search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் நிறுவனம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
    • எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.

    2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.

    நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.

    கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

    2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

    PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.

    எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.

    • ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
    • உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும்.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸ் (For Your Kids) அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஃபார் யுவர் கிட்ஸால் உங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியை கண்காணிக்கவும், மேலும் ஆப்பிள் வாட்ச்சின் மற்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த அனுமதிக்கும்.

    இதன் மூலம் உங்கள் குழந்தைகள், தகவல்கள் மற்றும் போன் அழைப்புகள் மற்றும் நீங்கள் வழக்கமாக ஆப்பிள் வாட்சில் பெறும் அனைத்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அம்சங்களையும் பெறலாம்.

     

    இந்த அம்சம் இப்போது இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் SE மற்றும் ஆப்பிள் வாட்ச் 4 அல்லது அதற்குப் பிறகு வெளியான மாடல்களில் இந்த அம்சம் வேலை செய்யும். வாட்ச் ஓஎஸ் 7 அல்லது அதற்குப் பிறகு வந்த இயங்குதளங்கள் மற்றும் ஐஓஎஸ் 14 அல்லது அதற்குப் பிறகு வெளியான ஓஎஸ் கொண்ட ஐபோன் மாடல்களில் இந்த அம்சம் இயங்கும்.

    தற்போது, ஆப்பிள் இந்த அம்சத்திற்காக ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது, இந்த அம்சம் செயல்பட, நீங்கள் ஆப்பிள் வாட்சுக்கான புதிய ஜியோ இணைப்பைப் பெற வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் அமைக்க, குறைந்தபட்சம் பெற்றோரில் ஒருவராவது ஐபோன் பயனராக இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச் குழந்தைகளுக்கு அவர்களின் சுதந்திரத்தை கொடுக்கும். அதே நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் அனுமதிக்கும்.

    ஆப்பிள் வாட்சிலிருந்து குழந்தைகள் எந்த தொடர்பை இணைக்கிறார்களோ அதனை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். அதே போல் தங்கள் குழந்தைகளின் இருப்பிடத்தை ஐபோனில் இருந்து கண்காணிக்க முடியும்.

    • ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    பாரம்பரியத்தை பின்பற்றி இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்ற 4 வகையான ஐபோன்களை செப்டம்பரில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்சர் எனும் (BRS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் பெசல் அளவை குறைத்து டிஸ்பிளே அளவை அதிகரிக்கும். ப்ரோ மாடல்கள் இன்று வரை எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த பட்டன் புகைப்படம் எடுக்க மற்றும் வீடியோகிராஃபி அனுபவத்தை மேம்படுத்தும்.

    இந்த ஆண்டு ஆப்பிள் தனது என்ட்ரி லெவல் ஐபோன் 16-ஐ மாத்திரை வடிவில் உயர்த்தப்பட்ட மேற்பரப்பில் கேமரா சென்சார்களை செங்குத்தாக பொருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமராக்களுடன் தனித்தனி வளையங்கள் உள்ளன.

    ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் மேம்படுத்தப்பட்ட 48MP அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது லோ-லைட் சூழலிலும் சிறப்பான புகைப்படம், வீடியோக்களை எடுக்க உதவும். இத்துடன் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டு 48MP தரத்தில் ProRAW ரெசல்யூஷனில் பதிவு செய்ய அனுமதிக்கும்.

    கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆப்டிகல் ஜூம் திறன்களை 5x ஆக உயர்த்துகிறது. இது தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
    • தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.

    தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.

    ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.

    குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார்.

    அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.

    இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    • புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
    • டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.

     

    ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.

    ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.

    மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.

    ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

     

    ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.

    அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    • 2018-ல் ஒரு டிரில்லியன், 2020-ல் 2 டிரில்லியன் டாலர் மதிப்பை பெற்றது
    • மைக்ரோசாப்ட் நிறுவனம் 2.5 டிரில்லியனுடன் 2-வது இடத்தில் உள்ளது

    பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது. இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் ஆப்பிள் உயர்ந்திருக்கிறது.

    நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற அளவில் முடிவடைந்ததன் மூலம், அதன் சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட முடிந்தது.

    சற்று மந்தமடைந்திருந்த தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பரந்த எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை நன்றாக பயனடைந்திருக்கிறது. மேலும் ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட போகும் "ஆப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பயன் அடைந்திருப்பதாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    3 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டை தொட்ட முதல் நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டதும், ஆப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஆப்பிள் பங்குதாரர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

    சந்தை மதிப்பில் 6 நிறுவனங்கள் மட்டுமே டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்துள்ளது. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் (2.5 டிரில்லியன்), சவுதி அராம்கோ (2 டிரில்லியன்), அல்பாபெட் (1.5 டிரில்ல்லியன்), அமேசான் (1.3 டிரில்லியன்) மற்றும் என்விடியா (1 டிரில்லியன்) ஆகியவை மற்ற 5 நிறுவனங்கள் ஆகும்.

    • ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • அந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாக இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    அண்மையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.


    இந்நிலையில், தற்போது இதன் டிஸ்ப்ளே பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்ட ஸ்மார்ட்வாட்ச்களை விட இந்த ஸ்மார்வாட்சில் தான் பெரிய அளவு டிஸ்ப்ளே இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாட்ச் 7 சீரிஸை விட வாட்ச் 8 சீரிஸில் உள்ள டிஸ்ப்ளே 7 சதவீதம் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

    • லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும்.
    • ஐபோன் பயனர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் அம்சத்தை இந்த ஆண்டு நடைபெற்ற WWDC நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். ஐபோன் பயனர்களுக்காக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    லாக்டவுன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிகளுக்கு போனில் புதிய பாதுகாப்பு அடுக்கைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. பெகாசஸ் ஊழல் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர். இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.


    தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம். இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது.

    இந்த அம்சம் மீறி ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் என சொல்லப்படுகிறது. அப்படி லாக்டவுன் மோடையும் மீறி ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அவர்களுக்கு 2 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.16 கோடியாம்.

    ×