னிடமே அதனை ரிப்பேர் பார்க்க உதவி கேட்கிறானே என்று எண்ணிய அவர் வாலிபரை மடக்கி பிடித்தார்.

  2 பேரும் தகராறில் ஈடுபடுவதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

  முருகன் தனது மோட்டார்சைக்கிள் திருட்டு போனதையும், அதனை திருடிச் சென்றவன் சிக்கிக் கொண்ட விவரத்தையும் தெரிவித்தார்.

  உடனே பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.

  பின்னர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30), தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பாலசுப்பிரமணியன் மீது பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கப்பலூர் சுங்கச்சாவடியில் காரை திருப்பி தராததால் ஒரு வாலிபர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அரவிந்த்குமார் (வயது30). இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

  இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்க கட்டணம் கட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால் அதனை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்பது வழக்கம். மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு உள்ளது. இருப்பினும் அடிக்கடி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் அரவிந்தன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டதால், காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் நேற்று இரவு தனது காரை எடுக்க சென்றார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம். அங்கு சென்று பெற்று கொள்ளுங்கள் என்று கூறி காரை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் சுங்கசாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இச்சம்பவம் குறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆட்டோ மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
  • மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

  முதுகுளத்தூர்

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருேக உள்ள கீழகன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன் (வயது 27). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் எலக்ட்ரீசியன் படித்துள்ளார்.

  மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது பணியில் இல்லை. கீழகன்னிசேரியில் இருந்து மதிவாணன் இரவில் பைக்கில் வந்தபோது ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் முதுகுளத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து முதுகுளத்தார் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஜெய்கணேசை கைது விசாரித்து வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது.
  • வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

  பெரம்பலூர் ;

  சென்னை கோடம்பாக்கம் 2-வது தெரு ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் ஹபீப் (வயது 40). இவர், தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று மதியம் தனது காரில் பள்ளி நண்பர்களான சென்னை பாரிஸ் ஆண்டர்சன் தெருவை சேர்ந்த சிக்கந்தர்(40), கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஹிப் (40) ஆகியோரை அழைத்து கொண்டு புறப்பட்டார்.

  ஹபீப் காரை ஓட்டினார். மாலை 5.30 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தலில் அந்த கார் வந்தது. அப்போது வலது புறமாக சென்ற பஸ் ஒன்று மிக நெருக்கமாக வந்ததால் காரை ஹபீப் இடது பக்கமாக திருப்பினார்.

  அப்போது கார் சாலையை விட்டு இறங்கி, முன்னால் சாலையோரமாக பழுதாக நின்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

  இதில் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஹபீப், சிக்கந்தர், ஷாஹிப் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
  • யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

  அனுப்பர்பாளையம் :

  திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் பிரிவு சாலையோரம் உள்ள சாக்கடையில் இன்று காலை ஒரு நபர் மேல் சட்டை இல்லாமல் உள்ளாடை அணிந்த நிலையில் உள்ளே கிடந்தார்.

  பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளை போலீசார் விசாரணை நடத்தி தச்சநல்லூர் அருகே ஒரு வீட்டில் இருந்த வேல்ராஜை மீட்டனர்.
  • பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  நெல்லை:

  பாளை தியாகராஜநகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் வேல்ராஜ்(வயது 29). தச்சு தொழிலாளி.

  சம்பவத்தன்று தூத்துக்கு டிக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர் தனது தந்தைக்கு போன் செய்து தன்னை சிலர் கடத்தி சென்றுவிட்டதாகவும், ரூ.15 லட்சம் பணம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில் பாளை போலீசார் விசாரணை நடத்தி தச்சநல்லூர் அருகே ஒரு வீட்டில் இருந்த வேல்ராஜை மீட்டனர். அவருடன் இருந்த அவரது நண்பர்களான தச்சநல்லூரை சேர்ந்த வெங்கடேஷ்(38), தாழையூத்தை சேர்ந்த செந்தில்ராஜ்(35) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

  தங்கம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 லட்சத்தை வாங்கி கொண்டு அதனை திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் காலம் தாழ்த்தியது விசாரணையில் தெரியவந்தது.

  மேலும் வெங்கடேஷ், செந்தில்ராஜ் ஆகியோார் செல்போனில் அழைத்த போது, வேல்ராஜ் தானாகவே தச்சநல்லூருக்கு சென்று அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததும், தனது தந்தையிடம் ரூ.15 லட்சம் கேட்டு போன் செய்ததும் தெரியவந்தது.

  அதே நேரத்தில் நண்பர்கள் 2 பேரும் போலீசில் புகார் தெரிவிக்காமல், தாங்களாகவே வேல்ராஜை அழைத்து பணம் கேட்டு வந்ததால் கடத்தியதாக கூறி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  கைதான நண்பர்கள் 2 பேரும் ரூ.1 லட்சம் பணம் தொடர்பாக புகார் அளித்தால், வேல்ராஜ் மீது பதிலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

  கொண்டலாம்பட்டி:

  சேலம் கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பாலாஜி (வயது 19). இவர் நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தில் திண்டுக்கல் பஸ் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் வந்த ஒரு வாலிபர் திடீரென பாலாஜி வைத்திருந்த டிராவல் பேக்கை பறித்துக் கொண்டு ஓடினார்.

  உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வள்ளி பாலம் பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிக் ( 23) என்பது தெரியவந்தது.

  போலீசார், வழக்குப்பதிவு செய்து முகம்மது ஆசிக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்தில் வாலிபர் பலியானார்கள்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

  மதுரை

  ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 68). இவர் மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ெரயில்வே மேம்பால பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ்கோடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழங்காநத்தம் பசும்பொன் நகர் , ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை ஆனைகுளம், வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்தி கேயன் (வயது 18). தண்ணீர் லாரி கிளீனராக இருந்தார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றபோது கட்டப்புலி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  உசிலம்பட்டியை அடுத்த கீழப்பச்சேரியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 26). கொத்தனார். சம்பவத்தன்று மதியம் இவர் தனக்கன்குளம் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  ×