என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளம்"
- விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.
- அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள். எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 20,000 கொடுக்க முன்வர வேண்டும். மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாலாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றது. இன்றும் அதே போல தொடர்ந்து தண்ணீர் செல்கிறது. வேலூரில் தொடங்கி கல்பாக்கம் வரை பாலாறு கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் குறுக்கே உள்ள அனைத்து பாலங்களையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இன்று 4-வது நாளாக அதிக வெள்ளம் செல்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதை வேடிக்கை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் ஆற்றோரம் திரள்கிறார்கள். பாலங்களின் நடுவில் நின்றும் அதன் அழகை ரசிக்கிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம், குன்னவளம் அடுத்த குப்பத்துப் பாளையத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் பெருக்கெடுத்து வயல்வெளியில் புகுந்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிப்பாடியை சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி அமுலு ஆகிய 2 பேரும் விவசாயப் பணிக்காக குப்பத்துப் பாளையம் கிராமத்திற்கு சென்றனர். பணி முடித்த பிறகு வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாய தோட்டத்தில் இருந்த வீட்டில் தங்கிவிட்டனர். இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குப்பத்து பாளையத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் வெள்ளம் புகுந்தது.
நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்டனர் ஆனால் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டது. இதனால் செய்வதறியாது தவித்தனர். பிறகு வயல்வெளி பகுதியிலிருந்த வீட்டின் மீது ஏறி நின்று கொண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டின் உரிமையாளர் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலைய அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்த 2 பேரையும் கயிறு மற்றும் லைப் ஜாக்கெட் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை பெய்தாலும் பிரச்சினை.
ஆண்டில் 10 நாள் பெய்யும் மழைநீரை முழுவதுமாக சேமித்து வைத்தாலே, சென்னையில் ஒரு ஆண்டுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். வெயில் காலத்திலும் குடிநீருக்கு கவலையின்றி வாழலாம். ஆனால் நம்மிடம் நீரை சேமிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டது.
மழை பொழிந்தால், நீர் தனது இருப்பிடமான ஏரியை நோக்கி செல்கிறது. ஆனால் சென்னையில் ஏரிகள் மாயமாகிவிட்டதால் அந்த நீர் குடியிருப்பை சூழ்ந்து நின்று வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சென்னையின் வளர்ச்சிக்கு பின்னால் மாபெரும் இயற்கை அழிப்பு அரங்கேறி உள்ளது. இயற்கை நமக்கு அளித்த நீர்நிலைகள் எல்லாம் நகரமயமாக்கம் என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்டன.
சென்னையில் கடந்த 1893-ம் ஆண்டில் 60 ஏரிகள் இருந்தன. ஆனால் இப்போது வெறும் 28 ஏரிகள்தான் உள்ளன. 32 ஏரிகளும், அதன் வழித்தடங்களும் இல்லாமல் போய் விட்டன. தற்போது இருக்கும் 28 ஏரிகளுக்கும் நீர் வரும் வழித்தடங்கள் எல்லாம் சுருங்கி போய், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட்டன.
இதனால் மழைநீர் வழிந்தோடுவதில் தடை உள்ளது. கடந்த காலங்களில் வங்கக்கடலில் புயல் உருவானால் அது ஆந்திராவையும், ஒடிசாவையும் தான் பெருமளவில் தாக்கும். ஆனால் இயற்கை மாற்றத்தால் தற்போது சென்னையை தாக்கும் நிகழ்வுகள் தொடங்கி விட்டன. சென்னை மாநகரம் அவ்வப்போது நீரில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்க வேண்டிய மழை, சென்னை மக்களை இப்போது பயமுறுத்தி வருகிறது. இதற்கு தீர்வு காண நீர் நிலைகள் மீது கட்டப்பட்டு இருக்கும் அத்தனை கட்டிடங்களையும் இடித்து மீண்டும் நீர்நிலைகளை உருவாக்க முடியுமா?
அப்படி செய்ய முடிவெடுத்தால் சென்னையில் மூன்றில் ஒரு பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடிக்க வேண்டி வரும். இது கடலில் விழுந்த மழை துளியை தேடுவதற்கு சமம் ஆகும்.
அதற்கு உதாரணமாக ஜப்பான் நாட்டை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் மழையால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரம் மிகுந்த பாதிப்பு அடைந்து வந்தது. அங்குள்ள வீடுகள் எல்லாம் பல நாட்கள் நீரில் மிதக்கும். அதற்கு அவர்கள் கண்ட தீர்வுதான் பூமிக்கடியில் நீர் வெளியேற்றும் வாய்க்கால் திட்டம்.
அமெரிக்காவில் ஒக்லகோமா மாகாணத்தில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. நள்ளிரவில் கடுமையாக காற்று வீசியது. அப்போது மழையும் கொட்டியது.
இதனால் ஒக்லகோமா நகரில் பல வீடுகள் தரைமட்டமாயின. வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. இங்கு சூறாவளி புயல் தாக்கும் என முன் எச்சரிக்கை விடப்பட்டதால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர்.
அங்கு மணிக்கு 136 முதல் 165 மைல் வேகத்தில் சூறாவளி புயல் வீசியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
சூறாவளி புயல் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 29 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த 3-ந்தேதியும் இங்கு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 300 மைல் (480 கி.மீ.) வேகத்தில் காற்று வீசியது. 36 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரை புரண்டோடும் வெள்ள நீரால் மண் அரிப்பு மற்றும் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மழைசார்ந்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி அப்துல் ரோஹ்மான் தெரிவித்தார்.
#Deathtollclimbs #Indonesiafloods #Indonesialandslides
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் மட்டும் 31 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.
இதனால் அந்த நகரம் வெள்ளக்காடாகி இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். #Brazil #HeavyRain
34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கு பகுதியில் ஹேரட் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான ஹேரட் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரை தொடர்ந்து 24 மணிநேரமாக கனமழை பெய்தது.
இதனால் இந்த மாகாணத்தில் சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கியதால் உணவு மற்றும் பணப்பயிர்கள் நாசமடைந்தன. அருகாமையில் உள்ள பாமியான் மாகாணத்திலும் கடந்த இருநாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. உறைப்பனியில் சிக்கிய சுமார் 400 பேரை மீட்பு படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், ஹேரட் மாகாணத்தில் மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், காணாமல்போன சிலரை தேடும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த மாகாணத்தின் அரசு உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர். #Afghanfloods #Heratfloods
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா, விஸ்கொன்சின், மிசூரி, மினசோட்டா மற்றும் தெற்கு டகோட்டாவில் பனிக்காலத்துக்கு பிந்தைய திடீர் புயலால் பேய் மழை கொட்டி தீர்த்தது. அத்துடன் உறைபனியும் உருகியதால் மேற்கூறிய மாகாணங்களில் உள்ள ஆறுகள், சிற்றோடைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சாலைகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தகவல் தொடர்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெப்ராஸ்கா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆறு மற்றும் ஏரிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருப்பதால் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெப்ராஸ்கா, விஸ்கொன்சின் மற்றும் தெற்கு டகோட்டாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்