என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்பூன்கள் அகற்றம்"
- வாலிபர் மருந்துகள் சாப்பிட்டும் வயிற்று வலி கொஞ்சம் கூட குறையாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- வாலிபர் வயிறு மற்றும் குடல் பகுதியில் ஸ்பூன்களில் தலை இலை, கைபிடிக்கும் பகுதிகள் காணப்பட்டன.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது.
மருந்துகள் சாப்பிட்டும் வயிற்று வலி கொஞ்சம் கூட குறையாததால் அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏராளமான ஸ்பூன்கள் காணப்பட்டன. அந்த ஸ்பூன்களில் தலை, கைபிடிக்கும் பகுதிகள் மட்டுமே காணப்பட்டன.
இதையடுத்து அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இருந்த ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. மொத்தம் 62 ஸ்பூன்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் டாக்டர்களிடம் கூறும்போது, 'எனக்கு பசிக்கும் நேரங்களில் உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இதனால் எனது பசி தீர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது' என்றார்.