search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97238"

    கொட்டித் தீர்த்த கனமழையால் பெருங்குடி பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மற்றும் மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    இந்தநிலையில் அரிமளம் ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் பெருங்குடி கண்மாய் உள்ளது. இதன்மூலம் பெருங்குடி, வடக்குப்பட்டி, கூத்தம்பட்டி, சேப்பிளான்பட்டி, பாப்பம்பட்டி, விலாங்காட்டான்பட்டி, ஓட்டுப்பாலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பெருங்குடி கண்மாய் கலிங்கி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தேங்கிய கண்மாய் நீர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் புகுந்து நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.

    இதனால் சுமார் 70 முதல் 100 ஏக்கர் வரை விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து நடவு செய்து இருந்தனர். நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியதால் பயிர்கள் வளர்ந்து இருந்தன. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஆகவே, பெருங்குடி கண்மாய் கலிங்கி மற்றும் வரத்து வாரிகளை சீரமைத்து நீர் செல்லும் வழித்தடங்களின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் குளத்தில் மீன்களை குத்தகைக்கு விடும் பணியை மட்டுமே செய்கின்றனர். ஆனால் குளத்தின் மடை, வரத்து வாய்க்கால் கலிங்கி ஆகியவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேடு பகுதி பாணிக்காடு கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டதை ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள்அயோத்திராஜா பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பொன்-புதுப்பட்டியில் நாகப்ப செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே மலையான் ஊரணி உள்ளது. மழையின் காரணமாக ஊரணியின் சுற்று சுவரின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. அதன் வழியாக பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கனமழையின் காரணமாக ஆலங்குடி பகுதியில் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. மாஞ்சக்குளம், கோவிலூர் பெரியகுளம், ஆலங்குடி பெரியகுளம், கருமணிக்குளம், சூரன்விடுதி ஆற்றுக்குளம் ஆகியவை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில், காலம் கடந்து பெய்த மழையால் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. இனிமேல் நாற்றுப் பாவினால் பயிர் வளர ஒரு மாதம் ஆகும். அதன்பிறகு நடவு வேலை ஆரம்பிக்கும். தண்ணீரை சேமிக்காவிட்டால் கதிர் விடும் சமயத்தில் தண்ணீர் இருக்காது என்றார்.

    பொன்னமராவதி புதுப்பட்டி நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள மலையா ஊரணியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள படித்துறை பகுதியில் மண் சரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்சரிவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் நிரம்பினாலும் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்து வாரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும்.

    கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனாலும் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிக் கொடுக்காததால் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிறையவில்லை. இந்த நிலையில் தான் கொத்தமங்கலம் அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் அன்னதானக்காவிரி கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    வடகாடு பகுதியில் நேற்று முன்தினம் கன மழை பெய்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கன மழை பெய்தது. இதனால் கடைத்தெரு மற்றும் வீடு பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இப்பகுதியில் இதேபோல் கனமழை பெய்தால் இன்னும் நிரம்பாத நிலையில் இருக்கும் குளங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
    டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்று பார்வையிட்டார்.
    சென்னை:

    சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழைவிட்டும் வெள்ளநீர் வடியாத நிலை பல இடங்களில் இருக்கிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று நேரில் பார்வையிடுகிறார்கள் என அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.

    மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் உள்ளது.

    டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் செயல்படவில்லை. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு கடைகளுக்குள்ளும் புகுந்தது.

    இதனால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

     

    மழை நீர்

    மேலும் மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்துள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:
    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, படிப்படியாக அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரையை நெருங்கும்  எனவும், இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இதன் எதிரொலியால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரம் பெய்ய தொடங்கும்.

    இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்ய தொடங்கியது.

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 449.7 மி.மீ. பெய்வது இயல்பான மழை அளவாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இயல்பைவிட 6 சதவீதம் அதிகம் மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல கடந்த 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளிலும் மழை நீடித்தது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்து இருந்தது. சென்னை புறநகரில் உள்ள குடிநீர் ஏரிகளும் 85 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி இருந்தன. இந்தநிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வந்தது.

    நேற்று இரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது. விடிய விடிய இந்த மழை நீடித்தது. இன்று காலையிலும் 10 மணி வரை மழை பெய்து கொண்டே வந்தது. இந்த மழை 3 மணி நேரத்திற்கு சென்னையில் நீடிக்கும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

     

    வீடுகளுக்குள் தண்ணீர்

    10 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேளச்சேரி உள்பட சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

    சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் சென்னையில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக திணற நேரிட்டது.

    வேளச்சேரி, வடபழனி, கோடம்பாக்கம், முகப்பேர், நொளம்பூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி உள்பட பல பகுதிகளில் மழை நீடித்துக் கொண்டே இருந்தததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஈக்காட்டுதாங்கலில் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிறைந்து இருந்தது. இதனால் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதப்பது போல காட்சி அளித்தது.

    சென்னையில் பல இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் புகுந்த தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற முடியாதபடி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    விருகம்பாக்கம் மார்க்கெட், அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், வளசரவாக்கம், கோயம்பேடு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை தண்ணீரால் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    வடசென்னையிலும் சாலைகளில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலைகள் மிக கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளன. இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் கடும் சவாலாக மாறி உள்ளது.

     

    மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து

    வியாசர்பாடி, மாதவரம், மடிப்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. புறநகர் பகுதிகளில் அய்யப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பாடி போன்ற இடங்களில் வெள்ளப் பாதிப்பு காணப்படுகிறது.

    அம்பத்தூர் அம்மா உணவகத்தில் தண்ணீர் புகுந்தது. அது மூடப்பட்டு உள்ளது. தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அங்கு அம்மா உணவகம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே முக்கிய சாலைகளில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. அவற்றை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் விடிய விடிய பெய்த மழை அந்த பணிகளை முடக்கி உள்ளது.

    அதோடு மட்டுமின்றி மேலும் பல சாலைகளில் பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மழைநீர் கால்வாய் மூடிகள் திறந்து கிடக்கின்றன. எனவே சாலையோரங்களில் நடந்து செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடுமையான மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து விழுந்தன. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி மழை அவர்களை முடக்கி போட்டது.

    சிறிய சந்தைகள், தெருவோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. அவர்கள் வாழ்வாதாரத்தில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்திலும், அம்பத்தூரிலும் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

    எம்.ஜி.ஆர். நகரில் 17 செ.மீட்டரும், அண்ணாபல்கலைக் கழகத்தில் 16 செ.மீட்டரும், புழலில் 15 செ.மீட்டரும், தரமணியில் 13 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகள் 10 செ.மீ.க்கும் மேல் மழை பொழிவை பெற்றன. இதனால் சென்னை நகர் முழுமையாக மழை வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுதான் ஒரே நாளில் 20 செ.மீ. மழைக்கு மேல் பெய்துஇருந்தது. அதன்பிறகு இன்று 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. சென்னையில் தொடர்ந்து அடுத்த வாரம் இறுதிவரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து ஏற்கனவே மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    அந்த மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிக்கு சென்று மழை தண்ணீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை முக்கிய சாலை பகுதிகளில் ராட்சத எந்திரம் மூலம் மழை தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கின. என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு திணறலை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. தொடர் மழை காரணமாக சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்க முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    சென்னையில் விடிய விடிய பெய்த மழைக்கு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தி.நகர் துரைசாமி பாலத்தில் மழை தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால் மேற்கு மாம்பலத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோன்று தென் சென்னை பகுதிகளில் பல இடங்களில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலை பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.

    இதையும் படியுங்கள்... முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதி

    சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி இளைஞர்கள் வடிகால் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் கடற்கரை பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.

    விடியற்காலை 3 மணி முதல் மதியம் 11 மணி வரை இடைவிடாது மழை பெய்து வந்தது. சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டித்தீர்த கனமழையால் வீடுகள், காவல்நிலையங்கள், கால்நடை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இரவில் பல வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் தூங்கமுடியாமல் மழைநீரில் தத்தளித்து பெரும் அவதிப்பட்டனர்.

    மேலும் பழஞ்செட்டித்தெரு, காந்திநகர், கரையூர்தெரு, முத்தம்மாள் தெரு பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் இன்று காலை வரை கண்விழித்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த குழந்தைகள் மற்றும் முதியோர்களை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கியதால் அப்பகுதி இளைஞர்கள் வடிகால் வாய்க்காலில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூய்மைப் பணியாளர்கள் காலனியில் கனமழையால் பணியாளர் ஒருவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

    மேலும் தொடர்மழை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்டுள்ளது. அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்து வருவதால் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பும் நிலை உள்ளது. இதனால் மீன்பிடி தொழிலும் பாதிப்படைந்துள்ளது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வரை பெய்த மழையால் மழைநீர் உப்பளங்களில் அதிக அளவில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் அவதியடைந்துள்ளனர். வெயில் அடித்தால் மட்டுமே தொழிலை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.

    ஒட்டுமொத்தத்தில் அதிராம்பட்டினத்தில் இன்று வரலாறு காணாத அடைமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. 

    தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

    விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யும்.

    நாளை (4-ந்தேதி) டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    5-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

    வானிலை ஆய்வு மையம்

    6-ந்தேதி நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும்.

    7-ந்தேதி தென் மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின

    கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை

    இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், கரூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.

    கனமழை காரணமாக கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை :

    இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    கனமழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில்  தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    தமிழகத்தில் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவிருந்த நிலையில், கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை :

    இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளுக்கு செல்ல ஆர்வமாக இருந்த மாணவர்கள் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததையடுத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.     

    கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    பின்னர் சங்ககிரி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கெங்கவல்லி இலுப்பை தோப்பு பஸ் நிலையத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான இலுப்பை மரம் வேருடன் சாய்ந்தது.

    இதனால் அருகில் இருந்த செல்வமேரி என்பவரின் கூரை வீடு சேதம் அடைந்தது. மரத்தின் அடியில் நிறுத்தியிருந்த கூடமலையை சேர்ந்தவரின் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. மேலும் மரத்தின் அடியில் நின்ற 9 பேரும் மரம் சாய்வதை பார்த்து தப்பியோடியதால் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

    சாலையில் விழுந்த இலுப்பை மரத்தால் கெங்கவல்லி- தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் கடம்பூர் வழியாக டெங்குவில் இருந்து தம்மம்பட்டி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.மேலும் கெங்கவல்லி ஒன்றிய அலுவலக வளாகம் மற்றும் சிவன் கோவில் அருகே இருந்த வேம்பு, புளியமரங்கள் முறிந்து விழுந்தன. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

    ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நரசிங்கபுரம், கல்லாநத்தம், அம்மம்பாளையம் உள்பட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொத்தம்பாடி மற்றும் கல்பகனூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சங்ககிரியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையை தொடர்ந்து அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் பிற்பகல் 3 மணி முதலே வானத்தில் கரு மேகங்கள் திரண்டு காட்சி அளித்தது. இதனால் கன மழை பெய்யும் என்று அவசரம், அவசரமாக வெளியில் சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பினர். ஆனால் லேசான தூறலுடன் மழை நின்று விட்டதால் சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:-

    சங்ககிரி 26.3 மி.மீ, கெங்கவல்லி 18.4, ஆத்தூர் 16.8, மேட்டூர் 4.4, சேலம் 3.6, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 72.5 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×