என் மலர்

  நீங்கள் தேடியது "teen"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
  • பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

  மேலூர்

  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்ேதாப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் கருகிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.

  இதனை அந்த தென்னந்தோப்பின் காவ லாளியான வெற்றிசெல்வம் என்பவர் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்பநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

  பிணமாக கிடந்த அந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அந்த பெண்ணின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

  அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இளம்பெண் கொன்று எரிக்கப்பட்ட தகவல் அறிந்த மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

  இதைதொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  கொைல செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் யாரேனும் மாயமாகி இருக்கிறார்களா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவருடன் தகராறு செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி. ராஜன் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது30). இவரது மனைவி அம்சவள்ளி (26). திருமண மாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் மகன் உள்ளார்.

  பால்பாண்டி கோவை யில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் திருமங்கலத்தில் உள்ள பால்பாண்டியின் பெற்றோர் வீட்டிற்கு வந்த னர். பின்னர் மனைவியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு பால்பாண்டி மட்டும் கோவைக்கு சென்று விட்டார்.

  இந்தநிலையில் சம்பவ த்தன்று சமயநல்லூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சி யில் பால்பாண்டி தனது மனைவியுன் கலந்து கொண்டார். அங்கு பால்பாண்டி, அம்சவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது.

  அப்போது பால்பாண்டி மனைவியை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அம்சவள்ளி பாதியிலேயே அங்கிருந்து சென்றுவிட்டார். திருமங்கலம் வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சித்தோடு:

  ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

  இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

  இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

  அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தது குறித்து மின்வாரிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தெர்மல்நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25)க்கும் இடையே காதல் இருந்து வந்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

  இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை மணிமேகலை வற்புறுத்தினார். அதற்கு மணிகண்டன் மறுத்தார். இதையடுத்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  ×