search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students induction ceremony"

    • கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் புதிய மாணவர்களை வரவேற்று கல்லூரியின் வரலாறு, பாரம்பரியம், கல்லூரி நிறுவனர்களின் கொடைத்தன்மை மற்றும் கல்லூரியின் நடைமுறைகளை விளக்கினார்.
    • கல்லுரியில் புதிதாக சேர்ந்த 1200 மாணவர்களும், 620 மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    திருச்சி :

    திருச்சி ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), 2022 - 2023ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடந்தது.

    பல்கலை மானிய நல்கைக் குழுவின் அறிவுரைப்படி, கல்லூரியைப் பற்றியும், கற்றலைப்பற்றியும் மாணவர்கள் தங்களை புதிய சூழலில் ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    விழாவில் கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன் புதிய மாணவர்களை வரவேற்று கல்லூரியின் வரலாறு, பாரம்பரியம், கல்லூரி நிருவனர்களின் கொடைத்தன்மை மற்றும் கல்லூரியின் நடைமுறைகளை விளக்கினார்.

    இதில் கல்லூரியின் நூலகம், தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறைகள், வேலை வாய்ப்புகள், போன்ற 26 அம்சங்களும் அடக்கம். கல்லுரியில் புதிதாக சேர்ந்த 1200 மாணவர்களும், 620 மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரி இடையிலான கற்றல் இடர்பாடுகளை களையும் நோக்கோடு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் கணிணி பயிற்சி வகுப்புகள், பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட்டது.

    கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜீமுத்தீன், பொருளாளர் ஜமால் முகமது, துணைச் செயலர் முனைவர் அப்துஸ் சமது, துணை முதல்வர் முகமது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் முனைவர் எம்.முகமது சிஹாபுதீன், இயக்குனர் மற்றும் கௌரவ உறுப்பினர் அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குனர்முகமது பாசில், பெண்கள் விடுதி இயக்குனர் செல்வி ஹாஜிரா பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியின் பொறுப்பாளர் பிரபாகர் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    ×