search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea farmers"

    தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகம் முன்பு தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்ககோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தேயிலை வாரிய இயக்குநர் பால்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற 15-ந் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்கு ழுவினர் கலைந்து சென்றனர்.

    பின்னர் தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு தெரிகிறார்கள். தேர்தல் முடிந்துவிட்டால் இந்த நாட்டின் அ‌‌‌டிமைகளாகி ஆகிவிடுகிறார்கள்.

    நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கு லாபகரமான விலையை கொடுக்க அரசு மறுக்கிறது. பசுந்தேயிலைக்கு விலையாக ரூ.50 கொடுக்கலாம் என மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூறினார். இதனால் கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்ததுடன் ஊட்டி தேயிலை என்ற பெயரில் விற்பனை செய்து வந்தார்கள்.

    தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை அரசு ரத்து செய்ய வேண்டும், படுகர் இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழியும் விளிம்பில் உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×