search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech-Essay"

    • 9வது புத்தகத்திருவிழா வருகிற செப்டம்பர் 16-ந்தேதி முதல் தேஜஸ் மகாலில் நடக்கிறது.
    • 1ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலையில் 9வது புத்தகத்திருவிழா வருகிற செப்டம்பர் 16-ந்தேதி முதல் தேஜஸ் மகாலில் நடக்கிறது. இதனையொட்டி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 4-ந் தேதி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

    ஓவியப்போட்டிகள் 6 பிரிவுகளாக நடக்கிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, 'எனக்கு பிடித்த ஓவியம்' என்ற தலைப்பில் நடக்கிறது. 4 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் பறவை, விலங்கு, 6 முதல் 8 வரை மாணவர்களுக்கு வனம் பரப்பும் இயற்கை காட்சி, 9 முதல் 10க்கு வரலாற்று நிகழ்வுகள் அல்லது நினைவிடங்கள்,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐவகை நிலங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டிகள் நடைபெறுகிறது.

    கட்டுரை போட்டி 6-8 மாணவர்களுக்கு நான் தலைவரானால் உணவும், உயிரும், 9-10 மாணவர்களுக்கு கல்வி மானுட வளர்ச்சி, நில் கவனி செல் , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை என்னும் அழிவுப்பாதை, விண்வெளித்துறையில் இந்தியா, வள்ளுவமும், வாழ்வியலும் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.கல்லூரி மாணவர்களுக்கு வனமும் வளமும், உழவும் உணவும், வளர்ச்சியின் நோக்கமும் தாக்கமும் ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டி நடக்கிறது. அதே போல் 6-8 மாணவர்களுக்கு 2047ல் இந்தியா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது

    9-10 மாணவர்களுக்கு ஊடகத்தின் தாகம் என்ற தலைப்பிலும், 11-12 மாணவர்களுக்கு காகிதம் என்னும் ஆயுதம், கல்லூரி மாணவர்களுக்கு என்னை செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பில் நடக்கிறது. பேச்சுப்போட்டியில் 4 தலைப்புகளில் எந்த பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம்.

    ×