search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka Navy"

    நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறைபிடித்து சென்றனர். #FishermenArrested
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த 3-ந்தேதி காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்மணி, செல்வமணி, தங்கமணி, மகேந்திரன், வீரப்பன், ரவிக்குமார், ரத்தினம் ஆகிய 7 பேர் ஒரு படகிலும், அரசமணி, மனோகரன், சந்திரன், கதிரேசன், சுபாஷ் ஆகிய 5 பேர் மற்றொரு படகிலும், அருணகிரி, மோகன், சேகர், தமிழ்மணி, முருகன், சாந்தன், ஆகிய 6 பேர் இன்னொரு படகிலும் என மொத்தம் 3 பைபர் படகுகளில் 18 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை எல்லை தாண்டிச்சென்று இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், 18 மீனவர்களையும் சிறை பிடித்தனர். மேலும் அவர்களின் 3 பைபர் படகுகளையும் பறிமுதல் செய்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல் அறிந்த காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரனுடன் சென்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, மீன்வளத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். #FishermenArrested

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #FishermenArrested #SriLankaNavy
    ராமேஸ்வரம்:

    தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

    இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். #FishermenArrested #SriLankaNavy
    இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது, விமான நிலையத்தில் அவரது உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

    திருச்சி:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள இலந்தைகூட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 68). மீனவரான இவர் கடந்த 12-ந்தேதி 4 பேருடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அதே பகுதியில் மேலும் சில படகுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்ததோடு, தங்களது கப்பலால் படகுகளில் மோதினர்.

    மேலும் படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக்கொண்டனர். முன்னதாக இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மோதியதில் முனியசாமியின் படகில் இருந்த அவர் உள்பட 4 பேரும் கடலில் விழுந்தனர்.

    கடலில் தத்தளித்த மற்ற 3 பேரையும் மீட்ட இலங்கை கடற்படையினர் முனியசாமியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே மீட்கப்பட்ட 3 பேரையும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாயமான மீனவர் முனியசாமியை தொடர்ந்து தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அறிந்த முனியசாமியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். முனுசாமியை எப்படியாவது கண்டுபிடித்து தரவேண்டும் என்று அவர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் முனியசாமியின் உடல் நேற்று முன்தினம் அங்குள்ள கடற்கரையில் ஒதுங்கியது. அதனை மீட்ட இலங்கை அரசு பிரேத பரிசோதனை செய்தது. இது பற்றி தமிழக அரசுக்கும் தகவல் தெரிவித்தது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

    அதன்படி இலங்கையில் இருந்து மீனவர் முனியசாமியின் உடல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீனவரின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

    இறந்த மீனவர் முனியசாமிக்கு முனீஸ்வரி, சண்முகபிரியா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முனீஸ்வரி திருமணமாகி தனது கணவருடன் அந்தமானிலும், சண்முகபிரியா தனது கணவர் சண்முகநாதனுடன் உள்ளூரிலும் வசித்து வருகிறார்கள். மனைவி பூங்கோதை ஏற்கனவே இறந்துவிட்டார்.

    கடற்கொள்ளையர் தாக்குதலில் இருந்து மீனவர்களை காக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #GKVasan #Fishermen

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த நாட்களில் 8 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள். இப்படி மீனவர்கள் தாக்கப்படுவதும், லட்சக்கணக்கில் நஷ்டம் அடைவதும், கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.


    இது வரையில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தவறிய அரசாக மத்திய மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன. எனவே மத்திய மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க, மீனவப் பிரதி நிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் - புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவலை நீடித்து இலங்கை கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.#Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

    இதேபோல கடந்த மாதம் 22-ந்தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்துச் சென்றது.

    கைதான தமிழக மீனவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14-ந்தேதி வரை (இன்று) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து 8 பேரும் இன்று மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படாததால் 8 பேரின் காவலையும் வருகிற 26-ந்தேதி வரை நீடித்து நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். #Fishermen #SriLankaNavy

    எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், ஏம்பவயல்  நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு, சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, மீனவர்களை தாக்கியதாகவும்  தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஆனாலும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 27 மீனவர்களை சிறை பிடித்தனர். அவர்களது 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல்  செய்தனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை  ஊர்க்காவல் துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை   மீனவர்களின் பெயர்  விவரம் வருமாறு:-

    வேலாயுதம், பாலா, செங்கமுத்து, விக்கி, முத்துக்காளி,  ராஜு, பாலா, கிருஷ்ணன், லோகமுத்து, முத்துமாரி, அபுதாகீர், ராக்கு, பவித்ரன், குமரன், சந்தனமாரி, பஞ்ச நாதன், ராஜாராம், காளிதாஸ், கருப்பையா, ராமு, கணே சன், நந்தகுமார், ரமேஷ், பரமசிவம், செந்தூர் பாண்டியன் உள்பட 27 பேர்.

    சிறைபிடிக்கப்பட்ட  மீனவர்கள் மீது இலங்கை அரசின் புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை தாங்கினார். தலைவர் பிரதாபன், செயல் தலைவர் சபாபதி, தமிழக மீனவர் காங்கிரஸ் பொறுப்பாளர் அடல்ப் மொராய்ஸ் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சத்தை ஏற்படுத்தி மீனவர்களின் தொழில்களை முடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் சிறை படிக்கப்பட்டு சேதமடைந்த தமிழக மீனவர்களின் படகிற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சபீன், போத்திராஜ், மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜோர்தான், புதுச்சேரி மீனவர் காங்கிரஸ் தலைவர் காங்கேயன், ராமேஸ்வரம் நகர தலைவர் ராஜாமணி, மாவட்ட துணை தலைவர் துல்கிப், மாவட்ட மாண வரணி தலைவர் ராஜீவ்காந்தி, இளைஞரணி தலைவர் பாபா செந்தில், ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தேவதாஸ், சேசு, சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #TamilNadufishermen
    ராமேஷ்வரம்:

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஷ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

    இலங்கை கடற்படை விரட்டியதால், மீன் பிடிக்க முடியாமல் ராமேஷ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    நடுக்கடலில் மேலும் 2 படகுகளுடன் 8 மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TamilNadufishermen
    ×