search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunaina"

    பூவரசம் பீபீ படத்தை அடுத்து ஹலீதா ஷமீம் இயக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்திற்காக சமுத்திரகனியுடன் சுனைனா இணைந்திருக்கிறார். #Sillukaruppati
    திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீபீ’ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் 'சில்லு கருப்பட்டி' திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது. சமுத்திரகனி - சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் புரடோக்‌ஷன் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார்.

    தனது முதல் படமான 'பூவரசம்பூ பீபீ' முலம் திரை உலகினர் கவனத்தை மட்டுமின்றி, ரசிகர்கள் கவனத்தையும் பெருமளவு கவர்ந்த இயக்குனர் ஹலீதா ஷமீம், சில்லு கருப்பட்டி பற்றி கூறும்போது, ‘இந்தப் படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் உள்ளன. அதிலொரு கதையில் தான் சமுத்திரக்கனி - சுனைனா ஜோடி ஒரு நடுத்தர வயது தம்பதியராக நடித்து உள்ளனர். 

    நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு சராசரி தம்புதியனரின் வாழ்வியல் முறையை பதிவு செய்யும் அத்தியாயம் இவர்களுடையது. இவர்களுடன் ஓகே கண்மணி படத்தின் மூலம் பிரபலமான லீலா சாம்சன் ஒரு கதையிலும், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழேணியின் உச்சத்தில் இருக்கும் சாரா அர்ஜுன் ஒரு கதையில் நடிக்கிறார். 

    நிவேதிதா சதிஷ் -மணிகண்டன் ஆகியோர் ஒரு கதையிலும் நடித்து உள்ளனர். இவர்களுடன் க்ராவ் மகா ஸ்ரீராம், ராகுல், ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி யஙனமூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது தனித்திறமைகளை தங்களுக்கு அளிக்கப்பட்ட பகுதிகளில் திறம்பட வெளிப்படுத்தி உள்ளனர். பிரதீப் குமார் இசை அமைக்கிறார்’ என்றார். 
    `காதலில் விழுந்தேன்', `மாசிலாமணி' படங்களில் இணைந்து நடித்த நகுல் - சுனைனா ஜோடி 9 வருடங்களுக்கு பிறகு `எரியும் கண்ணாடி' என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். #EriyumKannadi #Nakul #Sunaina
    நகுல் - சுனைனா இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள், புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

    `எரியும் கண்ணாடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சச்சின் தேவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.



    விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. முருகானந்தம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரியாஸ் முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    நகுல் நடிப்பில் அடுத்ததாக `செய்' என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. #EriyumKannadi #Nakul #Sunaina

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் உருவாகி இருக்கும் `காளி' படத்தை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Kaali #VijayAntony
    விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் காளி. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 

    கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி 4 வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், மதுசூதன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம்.நாதள் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Kaali #VijayAntony

    கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி - அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் `காளி' படத்தின் விமர்சனம். #Kaali #KaaliReview #VijayAntony
    அமெரிக்காவில் மருத்துவரான விஜய் ஆண்டனி, அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது. 

    மருத்துவத்தை சேவையாக செய்ய வேண்டும் என்ற குணமுடைய விஜய் ஆண்டனி, அதையே தனது மருத்துவமனையில் புணிபுரிபவர்களுக்கும் போதிக்கிறார். இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயழிலந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தனது அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார். 



    ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதையடுத்து தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார். 

    இந்தியா வரும் விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு வருகிறார். அவரது அப்பாவை தேடிச் சென்ற அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இலவச சிகிச்சை செய்வதாகக் கூறி அனைவரது ரத்தத்தையும் எடுத்து, அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். 



    இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. 

    கடைசியில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனியின் கனவு முழுமை அடைந்ததா? விஜய் ஆண்டனி - அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    4 வித்தியாசமான கெட்-அப்களில் வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பு எப்போதும் போல ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 4 பரிணாமங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சித்தா மருத்துவராக அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 

    காமெடி காட்சிகளில் யோகி பாபு ஸ்கோர் செய்திருக்கிறார். மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் கொடுத்த கதாபாத்தை மெருகேற்றியிருக்கின்றனர். 

    ஒரு கனவு, அதில் வருவது யார் என்பதை அறிய இந்தியா வரும் விஜய் ஆண்டனி, அவரது அப்பாவை தேடுகிறார். அதனை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதை, கேட்க வித்தியாசமாக இருந்தாலும், அதனை திரையில் சரியாக காட்டவில்லையோ என்று யோசிக்க வைத்துவிட்டார் கிருத்திகா. 



    4 கெட்-அப்புகளில் விஜய் ஆண்டனி, 4 கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அவரது முதல் படத்தில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லை என்பது வருத்தமே.

    பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி மிரட்டியிருக்கிறார். குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `காளி' ஏமாற்றம். #Kaali #KaaliReview #VijayAntony

    ‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’ படத்தின் கதாநாயகியான சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
    ‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிருத்திகா உதயநிதி பேசும்போது, ‘பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். 

    எனக்கும் தயாரிப்பாளர் பாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம். உயிரை பணய வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 



    4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்’ என்றார். 
    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் காளி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சுனைனா, இன்னமும் படபடப்பாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #Kaali #Sunaina
    சுனைனா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் சுனைனாவுடன் அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசும்போது, ‘தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்’ என்றார்.



    சுனைனா பேசும்போது, ‘ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்’ என்றார். 
    ×