search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95081"

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.




    இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.




    இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் 30 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ந்தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம்.

    12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.

    சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

    அதேசமயம், இந்த நடை முறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... போரில் காயம் அடைந்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் நேரில் ஆறுதல்

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    கமல்

    இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெறும் 11-வது மெகா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    தடுப்பூசி செலுத்திய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் கலாநிதி வீராசாமி எம்.பி., ஐடீரிம்ஸ் மூர்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்


    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:-

    மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் இன்று 2 லட்சம் பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 72 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். 2-வது மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    60 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கொரோனா தொற்று நேற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    கடந்த 7 நாட்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் கடந்த 7 நாட்களில் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ரஷ்யாவில் 44 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த 7 நாட்களில் 2.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,739 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உக்ரைன் நாட்டில் 30 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 1.11லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

    சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் முக கவசம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆறுதல் அளிக்கும் விதமாக சென்னையில் உள்ள மால்களில் 51 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர்.

    சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    ஒட்டுமொத்த பொதுமக்களை காப்பதற்காக அரசு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

    கமல்

    இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கும் அவர் திரைக்கதை அமைக்க உள்ளார்.

    கமல்ஹாசன், பா.இரஞ்சித்
    கமல்ஹாசன், பா.இரஞ்சித்

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக பா.இரஞ்சித் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து முடித்த பின் அவர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் கபாலி, காலா என இரண்டு படங்களில் பணியாற்றிய பா.இரஞ்சித், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
    கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க தயாரானார்.

    இதன்பின் இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.

    கமல்ஹாசன்

    இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இதற்காக நடிகர் கமல்ஹாசன் 100 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

    ஜெய் பீம் படக்குழுவினருடன் கமல்ஹாசன்
    ஜெய் பீம் படக்குழுவினருடன் கமல்ஹாசன்

    அந்தவகையில், ஜெய் பீம் படக்குழுவினரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார். 
    ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்ற பெயரில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு வருகிற 7-ந்தேதி 67-வது பிறந்தநாள் ஆகும்.

    இதனை சிறப்பாக கொண்டாட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இதையொட்டி இன்று முதல் நவம்பர் 7-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘நம்மவரின் ஐயமிட்டு உண்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    தொடக்க விழாவையொட்டி இன்று 7 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் வகையில் 9 வாகனங்களை கமல்ஹாசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களை சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

    இதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    திரைத்துறையில் நண்பர்களாக இருந்து வந்த ரஜினியும் கமலும் அரசியலில் நேர் எதிரிகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவரது கொள்கைகளும் மாறுபட்டு இருக்கின்றன.

    பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகள் வாங்கி இருக்கிறார். 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் கடந்து இருக்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகி வருகிறார்.



    ரஜினியும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளார்.

    அரசியல் களத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டால் பெரிய வெற்றி பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. ரஜினியும் கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு ஒரு வார இதழில் பேட்டியளித்துள்ள கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்து இருக்கிறார்.

    மகேந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் தலைவர் கமலுக்கும் ரஜினிக்கும் நல்ல நட்பும் தோழமையும் உண்டு. ஆனால் அரசியலை பொறுத்தவரை அவருடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதை காலமும் தலைவரும்தான் முடிவு செய்யவேண்டும். தவிர, கூட்டணி வி‌ஷயத்தால் எங்கள் தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    ஆகவே, கூட்டணி பற்றி நாங்கள் அவசரப்பட மாட்டோம். தேசியக்கட்சிகள் வி‌ஷயத்திலும் எங்கள் நிலைப்பாடு இதுதான்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முறையான அழைப்பு வராததால், பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக இன்று இரவு பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தலைவர்கள், மாநில முதல்வர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.



    மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர் விழாவுக்கு செல்வதாக பேட்டியில் கூறிவிட்டார்.

    இந்த தேர்தலில் முதன் முறையாக அரசியல்வாதியாக களம் இறங்கிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனையும் அழைத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இந்து தீவிரவாதம்’ குறித்து பேசியதற்காக பா.ஜனதாவினர் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சித்திருந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரதமர் பதவியேற்புக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி வெளியானது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் சம்பிரதாய அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்டிருக்கிறது.

    இதுவரை முறையான அழைப்பு வராததால், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
    மோடிக்கு எதிரான ஓட்டுக்கள் தான் எங்களுக்கு கிடைத்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். கட்சி தொடங்கி 14 மாதத்துக்குள் தேர்தலில் குதித்தார். கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு முழுமை பெறாவிட்டாலும் கூட தேர்தலில் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

    கமலோடு மூன்றாம் இடத்துக்கு போட்டியிட்ட மற்ற கட்சிகளான அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி இரண்டும் ஓரளவு செல்வாக்கும் அனுபவமும் உள்ள கட்சிகள். அப்படி இருந்தும் 11 தொகுதிகளில் கமல் மூன்றாம் இடத்தை பெற்றார். 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். கமல்ஹாசன் அடுத்து வரும் தேர்தல்களுக்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    இதற்காக மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முக்கியமாக வரும் சட்டசபை தேர்தலுக்கு கமல் தீவிரமாக தயாராகி வருகிறார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    ‘எங்கள் கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் அனைவரையும் அந்தந்த தொகுதி மக்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் கட்சியை கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளோம்.

    நாங்கள் தி.மு.க.வின் வாக்குகளை பிரித்ததாக கூறுகிறார்கள். எங்களுக்கு கிடைத்த ஓட்டு மோடிக்கு எதிரான ஓட்டுகள் தான். வாக்காளர்கள் இந்த தேர்தலை பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலாகத் தான் பார்த்தார்கள். எனவே சட்டசபை தேர்தலில் எங்கள் வாக்கு சதவீதம் இன்னும் உயரும்.’

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×