search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech"

    • இந்திய பிரதமர் யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும்.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் காளை யார்கோவிலில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்ற வில்லை. ஆனால் எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வருடத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மருத்துவர்களாகி வருகின்றனர்.

    உண்மையான சமூக நீதி அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளைக் கைப்பற்றி இந்திய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பா டியாரின் தலைமையில் ஆட்சி அமைய ஒற்றுமை யுடன் பணியாற்ற வேண்டும்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில். தமிழக அரசியல் களத்தை மிகப்பெரிய செல்வந்தர்கள் ஜமீன்தார்களிடமிருந்து மீட்டு சாமானியர்களிடம் கொண்டு சென்றவர் அண்ணா என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய யெலாளர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில் குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை உள்பட கலந்து கொண்டனர்.

    • வங்கி மோசடி, குறுஞ்செய்தி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன் னிலை வகித்தனர். நிகழ்ச்சி யில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை அட்டையை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 3 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப் பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப் பங்கள் அனைத்தும், அரசி டம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, திட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பய னாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்.

    அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப் பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

    இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ- சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

    தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும், ஓ.டி.பி. குறுஞ்செய்தி குறித்தும் பொது மக்களி டையே கேட்கப்பட்டு மோசடி நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவிலேயே முதல் முறையாக உழைக்கும் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
    • அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைைம வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல்கட்டமாக அருப்புக்கோட்டை, கல்குறிச்சியில் மொத்தம் 2050 பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பற்று அட்டைகள் வழங்கப் பட்டுள்ளது.

    மகளிர் இலவச பஸ், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்ப டுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு என்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

    குடும்பத்தை உயர்த்து வதற்கும், குழந்தைகள், கணவர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்காகவும் உழைக்கும் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் முதலாக அங்கீகாரம் கொடுத்தது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விவாத பொருளாகவே நீடிக்கும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் ஜி-20 மாநாடு நடந்து வருகிறது. 2 நாடுகளின் தலைவர்கள் வரவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு குடியரசு தலைவர் அளித்த விருந்திற்கு அழைப்பு வராதது வருத்தமளிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை. விவாத பொருளாகவே நீடிக்கும். இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்ற பாராளு மன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை உள்ளதால் அது கனவாகவே நீடிக்கும்.

    வெவ்வேறு கொள்கை களை கொண்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்திருப்பது மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றுவதற்காகதான். ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எந்த நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

    அரசியலமைப்புச் சட்டத்திலேயே இந்தியா, பாரதம் என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பாரதம் என்று பேச ஆரம்பித்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் பால கிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம், சிவஞான புரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ரங்கபாளையம், லட்சுமி நாராயணபுரம், கம்மாபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளையும் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது வட்டார நிர்வாகிகள் முத்துமாரி, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிறுவனமாக இணைந்து செயல்பட்டால் விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
    • விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:

    நாம் கடையில் சென்று வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளுக்கும், குறிப்பாக உணவு பொருட்களில், அதன் மிக பெரிய முதலீடை செய்பவர்கள், அதை விளைவிக்கக் கூடிய உற்பத்தியாளர்களான விவசாயிகள். ஆனால் அந்த விலையில் விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு கூட செல்வதில்லை.

    பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாபத்தை விவசாயி களுக்கும், உற்பத்தியா ளர்களுக்கும் அதில் இருக்கக்கூடிய தொழிலா ளர்களுக்கும் தர முடியுமா என்று தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து, அதில் முக்கிய முயற்சியாக விவ சாயிகள், உற்பத்தியா ளர்கள் இணைந்து ஒரு நிறுவனமாக செயல்ப டும்போது, லாபத்தை விவசாயிகளும் உற்பத்தி யாளர்களும் பெற முடியும்.

    ஒரு பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். அதனை தனி நபரால் செய்ய முடியாது என்பதால் உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து, செய்வதன் மூலமாக மிகப்பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.உணவு தயாரிப்ப வர்களிடமிருந்து வீட்டிற்கே உணவுகளை பெற்று உண்ணும் பழக்கம் படிப்படி யாக அதிகரித்து வருகிறது. இதில் மிகப்பெரிய சந்தை வாய்ப்புகள் இருக்கின்றன என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து சந்தைப்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் பத்மாவதி, மகளிர் திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ரமேஷ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ராஜாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு
    • சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை துறை சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தனர்.

    சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் அப்துல்ச மது, உடுமலை ராதாகிருஷ் ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் சட்டசபை இணை செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திர பாண்டியன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதா வது:-

    தமிழக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வழங்கிய அறிக்கை விவ ரங்கள் தொடர்பாக மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி வருகிறோம். இதன் ஒருபகுதியாக கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

    அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். இதனை நாங்கள் தமிழக முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து 6 பேருக்கு நத்தம் நிலங்களில் ஆதிதிராவிடர் திட்டத்தின்கீழ் வீட்டுமனை இணையவழி பட்டா, சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ.19.10 லட்சம் மதிப்பில் லோடு ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கடனுதவிகளை வழங்கினார்.

    • சிறந்த கூட்டுறவுத்துறை கட்டமைப்பை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
    • மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விருதுநகரில் கூட்டுறவுத்துறை மூலம் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1612 பயனாளிகளுக்கு ரூ.10.17 கோடி மதிப்பிலான கடன் அனுமதி ஆணைகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் பேசிய தாவது:-

    கூட்டுறவுத்துறை என்பது துறையாக மட்டுமல்லாமல், இது ஒரு இயக்கமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது கூட்டுறவு இயக்கம் ஆகும். கூட்டுறவு துறையினுடைய வெற்றிக்கு பின்னால் அரசின் பங்க ளிப்பு மட்டுமல்ல பொது மக்களுடைய பங்களிப்பும் இருந்து வருகிறது.

    ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கக்கூடியவர்கள் அந்த கிராமத்தை வேளாண்மை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்றால் கூட்டுறவு அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிகச்சிறந்த ஒரு கூட்டுறவு துறை கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.

    இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறையில் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மத்திய கூட்டுறவு வங்கி ஒரு லாபம் ஈட்டக்கூடிய வங்கியாக இருந்து வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக யார்யாரெல்லாம் பயன் பெறுகிறார்கள் என்றால், மகளிர்சுய உதவிக்குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு வணிகர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர், மத்திய கால கடன், முத்ரா கடன், பண்ணை சாரா கடன், சம்பள கடன், வீட்டு வசதி கடன், முதலீட்டுக் கடன், குறு சிறு நடுத்தர தொழில் கடன் என சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் பயன்பெறும் வகையில் இந்த கடன் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த மத்திய கூட்டுறவு வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் வழங்கப் படும் சேவைகளுக்கு இணையாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இணைப் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ராஜலெட்சுமி, மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், பொது மேலாளர் சங்கர நாராயணன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சம்ஹாரம் செய்யும் அவதாரம் எடுத்துள்ளார்.
    • மதுரை மாநாட்டில் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் திரண்டனர். மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று நம் புரட்சித் தலைவர் பாடினார் அதுபோல அவர் கழகத் தொண்டர் களை தனது உயிராக நினைத்தார்.

    அவரது புகழும் நிலைத்து வருகிறது. அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர் களையும் தனது வாரிசாக நினைத்து செயல்பட்டு கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா வழியில் பொதுசெயலாளர் எடப்பாடியார் இப்போது தமிழக மக்களின் முதல்வராக, வருங்கால முதல்வராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

    ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருகிறார். மதுரை மாநாட்டை பார்த்த பிறகு இனி அவருக்கு தூக்கமே வராது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இந்த மண்ணாகும் இந்த மண்ணில் இருந்து வெற்றி வாகை சூடிட எடப்பாடி யாருக்கு வைரவேல் கொடுத்துள்ளோம்.

    அந்த வேல் எதற்காக கொடுத்தோம் என்றால் தி.மு.க. ஆட்சியை சம்ஹாரம் பண்ண போகிற ஆறுச் சாமியாக அவதாரம் எடுத்துள்ளார் நமது எடப்பாடி பழனிசாமி. மதுரை மீனாட்சி பட்டி னத்திற்கு பல பெருமை உண்டு. இது ராசியான மண் கடந்த 1973-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருப்பரங்குன் றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதமானது.

    மகாத்மா காந்தி கூட மதுரை வரும்போது 6 மணி நேரம் தான் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் புரட்சித்தலைவி அம்மா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை சுமார் 10 ஆண்டு காலம் வனவாசம் செல்ல வைத்தது. இன்றைக்கு மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை யாற்றியுள்ளார்.

    எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 2024 தேர்தலில் நமது எடப்பாடியார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர் தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை ஒவ்வொரு தொண்டனும் லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விரைவில் தமிழகத்தில் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு மீனாட்சி பட்டணமே சாட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
    • தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

    மதுரை

    அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.

    பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.

    ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?

    ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.

    விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.

    நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.

    ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க கல்வி பெரும் பங்கு வகிக்கிறது.
    • கல்லூரி விழாவில் அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய மன்னர் மகேஷ்துரை குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    விழா மலரினை வெளி யிட்டு அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியானது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது தொடங்கப்பட்டது. தற்போது 3800 மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கக் கூடிய மாணவர்கள் தற்போது போட்டிகள் நிறைந்த நவீன காலத்தில் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சிறப்பு மிக்கவர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    ஏற்றத்தாழ்வற்ற சமு தாயத்தை உருவாக்குவதற்கு கல்வி என்பது பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிட தொலைநோக்கு பார்வையுடன் முனாள் முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்தி னார். அதே வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    அதில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதம் ரூ.1,000/- ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்ப தற்கு அவர்களுக்கு உறு துணையாக இருந்திடும் வகையில், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங் களை தமிழகத்தில் செயல் படுத்தி மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையான திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    அது மட்டுமன்றி, குடிமைப் பணிகளுக்கு என்று அரசால் அறிவிக்கப் படும் தேர்வுகளில் நமது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துகின்ற வகையில் மாதம் ரூபாய் 7,500/- வழங்கும் திட்டத்தி னையும் அறிவித்துள்ளார்.

    மேலும்,நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்விக்கென ரூ. 40 ஆயிரம் கோடியும், உயர் கல்விக்கென ரூ.7 ஆயிரம் கோடியும் என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கல்விக்கென தமிழ்நாடு முதலமைச்சரால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் துரை ஆனந்த், மதுரை மண்டல இணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்து ராமலிங்கம், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, கல்லூரி துரை அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
    • 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், இலவச பஸ் பயண அட்டை, விலையில்லா மிதிவண்டி என பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏராளமான திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தி வருகி றார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் 10,663 பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 387 தன்னார்வலர்களை கொண்டு முதியோர் கல்வி 498 நபர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் செப்டம்பர் 16, 2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 63 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 227 பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12, 208 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் நீலகிரி 2022-2023-ம் கல்வியாண்டில் 1737 மாணவர்களுக்கு, 2434 மாணவிகளுக்கு என மொத்தம் 4171 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷீலாகேத்ரின், குன்னூர் நகர்மன்ற துணைத்தலைவர் வாசிம்ராஜா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா நேரு, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷண குமார், குன்னூர் வட்டா ட்சியர் கனிகசுந்தரம், குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் மேரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்
    • அறந்தாங்கியில் நடந்த பாதயாத்திரையில் அண்ணாமலை உறுதி

    அறந்தாங்கி, 

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த 28-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை அறந்தாங்கி நகர் பகுதியை வந்தடைந்தார். திருமயத்தில் இருந்து வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள் ரோஜா பூ மாலை அணிவித்து பூர்ண குடும்ப மரியாதை செலுத்தி உற்சாகமாக வரவேற்றனர் அப்போது அவர் செல்வமகள் திட்டத்தின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நகரின் பாஜக மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பெற்றோர்களுக்கு வழங்கி உற்சாகப்படுத்தினார் அப்போது கூட்ட நெரிசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் தள்ளி நிற்குமாறு அவர் கூறினார். பின்பு செக்போஸ்டில் இருந்து தொடங்கிய நடை பயணத்தை நகரின் முக்கிய விதிகளான வாகை மரம் பெரிய கடை வீதி கட்டுமாவடி முக்கம் காமராஜர் சிலை பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடை பயணம் முடிவுற்றது. அறந்தாங்கியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது என்றும், புதுக்கோட்டை மாவட்ட பாராளுமன்ற தொகுதியை கண்டிப்பாக மீட்டெடுக்கப்படும் என்று அவர் பேசினார். முன்னதாக அறந்தாங்கி செக் போஸ்ட் அருகே மாலை 4 மணி முதல் பெண்கள் மற்றும் செல்வமகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது .இதனிடையே அறந்தாங்கி நகர் பகுதிக்குள் வரும் பேருந்துகள் சுமார் 3-மணி நேரத்திற்கு மேலாக மாற்று பாதைகளில் அனுப்பபட்ட நிலையில் நிலையில் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிகிச்சை தவித்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    ×