search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96460"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
    • அஜாக்கிரதையாக இருந்ததால் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தக்கலைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லையிலிருந்து தக்கலை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் வந்தது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இப்புகார் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வாகன சோதனையின் போது போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உவரி அருகே மீன்பெட்டிகளுக்கு அடியில் மறைத்து கடத்த முயன்ற 6 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர், கிளீனரை கைது செய்தனர்.
    திசையன்விளை:

    உவரி கடலோர பாதுகாப்பு குழும சப்- இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் இன்று அதிகாலை கூடுதாழை விலக்கில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மீன்பெட்டிகளுக்கு அடியில் ஏராளமான ரே‌ஷன் அரிசி பைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தலா 50 கிலோ எடை கொண்ட 120 பைகளில் சுமார் 6 டன் எடை கொண்ட ரே‌ஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியையும், ரே‌ஷன்அரிசி பைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், லாரி டிரைவரான குமரி மாவட்டம் பரக்குன்று பகுதியை சேர்ந்த அஜூ (வயது 41), படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கிளீனர் ரவீந்திரன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கூடுதாழையை சேர்நத ஒரு பெண்ணிடம் இருந்து வாங்கிய ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு சென்றதாகவும் அந்த பெண் ரே‌ஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசியை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற ரூ.88 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் திருத்தாலா இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.

    சித்தரஞ்சன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாம்பி பஸ் நிலையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் ஹவாலா பணம் கடத்திவந்த பட்டாம்பியை சேர்ந்த தனஞ்செயன் (வயது 24) என்பதும், கோவை உக்கடத்தில் இருந்து மலப்புரத்துக்கு கடத்திச் செல்வதாகவும் கூறினார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னையில் கல்லூரி மாணவரை கடத்திய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பெண் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை டி.பி.சத்திரம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத்முகமது (19). தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு நவீத்முகமது வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினர்.

    உயிருக்கு பயந்த மாணவர் அந்த கும்பல் கூறியபடி மோட்டார் சைக்கிளில் ஏறினார். அவரை ஏற்றிக்கொண்டு அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.

    இரவு 11 மணி அளவில் ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் வைத்து நவீத்முகமதை சரமாரியாக தாக்கினார்கள்.

    வலி தாங்கமுடியாமல் அவர் கதறினார். ஆனாலும், அவர்கள் விடவில்லை. மாணவரிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ஐபேடு போன்வற்றை பறித்துக்கொண்டு புதரில் தள்ளிவிட்டு சென்றனர்.

    அதிகாலை 4 மணி அளவில் மயக்கம் தெளிந்து நவீத்முகமது முட்புதர் பகுதியில் இருந்து எழுந்து அருகில் இருந்த கடைக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

    கடை ஊழியரிடம் செல்போனை வாங்கி தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். 3 பேர் கொண்ட கும்பலால் தாம் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறியதையடுத்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு அவரது சகோதரர் வந்தார்.

    ரத்த காயங்களுடன் நின்ற நவீத்முகமதை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் சம்பவம் குறித்து டி.பி. சத்திரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து கீழ்பாக்கம் உதவி கமி‌ஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீஸ் படை கடத்தல் கும்பலை பிடிக்க விரைந்தனர்.

    சிகிச்சை பெற்று வரும் நவீத்முகமதுவிடம் விசாரித்துவிட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தப்பட்ட பகுதியில் உளவு கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவரை கடத்தி சென்றது வேளச்சேரியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது நண்பர் பாட்ஷா, சரவணன் என தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை ஒருவரிடம் வாங்கிக் கொண்டு மாணவரை கடத்தி சென்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அமெரிக்காவில் உள்ள இளம்பெண் ஒருவரை நவீத்முகமது காதலித்து வந்ததாகவும் அவர் கடந்த 6-ந்தேதி சென்னை வந்து ஓட்டலில் தங்கி இருந்ததாகவும் அவரை நவீத்முகமது சந்தித்து பேசியபோது இருவரும் தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஓட்டலில் தங்கி இருந்த பெண்ணிடம் திடீரென தகராறு ஏற்பட்டதில் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது நண்பர்கள் மூலம் நவீத்முகமதை கடத்தி தாக்கி இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஓட்டலில் தங்கி உள்ள பெண்ணை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்ணிற்கு நவீத்முகமதுவுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இந்த மோதல் ஏற்பட்டது என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகிறார்கள். பிடிபட்ட பாஸ்கர் வடபழனி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் உறவினர் எனவும் தெரிய வந்துள்ளது.

    வேலூரில் பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபரை கடத்திய மர்மகும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 24). கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அலுவலகத்துக்கு சென்று தனது வழக்கமான பணிகளை கவனத்து கொண்டிருந்தார். மதியம் 2 மணியளவில் இரண்டு பைக்குளில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர்.

    அவர்களில் 2 பேர் வெளியில் நின்றனர். மற்றவர்கள் உள்ளே அமர்ந்திருந்த நந்தகுமாரை கழுத்தை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். அவர் வர மறுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டார். இருப்பினும் விடாமல் நந்தகுமாரை இழுத்துச் சென்ற கும்பல், அவரை பைக்கில் தூக்கி அமரவைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கடத்தி சென்றனர்.

    இதில் நந்தகுமார் அமர்ந்திருந்த பைக்கில் அவருடன் 2 பேரும், இவர்களை பின் தொடர்ந்தவாறு மற்றொரு பைக்கில் உடன் வந்த 3 பேரும் சென்றனர்.

    நந்தகுமார் கடத்தி செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவரது மனைவிக்கு கடத்தல்காரர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அப்போது அவரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் 2 பைக்குகளில் வருவதும் நிதி நிறுவன அதிபரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது பைக்கில் ஏற்றி கடத்திச்செல்வதும் பதிவாகி உள்ளது.

    இதைவைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு நிதிநிறுவன அதிபரையும், கடத்தல் கும்பலையும் தேடி வந்தனர்.

    கடத்தல் கும்பலின் செல்போன் எண்களை வைத்து சைபர் கிரைம் குழுவினர் கண்காணிக்க தொடங்கினர். அதில் பள்ளிகொண்டா, குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் கடத்தல் கும்பல் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனாலும் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதனையடுத்து கும்பலை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவுசெய்தனர்.

    நந்தகுமார் மனைவியை கடத்தல் கும்பலிடம் போனில் பேச செய்தனர். அவர் பேசிய போது கும்பல் ரூ. 3 லட்சம் கொடுத்தால் நந்தகுமாரை விடுவிப்பதாக தெரிவித்தனர். பணத்தை வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஓட்டல் அருகே கொண்டுவருமாறு கூறினர்.

    அங்கு தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர். சிறிது நேரம் கழித்து போனில் தொடர்பு கொண்ட கும்பல் பணத்தை வள்ளலாருக்கு கொண்டுவருமாறு தெரிவித்தனர். பின்னர் ரத்தினகிரி சந்திப்புக்கு வருமாறு தெரிவித்தனர்.

    கடத்தல் கும்பல் போலீசாரிடம் சிக்காமல் அலைக்கழித்தனர்.

    இதனையடுத்து ஆற்காடு, மேல்விஷாரம் நகர பகுதிக்குள் போலீசார் சென்றனர். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வேப்பூர் சந்திப்பு அருகே காரில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே கடத்தல் கும்பல் நந்தகுமாருடன் நின்று கொண்டிருந்தனர்.

    இருட்டில் நின்றதால் அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அவரது டிரைவர் இருவரும் காரை நிறுத்திவிட்டு அவர்கள் அருகே நடந்து சென்றனர்.

    போலீசார் வருவதை கண்ட கும்பல் நந்தகுமாரை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    அவரை மீட்ட போலீசார் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கும்பல் குறித்து விசாரித்தனர்.

    நந்தகுமார் அணிந்திருந்த தங்க செயின், பாக்கெட்டில் இருந்த பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யார் என்பது சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். #Nigeria #OilWorkers #Kidnapped
    மாஸ்கோ:

    நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம் தொடர்பாக அண்டை மாகாணமான பாயேல்சா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக 2 போலீஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இந்த நிலையில் அவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் திடீரென வழிமறித்தனர். அவர்களை கடத்தவும் முயன்றனர். ஆனால் அதை பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் தடுத்தனர். உடனே ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள், 2 போலீஸ் அதிகாரிகளையும் சுட்டுக்கொன்று விட்டு எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்று விட்டனர்.

    அந்த எண்ணெய் நிறுவன ஊழியர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை. இந்த தாக்குதலை ஷெல் எண்ணெய் நிறுவனம் உறுதி செய்துள்ளது.   #Nigeria #OilWorkers #Kidnapped
    மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாய மானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் தங்கம் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு கடல் வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அக்னி தீர்த்தக்கடல் பகுதியில் இருந்து ஓலைக் கூடா கடல் பகுதி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சங்குமலை கடற்கரை பகுதியில் சென்றபோது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக், வேல் முருகன் என தெரியவந்தது. அவர்கள் யாருக்காக கடத்தினார்கள்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    நெல்லையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஜீப் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை பேட்டையை சேர்ந்தவர் சுல்தான் அலாவு தீன்(வயது63). வியாபாரிகள் சங்க நிர்வாகியான இவர் நெல்லை சந்திப்பில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர், தனக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஜீப்பை, தன்னுடைய பயிற்சி பள்ளியின் முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அதனை காணவில்லை. அவருடைய ஜீப்பை யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சுல்தான் அலாவுதீன் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் எஸ்கால், சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜீப்பை மர்மநபர்கள் கள்ளச்சாவி போட்டு திறந்து எடுத்து சென்னைக்கு கடத்தி கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. அந்த ஜீப்பை சென்னையில் ஒரு ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகியிடம் அந்த கும்பல் விற்க முயற்சி செய்தனர்.

    அந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிக்கு, சுல்தான் அலாவுதீனை நன்கு தெரியும் என்பதால் அவர் இதுபற்றி போனில் விவரம் கேட்டார். அப்போது சுல்தான் அலாவுதீன் தனது ஜீப் திருட்டு போயிருந்த தகவலை தெரிவித்தார். தன்னுடைய ஜீப் சென்னையில் இருப்பது குறித்து போலீசிடம் கூறினார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

    அங்கு சுல்தான் அலாவுதீனின் ஜீப்பை கடத்தி வைத்திருந்த சென்னை திருவொற்றியூரை சேர்ந்த குமார்(40), களக்காடு திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட ஜீப்பை போலீசார் மீட்டு நெல்லைக்கு கொண்டு வந்தனர்.

    கைதான இருவருக்கும் வேறு கார் திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
    கோவை:

    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.

    ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.

    இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
    வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக உக்ரைனில் கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்கப்பட்டார். #sushmaswaraj #AnujGoel
    புதுடெல்லி:

    இந்தியாவை சேர்ந்தவர் அனுஷ் கோயல். இவர் உக்ரைன் நாட்டில் தங்கி பணிபுரிகிறார். சமீபத்தில் அங்கு இவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். எனவே அவரது உறவினர்கள் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மோடியின் உதவியுடன் அனுப் கோயலை மீட்போம் என்று நேற்று முன்தினம் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்து இருந்தார். அது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் உள்ள இந்திய தூதருடன் பேசினேன். உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு அவரை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். இத்தகவலை அனுஷ் கோயலின் சகோதரர் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கடத்தப்பட்ட எனது சகோதரர் அனுஷ் கோயல் உக்ரைனில் உள்ள வீட்டுக்கு பத்திரமாக திரும்பிவிட்டார். சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என கூறப்பட்டுள்ளது. #sushmaswaraj #AnujGoel
    ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane
    மாஸ்கோ:

    ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

    போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அவர் சூர்குத் நகரை சேர்ந்தவர் என்பதும், சொத்துகளை சேதம் செய்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது விமானத்தை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RussianFlight #HijackPlane

    ×