என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதானவர்களுக்கு ஏற்ற பாத்ரூம் முறைகள்"

    • வயதானவர்கள் நலனில் சற்று அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
    • வழுக்காத தரைத்தளம் பாத்ரூமில் அமைக்க வேண்டும்.

    இன்றைய நாகரிக காலத்தில் தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வயதானவர்கள் உடல் நலனில் சற்று அதிகமான கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்கள் இருக்கும் இல்லங்களில் எல்லாவித வசதிகளையும் அவர்களுக்கு ஏற்றதாக மாற்றி அமைப்பது சிரமமான விஷயம். இருந்தாலும் பாத்ரூம் உள்ளிட்ட சில இடங்களிலாவது அவர்களுக்கேற்ற மாற்றங்களை செய்து தருவது அவர்களது சுலபமான பழக்கத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.

    நகர்ப்புற வாழ்க்கை பல சவுகரியங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் தரக்கூடியதாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்துவது கடினமாகி விடுகிறது. அவற்றில் முக்கியமாக நமது தனிப்பட்ட ஒவ்வொருவருடைய நலன் பற்றியும் கவனம் செலுத்துவது ஒன்றாகும். முக்கியமாக பாத்ரூம்களில் வயதான பெரியவர்களுக்கென்று அமைத்துக்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு நிபுணர்கள் தரும் டிப்ஸ்களை இங்கே கவனிக்கலாம்.

    * டாய்லெட் சீட் வழக்கமான உயரத்தைவிடவும் சற்றே அதிகமாக இருக்குமாறு செட்டிங் செய்துகொள்வது முக்கியம். அதற்காக விஷேசமான உயர்த்தப்பட்ட குளோசெட்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

    * டாய்லெட் சேப்டி ரயில் என்ற அமைப்பானது உட்காரக்கூடிய டாய்லெட் சீட்டின் இரண்டு புறமும் பொருத்தப்பட்ட குழாய்கள் ஆகும். அவற்றின் பிடித்துக்கொண்டு அமர்வதும், எழுவதும் வயதானவர்களுக்கு சுலபமாக இருக்கும்.

    * போல்டபிள் கம்மோட் சேர் என்ற அமைப்பை குளியலறையில் வைத்துக்கொள்ளலாம். அது தேவைப்பட்ட இடங்களில் நகர்த்தி வைத்து உபயோகிக்கக்கூடிய டாய்லெட் சீட் அமைப்பாகும். அதாவது நகர்த்தக்கூடிய டாய்லெட் இருக்கை என்று சொல்லலாம்.

    * வயதானவர்கள் எளிதாக குளிப்பதற்காக சிறிய அளவில் பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றையும், கால் வழுக்கிவிடாமல் இருப்பதற்காக கெட்டியான பிளாஸ்டிக் மிதியடி அல்லது புளோர் மேட் கீழே விரித்து வைத்திருக்கவேண்டும்.

    * பளீரென்று கண்களை கூசாமல் வெளிச்சம் வருவது போன்று அறையில் லைட் செட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    * ஹேண்ட் கிராப் பார் எனப்படும் பிடித்துக் கொள்ளும் குழாய் அமைப்பை ஓரிரு இடங்களில் பொருத்த வேண்டும். அதை பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அமர்வது அல்லது எழுந்திருப்பது வயதானவர்களுக்கு சுலபமானதாக இருக்கும்.

    * அவசர தேவைகளை வீட்டில் உள்ளோரிடம் தெரிவிக்க தண்ணீரால் பாதிக்காத வாட்டர்புரூப் இண்டர்காம் அல்லது கார்டுலெஸ் தொலைபேசி இணைப்பு ஒன்று குளியலறையில் இருக்கவேண்டும்.

    * மின்சார சாதனங்கள் அனைத்திற்கும் கிரவுண்டு பால்ட் சர்க்கியூட் இன்ட்ரப்டர் எனப்படும் மின்சார பாதுகாப்பு அமைப்பை இணைத்திருக்க வேண்டும். அந்த அமைப்பு, மின்சாரமானது கருவிகள் தவிர்த்து மனிதர்கள் மீதோ அல்லது மற்ற பொருள்களின் மீதோ படும்போது மின் இணைப்பை துண்டித்து விடும்.

    * ஈரப்பதம் காரணமாக வழுக்காத தரைத்தளம் பாத்ரூமில் அமைக்க வேண்டும். அதில் உள்ள புளோர் மேட்கள் இருபுறமும் ஒட்டக்கூடிய ஆன்டி ஸ்கிட் டேப்கள் கொண்டு ஒட்டப்படுவது பாதுகாப்பானது.

    ×