search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden death"

    • தேவாலயம் முன்பு பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வாலாஜா அடுத்த தென்னிந்தியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 69). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு தென்னிந்தியாலம் பகுதியில் உள்ள சர்ச் முன் மணி தூங்கி யுள்ளார்.

    நேற்று காலை அங்கிருந்தவர்கள் மணியை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோவை,

    கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சுரேசுக்கு பிறந்த நாள். இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிய புத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் குடும்பத்துடன் காரமடை ரங்க நாதர் கோவிலுக்கு சென்றார்.இதனை தொடர்ந்து அனைவரும் காரமடையில் மதிய சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கு சென்று ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் தனது கணவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி தனது கணவரின் உடலை கட்டிபிடித்து கதறி அழுதார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிறந்த நாளன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57). உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57).

    இவர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.

    இதேபோல், சேலம் மாநகர சிறுவர் காப்பக உதவி மையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் முரளிதுரை (வயது 55). இவர் உடல் நலக் குறைவால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இவர்களது உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.

    • நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 47). இவர் சினிமா வினியோகஸ்தராக இருந்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார்.
    • பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சமீப காலமாக அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் பாலாஜி(வயது 47). இவர் சினிமா வினியோகஸ்தராக இருந்து வந்தார். இவரது மனைவி இறந்துவிட்டார்.

    இவரது ஒரே மகள் திருப்பூரில் உள்ள பாலாஜியின் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து 11-ம் வகுப்பு பயின்று வருகிறாள். இதனால் பாலாஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். சமீப காலமாக அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்குள் சென்ற அவர் மாலை நேரம் வரையிலும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பாலாஜி வீட்டில் ரத்த வாந்தி எடுத்து இறந்து கிடந்தார்.

    உடனே அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு யாஷிகா (4) என்ற மகள் உள்ளார்.

    ஜான்சிராணி சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.

    சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமிர்தலிங்கம் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
    • சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 65). இவர் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடுவீரப்பட்டு பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அமிர்தலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அமிர்தலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா.
    • தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு உடையார்பட்டி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலவிக்னேஷ் ராஜா (வயது 30). பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக பாலவிக்னேஷ் ராஜா ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு தனது அறையில் மயங்கி கிடந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால விக்னேஷ் ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் டவுன் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
    • நேற்று மதியம் விமலிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 25). இவரின் தங்கை விமலி (வயது 24).

    இவர் சேலம் டவுன் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான விமலி தனது சகோதரர் ஸ்டாலின் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் விமலிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 மாத கர்ப்பிணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார்.
    • இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கிரில் தேவராஜ் (வயது 48), இவர் நேற்றிரவு திருச்சியில் இருந்து ஓசூருக்கு செல்ல அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ் இன்று அதி காலை 3 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தது. அப்போது அவ ருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போரா டினார். இதனை பார்த்த பஸ் கண்டக்டர் 108 ஆம்பலன்சுக்கு தகவல் தெரி வித்தார். 108 ஆம்புலன்ஸ் குழு வினர் விரைந்து வந்து பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது . பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டு ள்ளது.

    இது குறித்து உறவினர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டுள்ளது. அவர்கள் கத றிய படி சேலம் விரைந்து ள்ள னர். இந்த சம்ப வம் இன்று காலை பஸ் நிலை யத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • சங்கிலி பூதத்தான் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான்.

    திடீர் மயக்கம்

    இவர் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களது மகள் வசந்தி (வயது 4). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தார்.

    இன்று காலை வீட்டில் இருந்த சிறுமி திடீரென தலை சுற்றுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

    பரிதாப சாவு

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    சிறுமியின் திடீர் சாவுக்கான காரணம் குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்துள்ள மொட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (41). இவரது கணவர் சாமி நாதன் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சாமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சாமி நாதன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
    • சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரஹாசநல்லி மன்னப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ். வாழவந்தியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் ரத்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார், ரத்தினத்தின் மகள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .தகவலின் அடிப்படையில் ரத்தினத்தின் மகன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி வெண்ணிலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர்களது தந்தை ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரும் எஸ். வாழவந்தியில் உள்ள கல்குவாரிக்குச் சென்று அங்கு அவரது தந்தையுடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போது ரத்தினம் காலை 9 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளரின் தாயார் சாந்தாமணி சத்தம் போடவே ரத்தினத்துடன் வேலை பார்க்கும் ராஜேந்திரன் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் உதவியுடன் ரத்தினத்தை கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார் அவரது காரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், கூறியுள்ளனர்.

    இதுகுறித்து விஜயகுமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×