search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை விழா"

    • அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடைபெற்றது
    • ழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டுமையம், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா நடந்தது. விழாவிற்கு கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தலைமை வகித்து தமிழிசை விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதில் குமாரவயலூர் திருஞானசம்பந்த ஓதுவார் குழுவினரின் தேவார, திருவாசக குரலிசை நிகழ்ச்சியும், அய்யாமலை செல்வம் குழுவினரின் நாதசுர தவில் இசை நிகழ்ச்சியும் நடந்தன. மேலும் நெடுமறம் முத்தழகு, ஸ்ரீரங்கம் லெட்சுமிநாராயணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்றார். முடிவில் தேவார ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.




    ×