search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager dies"

    • கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
    • திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகன் ஆனந்தகுமார்(வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஸ்வநாதன் வீட்டிற்கு சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ஆனந்தகுமாரின் மனைவி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்."

    • 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை

    ஊட்டியை சேர்ந்தவர் ரோபின்சன் (வயது 37). இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ரோபின்சன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    சம்பவத்தன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டலில் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.

    இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்குவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழிகாட்டி பலகை மீது பஸ் மோதிய விபத்தில் புதுக்கோட்டை வாலிபர் பலியானார்
    • 5 பேர் காயமடைந்தனர்

    புதுக்கோட்டை:

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை வளைவுபகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பங்கரமாக மோதியது.

    இதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது. இதில் வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூரை சேர்ந்த சண்முக சுந்தரம் (வயது 28) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    மேலும் மினிவேன் டிரைவர் உட்பட பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமை போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த சண்முகசுந்தரத்தை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முக சுந்தரத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே பூச்சி கடித்து வாலிபர் பலியானர்.
    • வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்துள்ள மேல் ஐவனூரை சேர்ந்த அருள் வேந்தன் மகன் அருள்தாஸ் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது விஷ பூச்சி கடித்து விட்டது.  வீட்டுக்கு வந்த அவர் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அருள்தாஸ் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மா நிலம், பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்முண்டா (31). இவரது தங்கை கணவர் ராம்சர்தார் (27). இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்து, ராம்சர்தாரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, திலீப்முண்டா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருந்துறை சிப்காட் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட்டில் இருந்து பிஸ்கெட்டுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அப்போது டிைர வர் வினாயக மூர்த்தி (49) லாரியை சிப்காட் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

    அப்போது பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும், பெருந்துறை பாண்டியன் நகரை சேர்ந்த நந்தகுமார் (28), நசியனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), புங்கம்பாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்த மணிவண்ணன் (27) ஆகிய 4 பேர் கோவை செல்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

    காரை நந்தகுமார் ஓட்டினார். அப்போது அந்த கார் பெருந்துறை சிப்காட் அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பினபுரம் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணி வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெய்வேலி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே காட்டு கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம் (வயது 27) இவர் நேற்று இரவு நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நேரு சிலை வழியாக என்எல்சி ஆர்ச் கேட்டுக்கு தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது இவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் நெய்வேலி அரசுகுழி பகுதியைச் சேர்ந்த செந்தமிழர் மகன் பிரசாந்த் (19) வந்தார். இருவரும் எதிர்பாராத நேரத்தில் வேகமாக மோதிக்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சச்சிதானந்தம் பிரசாந்த் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சச்சிதானந்தத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதை பார்த்த அக்கமுக்கு உள்ளவர்கள் அவர்களை மீட்டு என்எல்சி பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சச்சிதானந்தத்தை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    படுகாயம் அடைந்த பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுல் ஹமீர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய மாணவன் ஒருவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    போபால்:

    இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.

    அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பர்கான் குரேஷி தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய பிரதேச மாநிலம் நீமுச் நகருக்கு வந்துள்ளார். பப்ஜி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட பர்கான் குரேஷி, கடந்த 28-ம் தேதி தனியாகச் சென்று செல்போனில் பப்ஜி கேம் விளையாடி உள்ளார். 

    தொடர்ந்து 6 மணி நேரம் தீவிரமாக கேம் விளையாடிய பர்கான் குரேஷி, ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக கத்தியுள்ளர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இதயத்தை துடிக்கச் செய்வதற்காக டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மாணவன் குரேஷி பரிதாபமாக உயிரிழந்தார். பப்ஜி கேமால் தன் மகன் உயிரிழந்ததாக, அவரது தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். 

    செல்போன்களில் போர்க்கள விளையாட்டுகளில் ஈடுபடும் இளைஞர்கள் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். திரிலிங்கான இந்த கேமை மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுவதால் இதயம் பாதிக்கப்படுவதாக இதயநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். குழந்தைகளை அதுபோன்ற கேம்களை விளையாட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

    இதுபற்றி பெற்றோர் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படாததால் விசாரணை நடத்தப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வன்முறை எண்ணத்தை விதைக்கும் இந்த பப்ஜி கேமை, குஜராத்தின் சில நகரங்களில் காவல்துறை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×