search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special camp"

    • 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது
    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தற்போது சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இப்பணிகள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மேலும் 2-ம் கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு மாற்றாக வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை.
    • முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் நெதர்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் சிறையில் நடத்தப்படுவது போன்று நடத்தப்படுவதாகவும், தங்களை விடுவிக்க கோரியும் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-

    4 பேரின் விபரங்கள், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், அவர்கள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்பட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேலும் நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக (எப்.ஆர்.ஆர். ஓ.) தலைமை இடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த உத்தரவுகளும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் எப்.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுகளின் அடிப்படையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் வெளியே அனுப்ப இயலும்.

    அந்த 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை. முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போன்று அவர்களும் நடத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது.
    • சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்கு சாவடிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை மாவட்ட திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நேரில் ஆய்வு செய்தார். அந்த வாக்குச்சாவடிகளில் புதிதாக சேர்ந்தவர்கள், திருத்தம் மேற்கொண்டவர்கள் மற்றும் நீக்கல் குறித்த தகவ ல்களை கேட்டறிந்தார். முகாமிற்கு மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.

    இதில் தி.மு.க. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளருமான சுரேஷ் மனோகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, ஊராட்சி மன்ற தலைவர் அருள், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி எஸ்தாக் கெனிஸ்டன், சொக்கலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், ஒன்றிய துணை செயலாளர் கென்னடி, நவலடி சரவணகுமார், பொன்னி சக்கி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்பு வனம், இளையான்குடி ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஏராள மான வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பப்படிவங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைத்தனர்.

    மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் இளையான்குடி ஒன்றி யத்தில் அமைக்கப்பட்டி ருந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

    இதில் முன்னாள்

    எம்.எல்.ஏ. சுப மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராகீம், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 18-ந் தேதி, 19-ந் தேதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி ஜூலை மாதம் 1-ந் தேதி, அக்டோபர் மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் சேர்க்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் தொடக்கத்தில் அதாவது ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாத வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நடக்கும் நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக படிவம் 8-ஐ விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐ விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுதவிர https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline App என்ற செயல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971110, கட்டணமில்லா தொலைபேசி 1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    தாராபுரம், காங்கயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாசில்தார்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகவும் உள்ளனர். இதுதவிர தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ., அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிக்கு திருப்பூர் சப்-கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரும், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ.வும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 2 ஆயிரத்து 308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
    • வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காதவர்கள் படிவத்தை நிறைவு செய்து வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.

    இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1) தொடா்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடைந்து வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் எண் 6-ஐ அருகிலுள்ள வாக்குச் சாவடியில் பெற்று நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ நிறைவு செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயா், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ நிறைவு செய்தும், இதுவரை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காத வாக்காளா்கள் படிவம் 6 பி-ஐ நிறைவு செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம் என்று தெரிவிககப்பட்டு உள்ளது.

    • ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    • திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள வாக்குச் சாவடி களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணைய அறிவு றுத்தலின்படி, நாளை (27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று முதல் ஒரு மாதத் திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்க உள் ளன. 2024-ம் ஆண்டு ஜன வரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறம்பிய தங்களது பெயரை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கலாம். இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் தாலுகா அலுவல கங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்க லாம்.

    தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலியின் மூல மாகவும் வாக்காளர் பட்டிய லில் சேர்க்க லாம். இதுதவிர, பெயர் நீக்கம், முகவரி மாற் றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி களையும் மேற்கொள்ளலாம்.

    பணிக்கு செல்வோரின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,374 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

    இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

    • 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்
    • பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது

    வேலூர்:

    2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டியலில் பெயர், சேர்ப்பு, நீக்கல் தொடர்பான சுருக்கத் திருத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.

    வேலூர் மாவட்டத்தி ற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந் தேதி வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க வசதியாக, நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

    இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 5 சட்டசபைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகள் அடங்கிய பட்டியல், தேர்தல் ஆணையத்தில் இருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அந்த வாக்காளர் பட்டியல், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் பாது காப்பாக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தொகுதி வாரியாக ஒவ்வொரு பக்கமும் மீண்டும் சரிபார்க்கப்படும்.

    இதில் திருத்தம் இருப்பின், வருகிற 27-ந் தேதி நடக்கும் சுருக்கத்திருத்த பணிகளின்போது திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சரிபார்ப்பு பணிகளுக்கு ஒவ்வொரு தாலுகாவில் இருந்தும் 5 பேர் ஈடுபட உள்ளனர் என்று தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

    • புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இந்த‌ மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் இலவச மருத்துவ முகாம் வெள்ளகோவில் காடையூரான்வலசு பகுதியில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. வெள்ளகோவில் காடையூரான்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் இதய நோய், சர்க்கரை நோய், சித்த மருத்துவம், புற்றுநோய், ரத்த அழுத்தம், ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை போன்ற 20-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமானது பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார்.மேலும் இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் டாக்டர்.காவ்யாஸ்ரீ மற்றும் மருத்துவகுழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.இலவசமாக மருந்து,மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    • முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    காங்கயம்:

    காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் அதற்கு உண்டான மருத்துவம் அளிக்கப்படும். ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை,முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் பழைய குடும்ப அட்டை இவைகளை கண்டிப்பாக எடுத்து வரவும் தெரிவித்தனர்.

    • நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    • முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.

    மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    ×