என் மலர்

  நீங்கள் தேடியது "Suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
  • மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடு த்துள்ள ராமபையலூரை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (53). இவரது மனைவி ஷஜாதி (38). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

  ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார். மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.

  கடன் கொடுத்த வர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியவி ல்லையே என அவர் மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். கடனை திருப்பி கொடுத்து விடலாம் என அவரும் கணவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

  இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் ஷஜாதி பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டார். ஷேக்தாவூதும் வியாபாரத்துக்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.

  இந்நிலையில் கொளு ஞ்சானூர் குளத்துமேட்டின் அருகில் ஷேக் தாவூத் மயங்கி கிடப்பதாக அப்பகு தியை சேர்ந்த ஒருவர் போன் மூலமாக ஷஜாதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து ஷேக் தாவூத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷேக் தாவூத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது.

  நெல்லை:

  தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு ரெயில்வே தண்டவாளம் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

  போலீசாரின் விசாரணையில் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வேல் என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 78) என்பது தெரிய வந்தது. அவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

  இதனால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார்.
  • நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார்.

  அவினாசி:

  உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமித் (வயது30) .இவர் அவினாசி அருகே தெக்கலூரில் உள்ள ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சுவேதா செளத்ரி (26) மற்றும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம்இரவு சுவேதா செளத்ரி குழந்தையுடன் தூங்க சென்று விட்டார். இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அமித் அறையை திறந்து பார்த்தபோது சுவேதா செளத்ரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சுவேதா சௌத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

  வெள்ளகோவில்:

  வெள்ளகோவில், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, பாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மனைவி பேச்சியம்மாள் (42) . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பேச்சியம்மாள் வெள்ளகோவில் அருகே உள்ள உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். பேச்சியம்மாள் மன சங்கடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று பேச்சியம்மாள் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து தண்டபாணி பேச்சியம்மாளை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்த போது பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தை இல்லாததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

  செய்யாறு:

  செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி மகன் போஸ் (வயது 30), இவரது மனைவி முனியம்மாள் (28), இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லை.

  இதனால் ஏக்கத்தில் மன வருத்தத்தில் போஸ் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மதுவில் பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று போஸ் இறந்தார்.

  இதுகுறித்து அனக்காவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
  • கடன் தொல்லையால் விபரீத முடிவு

  அரியலூர்

  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 55), விவசாயி. இவர் கடன் தொல்லையால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மணி, மன வேதனையில் இருந்து உள்ளார்.

  இந்த நிலையில் நேற்று மதியம் வெள்ளூர் ரெயில்வே கேட் அருகே வந்த மணி, ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் துண்டு துண்டாகியது.

  இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இரண்டு மகள்கள் உள்ளனர்


  அரியலூர்

  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் மேல தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 42). கூலித்தொழிலாளியான இவருக்கு மேனகா என்ற மனைவியும், ஜெயசூர்யா என்ற மகனும், ஜோதிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தனிமையில் இருந்த முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
  • தற்கொலைக்கு குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் அண்ணன் பி.கே.தேவராஜ் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தேவராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவராஜ் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீலாம்பரி திடீரென சமையல் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
  • பரிசோதித்த டாக்டர்கள் நீலாம்பரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  பணகுடி:

  பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் தென்கரை முத்து. இவருக்கு மனைவி மற்றும் ஆறுமுகம் என்ற மகன், நீலாம்பரி(வயது 21) என்ற மகள் உள்ளனர்.

  தற்கொலை

  நீலாம்பரி வள்ளியூரில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென சமையல் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். அங்கிருந்த மண் எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

  அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நீலாம்பரியை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  விசாரணை

  இதுதொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்று தென்கரைமுத்து தனது குடும்பத்தினருடன் ஆரல்வாய்மொழியில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

  அதன்பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பிய சிறிது நேரத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேலை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • குடிப்பழக்கத்திற்கு இவர் அடிமையானார்


  திருச்சி:

  திருச்சி உறையூர் பாளையம் பஜார் கொச மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 41). தொடர்ந்து வேலை இல்லாததால், விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு இவர் அடிமையானார். இந்நிலையில் மணிவண்ணன் வீட்டு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.
  • தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் பழனி ரோடு நாட்டாண்மை கார தெருவை சேர்ந்தவர் அங்குச்சாமி (வயது 57). இவர் பருத்தி வியாபாரம் செய்து வந்தார்.

  தனலட்சுமி என்ற மனைவியும், ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்ததில் கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

  இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அங்குச்சாமி இன்று தனது வீட்டு மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவ்யா தனது தாய் கண்டித்ததால் மனமுடைந்து விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
  • மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  கள்ளக்குறிச்சி:

  சங்கராபுரம் அருகே திம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காவ்யா (20). இவர் வீட்டில் வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்ததால் மனமுடைந்த காவ்யா விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ×