என் மலர்
நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் சிறப்பு முகாம்"
- காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்திர்க்கும் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடந்தது.
- நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், ஆகிய உட்கோட்ட காவல் சரக்கத்தில் 29 காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு தடுப்பு பிரிவு, உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளன.
இந்த காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக தருமபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்திர்க்கும் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுப் பாதம் தலைமை வகித்தார். முகாமில் நிலப்பிரச்சினை, வழிதடப் பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சினை, முன் விரோத பிரச்சனை, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடியாத மனுக்கள் மீது நீதிமன்றம் செல்ல வழிவகை செய்யப்பட்டது.
இதே போல் பென்னாகரம், பாலக்கோடு, அரூர், ஆகிய இடங்களில் பொதுமக்கள் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சவுமியா தலைமையில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம்,மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில், இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சவுமியா தலைமையில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 23 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பல்லடம் மணிகண்டன், மங்கலம் கோபாலகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசிபாளையம் கணேசன், மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






