search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94945"

    • மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக புகார்
    • ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சிறுமியுடன் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் மணி (வயது 23) என்பவர் பழகி வந்தார். தொடர்ந்து ஆசைவார்த்தைகள் கூறி பழக்கத்தை அதிகப்படுத்தினார்.

    இதனால் மாணவி அவர் நல்லவர் என நம்பினார். திடீரென மணி, மாணவியிடம் காதலிப்பதாக கூறினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணி, தனது ஆதரவாளர்களுடன் கடத்திச் சென்று மாணவியை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டினார். இதனால் மாணவி மனம் உடைந்தார்.

    அதிர்ச்சியில் உறைந்த மாணவி இது தொடர்பாக கைகாத்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மணியின் தந்தை மற்றும் சித்தப்பா மகன் ஆகியோர் மீண்டும் மிரட்டியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து வாலிபரின் தந்தை அவரது சித்தப்பா மகன் இருவரையும் கைகாத்தான் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து ஆபாசமாக எடுத்த படத்தை வெளியிடுவதாக மிரட்டவே சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

    சிறுமி தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கு காரணமானவர்கள் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். 

    மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ராஜா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தற்போது திருப்பூரில் வேலை இல்லாத காரணத்தால் திவாகர் சொந்த ஊருக்கு திரும்பினார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட திவாகரின் சகோதரி பிரபாவதி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையத்தில் கடன் தொல்லையால் முட்டை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). முட்டை வியாபாரி. இவருடைய மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லோகநாதன் கரூரில் முட்டை வியாபாரம் செய்து வந்தபோது, அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் பள்ளிபாளையம் பகுதியில் வியாபாரம் செய்து வந்தார். இதிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும் தெரிகிறது.

    இந்தநிலையில் அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவருடைய மனைவி ரேவதி கணவர் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை பாம்பாறு அணை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 36). பெயிண்டர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சத்யமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாபநாசம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே மட்டையான்திடல் கீழ தெருவில் வசித்து வந்தவர் தினேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் வயலுக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நச்சலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் அருகே உள்ள தளிஞ்சி மேலப்பட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

    விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் போசம்பட்டி, பட்டையார் களம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மண்ணார் (வயது 55) என தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பென்னாகரம்:

    பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கோதை (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் பூங்கோதை தனது கணவருடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் தீராத மூட்டு வலியால் அவதிப்பட்ட பூங்கோதை நேற்று காலை 6 மணி அளவில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்கோதை இறந்துவிட்டார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டியில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஜானகி (வயது 36). இவரது கணவர் ஏகாம்பரம் ஏற்கனவே இறந்து விட்டார். ஜானகிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ஜானகி, வயலுக்கு தெளிக்கும் புல் மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் ஜானகியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    தர்மபுரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வினோத்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 21). இவர் சம்பவத்தன்று நண்பரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா வழக்குப்பதிவு செய்து ஞானபிரகாஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சாமல்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    சாமல்பட்டி அருகே உள்ள குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75). தொழிலாளி இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி சவுந்தரி (வயது 45). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று சவுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×